அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
கலா-அசாரில் மருந்துத் தடுப்புக்கு எதிர்த்துப் போராட புதிய உயிர் அணுக்கள் கண்டுபிடிப்பு.
प्रविष्टि तिथि:
24 JUN 2020 12:58PM by PIB Chennai
இந்தியாவில் பொதுவாக கலா-அசார் என்று அழைக்கப்படும் உள்ளுறுப்புசார் லீஷ்மேனியா ஒட்டுண்ணி நோய்க்கு சிகிச்சையளிக்கப்படாவிட்டால் 95சதவீததிற்கும் மேற்பட்ட நோயாளிகள் இறப்பை சந்திக்க நேரிடும். இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்கக் கிடைக்கும் ஒரே மருந்து மில்டெபோசின். ஒட்டுண்ணிக்குள் அதன் திரட்சி குறைவு காரணமாக, இந்த மருந்துக்கு தடுப்பு உருவாகி அதன் செயல் திறனை விரைவாக இழக்கச் செய்கிறது. ஒட்டுண்ணியைக் கொல்ல இந்த மருந்தின் செயல்திறன் அவசியமானது.
மில்டெபோசின் செயல் இழப்பைச் சமாளிப்பதற்கான வழிகளை டாக்டர். ஷைல்சா சிங் தலைமையில் புனேவில் உள்ள பயோடெக்னாலஜி தேசிய செல் அறிவியல் மையத்தின் (DBT-NCCS) ஆராய்ச்சியாளர்கள் குழு ஆராய்ந்து வருகிறது.
பாதிப்பை ஏற்படுத்துவதற்குக் காரணமான, ‘லீஸ்மேனியா மேஜர்’ என்றழைக்கப்படும் லீஸ்மேனியாவின் இனங்களில் ஒன்றின் மீது ஆராய்ச்சியாளர்கள் கவனம் செலுத்தினர். மருந்தின் வீரியத்தை அதிகரித்து, ஒட்டுண்ணியின் வீரியத்தைக் குறைக்கும் வகையில், அவர்கள் லீஸ்மேனியா இனங்களின் கடத்தல் புரதங்களைக் கையாள முயற்சித்தனர்.
கணக்கீட்டு ரீதியாக வடிவமைக்கப்பட்ட செயற்கைப் புரதங்களைப் பயன்படுத்தி, லீஸ்மேனியாவின் கடத்தல் புரதங்களின் மூலக்கூறு இணைப்புப் பண்பேற்றத்தை இந்தக் குழு முதன் முதலில் காட்டியது. இவர்களின் கண்டுபிடிப்புகள், ‘பயோகெமிக்கல் இதழில்’ வெளியிடப்பட்டுள்ளன.
லீஷ்மேனியா ஒட்டுண்ணிகளின் மருந்துத் தடுப்புக்கு எதிராக புதிய சிகிச்சை முறைகளை உருவாக்க, இந்த அணுகுமுறை, நீண்ட காலத்திற்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பதை, இந்த நம்பிக்கைக்குரிய ஆராய்ச்சி முடிவுகள் குறிப்பிடுகின்றன.
(रिलीज़ आईडी: 1633929)
आगंतुक पटल : 328