புவி அறிவியல் அமைச்சகம்

கொங்கன் பகுதியின் ஒரு சில இடங்களில் அடுத்த 24 மணிநேரத்திற்கு அதி கனமழை எச்சரிக்கை; குஜராத் பிராந்தியத்துக்கு ஜூலை 4 முதல் 6 வரையான காலத்துக்கு அதி கனமழை எச்சரிக்கை

Posted On: 04 JUL 2020 9:11PM by PIB Chennai

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தேசிய வானிலை முன்கணிப்பு மையம்/புதுதில்லியில் உள்ள பிராந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

மேற்கு கடற்கரைப் பகுதிகளில் அரபிக்கடலிலிருந்து வலிமையான ஈரப்பதத்துடன் மேற்கு/தென்மேற்கிலிருந்து வரும் காற்று மற்றும் தெற்கு குஜராத் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் கீழ் வெப்ப மண்டலத்தில் புயல் சுழற்சி ஆகியவை இணைந்துள்ளதால், குஜராத் மாநிலத்தில் அடுத்த 4 முதல் 5 நாட்களில் பரவலாக கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய அதிக வாய்ப்புகள் உள்ளன. இதே போல, கொங்கன் மற்றும் கோவா பகுதியில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கொங்கன் பகுதியில் அடுத்த 24 மணிநேரத்துக்கு ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது; இதேபோல, ஜூலை 4 முதல் 6 வரையான காலத்தில் குஜராத் பிராந்தியத்திலும், சௌராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதியில் அடுத்த 4 நாட்களுக்கும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

வங்கக்கடலின் மேற்கு மத்திய மற்றும் அதனையொட்டிய வடமேற்கில், ஆந்திரப்பிரதேசத்தின் வடக்குக் கடலோரம் மற்றும் ஒடிசாவின் தெற்குக் கடலோரத்தில், கடல் மட்டத்திலிருந்து 7.6 கி.மீ., உயரம் வரை புயல் சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக, கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய இந்திய பகுதிகளில் அடுத்த 4 முதல் 5 நாட்களுக்கு குறிப்பிட்ட சில பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்வதுடன், பரவலாக மழை அல்லது இடிக்கு அதிக வாய்ப்புள்ளது.

சராசரி கடல் மட்டத்தில் உள்ள குறைந்த காற்றழுத்தம், வழக்கமான நிலைக்கு அருகே உள்ளது. இது 24 மணி நேரத்தில், குறிப்பிட்ட பகுதியிலேயே இருக்க அதிக வாய்ப்புள்ளது. அரபிக்கடலிலிருந்து தாழ்வான வெப்பமண்டல அளவில் உள்ள மேற்கு/தென்மேற்கில் வலுவான ஈரப்பத இணைப்பு, வடமேற்கு இந்தியாவில் உள்ள நிலப்பகுதியிலும் நீடிக்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, அடுத்த 4 முதல் 5 நாட்களுக்கு வடமேற்கு இந்திய பகுதிகளில் பரவலான மழையும், குறிப்பிட்ட சில பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

பயங்கர இடி மற்றும் மின்னலுக்கு வாய்ப்பு உள்ள பகுதிகள்: ஜம்மு பிராந்தியம், இமாச்சலப்பிரதேசம், உத்தராகண்ட், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், கிழக்கு ராஜஸ்தான், சத்தீஷ்கர், ஜார்க்கண்ட், பீகார், கடலோர ஆந்திரப்பிரதேசம் மற்றும் ஏனாம், ஒடிசா, கங்கையை ஒட்டிய மேற்குவங்கம் மற்றும் குஜராத் மாநிலங்களில் அடுத்த 12 மணிநேரத்துக்கு மிதமானது முதல் தீவிரமானது வரை இடி மற்றும் மின்னலுக்கு அதிக வாய்ப்பு உள்ளது.

 

*****


(Release ID: 1636665) Visitor Counter : 149


Read this release in: English , Urdu , Hindi , Manipuri