நிதி அமைச்சகம்

5.09% அரசு பங்கு (GS) 2022' விற்பனைக்கான ஏலம் (மறு வெளியீடு), 'புதிய 10 ஆண்டு அரசுப் பங்கு, 2030' விற்பனைக்கான ஏலம் (வெளியீடு), 'இந்திய அரசின் (GoI) அனுசரிப்பு பங்கு பத்திரம் 2033' இன் விற்பனைக்கான ஏலம் (மறு வெளியீடு), மற்றும் '7.19% அரசு பங்கு (GS) 2060' இன் விற்பனைக்கான ஏலம் (மறு வெளியீடு)

இடுகை இடப்பட்ட நாள்: 27 JUL 2020 7:47PM by PIB Chennai

இந்திய அரசு விலை அடிப்படையிலான ஏலத்தின் மூலம் ரூ .3,000 கோடி (பெயரளவு) அறிவிக்கப்பட்ட தொகைக்கு (i) ‘5.09 சதவீத அரசு பங்கு, 2022’ விற்பனையை (மறு வெளியீடு) , (ii) விலை அடிப்படையிலான ஏலத்தின் மூலம் அறிவிக்கப்பட்ட தொகையான ரூ .18,000 கோடிக்கு (பெயரளவு) 'புதிய 10 ஆண்டு அரசுப் பங்கு, 2030' (iii) விலை அடிப்படையிலான ஏலத்தின் மூலம் அறிவிக்கப்பட்ட தொகையான ரூ .4,000 கோடிக்கு (பெயரளவு) ‘இந்திய அரசின் அனுசரிப்புப் பங்குப்பத்திரங்கள், 2033’, மற்றும் (iv) விலை அடிப்படையிலான ஏலத்தின் மூலம் 5,000 கோடி ரூபாய் (பெயரளவு) அறிவிக்கப்பட்ட தொகைக்கு ‘7.19 சதவீதம் அரசு பங்கு, 2060’ ஆகியவற்றின் விற்பனையை மறுவெளியீடு செய்வதாக அறிவித்துள்ளது. மேற்கண்ட ஒவ்வொரு பத்திரங்களுக்கும் எதிராக ரூ .2,000 கோடி வரை கூடுதல் சந்தாவைத் தக்க வைத்துக்கொள்ள இந்திய அரசுக்கு விருப்பம் இருக்கும். ஏலங்களை இந்திய ரிசர்வ் வங்கி, மும்பை அலுவலகம், கோட்டை, மும்பை, ஜூலை 31, 2020 அன்று (வெள்ளிக்கிழமை) பல விலை முறைகளைப் (Multiple price) பயன்படுத்தி நடத்தப்படும்.

அரசுப் பத்திரங்களை ஏலம் எடுப்பதில் போட்டியிடாத ஏல வசதிக்கான திட்டத்தின் படி பங்குகள் விற்பனையின் அறிவிக்கப்பட்ட தொகையில் 5 சதவீதம் வரை தகுதியான நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படும்.

ஜூலை 31, 2020 அன்று இந்திய ரிசர்வ் வங்கியின் மைய வங்கித் தீர்வில் (E-Quber) முறையாக ஏலத்திற்கான மற்றும் போட்டி அல்லாத ஏலங்களை மின்னணு வடிவத்தில் சமர்ப்பிக்க வேண்டும். போட்டி இல்லாத ஏலங்களை காலை 10.30 மணி முதல் காலை 11.00 மணிக்குள்ளாக சமர்ப்பிக்க வேண்டும் மற்றும் போட்டி ஏலங்களை காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணிக்குள்ளாகவும் சமர்ப்பிக்க வேண்டும்.

ஏலத்தின் முடிவு ஜூலை 31, 2020 அன்று (வெள்ளிக்கிழமை) அறிவிக்கப்படும் மற்றும் வெற்றிகரமாக ஏலம் எடுத்தவர்கள் ஆகஸ்ட் 03, 2020 (திங்கள்) அன்று அந்தத் தொகையைக் கட்ட வேண்டும்.

 

இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள 'மத்திய அரசு பத்திரப் பரிவர்த்தனைகள் எப்போது வழங்கப்படும்' என்ற வழிகாட்டுதல்களின் படி “ வழங்கப்படும் போது ” வர்த்தகத்திற்கு பங்குகள் தகுதி பெறும். ஜூலை 24, 2018 தேதியிட்ட ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கை எண் RBI/2018-19/25 ன் படி அவ்வப்போது திருத்தப்பட்டது.

***************


(வெளியீட்டு அடையாள எண்: 1641644) வருகையாளர் எண்ணிக்கை : 284
இந்த வெளியீட்டை படிக்க: Punjabi , Manipuri , हिन्दी , English , Urdu