சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

சென்னை விமான நிலையத்தில் ரூ. 36.8 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

Posted On: 24 AUG 2020 5:38PM by PIB Chennai

ரியாத்தில் இருந்து இண்டிகோ விமானம் 6E-8762 மூலம் சென்னை விமான நிலையத்திற்கு இன்று வந்தடைந்த, ஹைதராபாத்தைச் சேர்ந்த மூன்று பயணிகளையும், விஜயவாடாவைச் சேர்ந்த ஒருவரையும் சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் சோதனையிட்டனர்

அப்போது, அவர்களிடமிருந்து பத்து டோலாஸ் (116 கிராம்) எடையுள்ள, 24 காரட் தங்கக்கட்டிகள் இரண்டு கைப்பற்றப்பட்டன.

     மொத்தம் ரூ.36.8 லட்சம் மதிப்புள்ள ஆறு தங்கக்கட்டிகள் சுங்க சட்டம் 1962-இன் கீழ் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்

                      


(Release ID: 1648366)
Read this release in: English