புவி அறிவியல் அமைச்சகம்

அடுத்த 24 மணி நேரத்தில் குஜராத் மாநிலம், கொங்கன் & கோவா மற்றும் மத்திய மகாராஷ்டிரா (மலைப்பகுதிகள்) ஆகியவற்றில் சில இடங்களில் / பரவலாக கனமான முதல் மிக கன மழை வரை பெய்யக்கூடும், அதன் பின்னர் குறையும்

Posted On: 06 AUG 2020 4:00PM by PIB Chennai

06.08.2020 தேதியிட்ட குறிப்பிடத்தக்க வானிலை முன்னறிவிப்புகள்

 

  • பருவநிலை காரணமாக காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஒன்று உருவாகியுள்ளது. அது  இயல்பான நிலைக்கு தெற்கே உள்ளது. அது மேற்கு பகுதியிலிருந்து  ஆகஸ்ட் 8, 2020  முதல் படிப்படியாக வடக்கு நோக்கி நகர்ந்து இமயமலையின் அடிவாரத்தை நோக்கிச் செல்ல வாய்ப்புள்ளது.

 

  • குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இப்போது தென்மேற்கு மத்தியப்பிரதேசத்தில் உள்ளது, அதோடு தொடர்புடைய சூறாவளி சுழற்சியும் குறைந்த வெப்பமண்டல எல்லை வரை நீண்டுள்ளது. இது ஆகஸ்ட் 7, 2020க்குள் இது வெகுவாகக் குறைய வாய்ப்புள்ளது.

 

  1. அடுத்த 24 மணி நேரத்தில் குஜராத் மாநிலம், கொங்கன், கோவா மற்றும் மத்திய மகாராஷ்டிரா (மலைப்பகுதிகள்) ஆகியவற்றில் சில இடங்களில் / பரவலாக கனமானது  முதல் மிக கனமான மழை  பெய்யக்கூடும், அதன் பிறகு படிப்படியாக குறைய தொடங்கும்.; ஆகஸ்ட் 06ஆம் தேதி குஜராத் மாநிலத்தின் சில இடங்களில் கனமான மழை பெய்யக்கூடும்

 

  1. அடுத்த 4-5 நாட்களில் தமிழ்நாடு, கேரளா மற்றும் தெற்கு உட்புற கடலோர கர்நாடகா ஆகிய நாடுகளிலும் சில இடங்களில் கனமானது  முதல் மிக கனமான மழை பெய்யக்கூடும். ஆகஸ்ட் 06ஆம் தேதி கரையோர கர்நாடகாவின் சில இடங்களில் மிக அதிக மழை பெய்யக்கூடும்; ஆகஸ்ட் 06 முதல் 8 வரை தமிழ்நாட்டின் மலைப்பகுதிகளை ஒட்டிய இடங்களிலும்;   ஆகஸ்ட்  06 முதல் 09  தேதிகளில் கேரளா மற்றும் மஹே ஆகிய இடங்களில் பரவலாக கன மழை பெய்யக்கூடும்.

 

*********



(Release ID: 1643978) Visitor Counter : 118


Read this release in: English , Hindi , Manipuri , Punjabi