மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
'ஒரே பாரதம் உன்னத பாரதம்’ - பீகார் மற்றும் மிசோரம்' என்ற தலைப்பில் பிராந்திய எல்லை அலுவலகம் (ROB) பாட்னா ஒரு இணைய கருத்தரங்கை ஏற்பாடு செய்தது
Posted On:
31 JUL 2020 7:53PM by PIB Chennai
பிராந்திய எல்லை அலுவலகம், (ROB) பாட்னா 'ஒரே பாரதம் சிறந்த பாரதம் - பீகார் மற்றும் மிசோரம்' என்ற தலைப்பில் ஒரு இணையக் கருத்தரங்கை ஏற்பாடு செய்தது. நிகழ்ச்சிக்கு, பிராந்திய எல்லை அலுவலகம் (ROB) மற்றும் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் இயக்குநர் ஜெனரல், திரு. சைலேஷ் குமார் மால்வியா ஆகியோர் தலைமை வகிக்க இயக்குநர் திரு விஜய் குமார் இணைத் தலைவராக பொறுப்பேற்க, பிரதேச ஆணையர் சரண், திரு. எல்.ராபர்ட் சோங்குது முதன்மை விருந்தினர் பேச்சாளராக இணையக் கருத்தரங்கில் உரையாற்றினார். மற்ற விருந்தினர் பேச்சாளர்கள் மாநில இயக்குநர் நேரு யுவ கேந்திர சங்கதன், குவஹாத்தி திரு. சையத் அலி; முதல்வர், கே.வி., மிசோரம், ஐஸ்வால், மொஹமட். ரஷீத், PRO, மக்கள் தொடர்புத் துறை, மிசோரம், திரு. பிரதாப் சேத்ரி மற்றும் பூர்வோதயாவின் ஆசிரியர் திரு. ரவிசங்கர் ரவி ஆகியோர் இந்த இணையக் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.
பாட்னாவின் பிராந்திய எல்லைப் பணியகம் மற்றும் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் திரு. ஷைலேஷ் குமார் மால்வியா இணையக் கருத்தரங்கத்திற்குத் தலைமை தாங்கினார். அவர் தனது உரையில், இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் படேலின் 140 வது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடியால் ஒரே பாரதம் உன்னத பாரதம் முயற்சி தொடங்கப்பட்டது என்று கூறினார்.
பங்கேற்பாளர்களிடையே உரையாற்றிய திரு சோங்து, ஒரே பாரதம் உன்னத பாரதம் போன்ற பிரச்சாரம் வடகிழக்கு மாநிலங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்று கூறினார். இந்தப் பிரச்சாரத்தின் மூலம், மிசோரம் மக்கள் பீகாரின் கலாச்சாரம் மற்றும் வளமையுடன் தொடர்பு கொள்ளமுடியும், மறுபுறம், பீகார் மக்கள் மிசோரத்தின் கலாச்சாரம், பழங்குடியினர் வாழ்க்கை முறை, உடைகள் போன்றவற்றை அறிந்து கொள்ள முடியும். ஒரே பாரதம் உன்னத பாரதம் கலாச்சாரப் பரிமாற்றத்திற்கான சிறந்த பிரச்சாரம்.
***********
(Release ID: 1642734)
Visitor Counter : 246