அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

“செயலூக்கமான மருந்து மூலப்பொருட்கள் – தற்போதைய நிலைமை, பிரச்சனைகள், தொழில்நுட்பத் தயார்நிலை மற்றும் சவால்கள்” என்ற அறிக்கையை டிஃபாக் (TIFAC) வெளியிட்டு உள்ளது

Posted On: 15 JUL 2020 6:06PM by PIB Chennai

பொருளாதார ரீதியில் சிக்கனமாகத் தயாரிக்கும் அளவுக்கு நாட்டில் செயலூக்கமான மருந்து மூலப்பொருட்கள் ((APIs) உற்பத்தியை அதிகரிக்கும் தேவை உள்ளதாக டிஃபாக் அறிக்கை கூறுகிறது.  உற்பத்தியில் முன்னுரிமை கொடுக்க வேண்டிய அடையாளம் காணப்பட்ட செயலூக்கமான மருந்து மூலப்பொருட்களின் பட்டியலை இந்த அறிக்கை தருவதோடு அதனால் கிடைக்கும் அனுகூலங்களையும் எடுத்துரைக்கிறது.

செயலூக்கமான மருந்து மூலப்பொருட்கள் - தற்போதைய நிலைமை, பிரச்சனைகள், தொழில்நுட்பத் தயார்நிலை மற்றும் சவால்கள்” என்ற தலைப்பிலான அறிக்கையை அண்மையில் இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் தகவல் முன்னறிவிப்பு மற்றும் மதிப்பீட்டுக் கவுன்சில் டிஃபாக் வெளியிட்டு உள்ளது.

“இந்தியாவில் தயாரியுங்கள் : கோவிட்-19க்கு பிறகான காலம் என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நடவடிக்கைகள் என்ற வெள்ளை அறிக்கையுடன் இதனை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், பூமி அறிவியல் துறைகளுக்கான அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் 10-7-2020 அன்று நடைபெற்ற ஒரு மெய்நிகர் நிகழ்ச்சியில் வெளியிட்டார்.

தொழில்நுட்ப மேம்பாட்டு அம்சத்தை அதிகரித்தல், இயக்க அடிப்படையிலான வேதிப்பொருள் பொறியியல் மேம்பாட்டுக்கான தேவை, மூலக்கூறுகளைத் தடையில்லாமல் ஒருங்கிணைப்பதற்கான நிர்ணயிக்கப்பட்ட இலக்குகள், இந்தியாவில் பொது உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய பெரிய அளவிலான மருந்து உற்பத்தி தொகுப்பிடங்களை உருவாக்குதல், செலவைக் குறைக்கும் விதமாகவும் ஃபுளோரின் சேர்க்கும் முறையிலும் செயல் முறைகளின் படிநிலைகளை குறைப்பதற்கான உயிர்வினையூக்கம் முறையை உருவாக்குவதற்கான தொழில்நுட்ப உள்கட்டமைப்பு அதிக அளவிலும் தொழில்நுட்ப பொருளாதார வகையில் ஏற்புடையதாக இருக்கும் வகையிலும், நொதித்தல் பிரிவில் முதலீட்டுக்கு முன்னுரிமை தருதல், ஆபத்தான வேதிவினைகள், தொடர் வேதிவினை நிகழ்வு, கிரையோஜெனிக் வினைகள் மற்றும் ஊடுசவ்வுத் தொழில்நுட்பம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் இந்த வேதிப்பொருள் பொறியியலின் கீழ் மேற்கொள்ளப்படும்.

*****


(Release ID: 1639077) Visitor Counter : 270


Read this release in: English , Urdu , Hindi , Telugu