அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
காற்றின் தரத்தை மதிப்பிட புதிய கண்காணிப்பு முறை
Posted On:
14 AUG 2020 11:34AM by PIB Chennai
காற்றின் தரம் மோசமாக இருப்பதால், உலகெங்கிலும், ஆண்டுதோறும் 7.5 மில்லியன் மரணங்கள் நிகழ்வதாக உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. காற்றின் தரம் தொடர்பான அலகுகளை முறையாக கண்காணித்து மதிப்பீடு செய்யும் புதிய முறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. விசாகப்பட்டினம் காயத்திரி வித்யா பரிஷத் அறிவியல் தொழில்நுட்ப ஆய்வு மையத்தின் இயக்குநர் பேராசிரியர் ராவ் தடவர்த்தி, மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறையின் தூய்மையான காற்றுக்கான ஆராய்ச்சித் திட்டத்தின் உதவியுடன், இப்புதிய முறையை உருவாக்கியுள்ளார். விரிவான தகவல்களுக்கு : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1645699
-----
(Release ID: 1645753)
Visitor Counter : 201