பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

பழங்குடியினர் உற்பத்திப் பொருள்களை விற்க அரசின் மின் சந்தை, இணையதளம்: அமைச்சர் அர்ஜுன் முண்டா தொடங்கினார்.

Posted On: 27 JUN 2020 7:13PM by PIB Chennai

எப்போதும் இல்லாத வகையில் நாட்டில் கோவிட்-19 தொற்று ஏற்பட்டு சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரையும் பெரிதும் பாதித்துள்ளது. ஏழைகள், விளிம்பு நிலையில் இருப்போரின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தக் கடுமையான காலகட்டத்தில் பழங்குடியினரின் நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. இந்தப் பொருளாதாரச் சுமையைக் குறைப்பதற்காக மத்திய பழங்குடியினர் நல அமைச்சகமும் இந்தியப் பழங்குடியினக் கூட்டுறவு சந்தை மேம்பாட்டுக் கூட்டமைப்பும் (The Tribal Cooperative Marketing Development Federation of India - TRIFED) பழங்குடியினரின் பொருளாதாரத்தை உத்வேகத்துடன் செயல்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதையடுத்து, மத்தியப் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திரு. அர்ஜுன் முண்டா வீடியோ கான்பரன்ஸிங் வழியாக இந்தியப் பழங்குடியினக் கூட்டுறவு சந்தை மேம்பாட்டுக் கூட்டமைப்பின் டிஜிட்டல் தளங்களை (Trifed Digital Platforms) தொடங்கி வைத்தார்.

டிஜிட்டலாகிறது ட்ரைஃபெட்” (TRIFED Goes Digital) மற்றும்உள்ளூர் மக்களுக்காக குரல் கொடுப்போம்” (Be Vocal for Local) என்ற தலைப்புகள் இணையவழிக் கருத்தரங்கத்தின் முக்கியமான தலைப்புகளாகும். அதற்கு இந்தியப் பழங்குடிக் கூட்டுறவுச் சந்தை மேம்பாட்டுக் கூட்டமைப்பு (Tribal Cooperative Marketing Development Federation of India - TRIFED) ஏற்பாடு செய்திருந்தது. அக்கருத்தரங்கில் 200 பேர் பங்கேற்றனர்.

அதற்கான நிகழ்ச்சியில் பேசிய அவர், “பழங்குடியினரின் வாழ்க்கை, வாழ்வாதாரத்தை புதிய உச்சத்திற்கு எடுத்துச் செல்வதற்காக வன உற்பத்திப் பொருள்கள், கைத்தறி, கைவினைப் பொருள்கள் ஆகிய பழங்குடியினத்தவர் சார்ந்த வணிகத்தைட்ரைஃபெட் தொண்டர்கள்‘ (Trifed Warriors)  என்ற குழு செயல்படும்என்றார்.

தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு மேலும் மேலும் பலர் போன்றவற்றுக்கு ஆன்லைன் வழிமுறையைக் கடைப்பிடித்து வருகிறார்கள். வணிகச் செயல்பாடுகளோ, அங்காடியோ, தகவல் தொடர்போ இது முக்கியமான உத்தியாகும். இதற்காக டிஜிட்டல் இயக்கம் உள்ளடக்கிய எந்தெந்த கிராமப்புற உற்பத்திப் பொருள்கள் எங்கெங்கே கிடைக்கின்றன என்பதை அறிவதற்கும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும்.  

பழங்குடியின உற்பத்திப் பொருள்களை உலக அளவிலும், தேசிய அளவிலும் சந்தைப்படுத்துவதற்காக கிராமங்கள் அளவிலான பழங்குடியின உற்பத்தியாளர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முன் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்காக டிஜிட்டல் மயமாக்கல் உள்பட உயர்தர மின் தளங்கள் (e- platforms) அமைக்கப்படுகின்றன. இவை சர்வதேச தரத்திலானவைஎன்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சியை ஒட்டி மின் சந்தை முறையில் (Government e-Marketplace) பழங்குடியினத்தவர் உற்பத்திப் பொருள்களை விதவிதமாக சந்தைப்படுத்துதல், ட்ரைஃபெட் (TRIFED) இணையதளம் ஆகியவற்றைத் தொடங்குதல் ஆகிய இரு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. இவற்றை அமைச்சர் அர்ஜுன் முண்டா தொடங்கிவைத்தார். ட்ரைஃபெட் தலைவர் ரமேஷ் சந்த் மீனா, அதன் குழு உறுப்பினர் திருமதி பிரதிபா பிரம்மா, மின்வணிகச் சந்தையின் தலைமை அலுவலரும் துறையின் இணைச் செயலருமான ராஜீவ் கந்த்பால், பத்திரிகைத் தகவல் மையத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் திருமதி நானு பாஸின், பல்வேறு துறைகளைச் சார்ந்த ட்ரைஃபெட் குழுவினர் மூத்த அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

(இணையதள முகவரி : https://trifed.tribal.gov.in).
 



(Release ID: 1634965) Visitor Counter : 193