நிதி அமைச்சகம்

விற்பனைக்கானஏலம்(மறுவெளியீடு)‘5.22% ஜிஎஸ் 2025’


விற்பனைக்கான ஏலம் ( மறுவெளியீடு) ‘6.19% ஜிஎஸ் 2034’

விற்பனைக்கான ஏலம் (மறுவெளியீடு) ‘7.16% ஜிஎஸ் 2050’

Posted On: 31 JUL 2020 5:54PM by PIB Chennai

மத்தியஅரசு பின்வரும் விற்பனை (மறு வெளியீடு) குறித்து அறிவித்துள்ளது:

(i).விலைமதிப்பு அடிப்படையிலான ஏலத்தின் மூலம், அறிவிக்கப்பட்ட தொகையான 12000 கோடி ரூபாய் (நாமினல்) அளவிற்கான - 5.22சதவிகிதம்அரசு பங்குகள் 2025’ விற்பனை

(ii).விலைமதிப்பு அடிப்படையிலான ஏலத்தின் மூலம், அறிவிக்கப்பட்ட தொகையான 11000 கோடி ரூபாய்(நாமினல்) அளவிற்கான -   ‘6.19சதவிகிதம் அரசு பங்குகள் 2034’  விற்பனை

(iii) விலைமதிப்பு அடிப்படையிலான ஏலத்தின் மூலம், அறிவிக்கப்பட்ட தொகையான 7000 கோடி ரூபாய் (நாமினல்) அளவிற்கான -  ‘7.16 சதவிகிதம் அரசு பங்குகள் 2050’  விற்பனை

மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு கடன் பத்திரத்திலும், 2000 கோடி ரூபாய் அளவிற்கா கூடுதல் சந்தாவை ஏற்றுக் கொள்வதற்கான தேர்வு, இந்திய அரசிடம் இருக்கும்

இந்த ஏலம், இந்திய ரிசர்வ் வங்கியின் மும்பை, கோட்டையில்உள்ள மும்பை அலுவலகத்தில் 07 ஆகஸ்டு,2020 வெள்ளிக்கிழமைன்று பல்முனை விலை முறையைப் பயன்படுத்தி நடைபெறும்

அரசு கடன் பத்திரங்களில் போட்டிற்ற ஏலம் எடுக்கும் வசதித் திட்டத்தின் படி, பங்கு விற்பனையின் மொத்த அறிவிக்கப்பட்ட தொகையில் 5%, தகுதியுள்ள தனியாருக்கும், அமைப்புகளுக்கும் ஒதுக்கப்படும்.

போட்டிக்குட்பட்ட மற்றும் போட்டியற்ற என, இரண்டு முறைகள் மூலமாகவும் கேட்கப்படும் ஏலங்கள் இந்திய ரிசர்வ் வங்கியின் கோர் பாங்கிங் சொல்யூஷன் இ-குபேர் (E-KUBER) முறை மூலமாக மின்னணு வடிவத்தில் 07 ஆகஸ்டு,2020அன்று சமர்ப்பிக்கப்பட வேண்டும். போட்டிகளற்ற ஏலம் எடுத்தல் bids காலை பத்தரை மணி முதல் 11 மணி வரையும், போட்டிக்குட்பட்ட ஏலம் எடுத்தல் bids காலை பத்தரை மணி முதல் 11.30 மணி வரையும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

ஏலமுடிவுகள் 07 ஆகஸ்டு, 2020 (வெள்ளிக்கிழமையன்று) அறிவிக்கப்படும். வெற்றிகரமாக ஏலம் எடுத்தவர்கள் 10 ஆகஸ்டு, 2020 (திங்கட்கிழமையன்று) பணம் செலுத்த வேண்டும்.

“வெளியிடப்படும் போது வர்த்தகம் செய்து கொள்ளலாம்” என்ற அளவில், இந்தப் பங்குகள் வர்த்தகம் செய்யத் தகுதியானவையாக இருக்கும். இந்திய ரிசர்வ் வங்கியின், 24 ஜூலை 2018 தேதியிடப்பட்ட சுற்றறிக்கை எண் RBI/2018-19/25 (காலத்திற்குக் காலம் செய்யப்பட்ட திருத்தங்களுடன்) அறிவிக்கப்பட்டபடி, ‘மத்திய அரசு கடன் பத்திரங்களில் வெளியிடப்படும் போது மேற்கொள்ளக்கூடிய பரிமாற்றங்கள்’ என்ற விதிமுறைகளின்படி, இப்பங்குகளை வர்த்தகம் செய்து கொள்ளலாம்.

 

****



(Release ID: 1642738) Visitor Counter : 198