சுற்றுலா அமைச்சகம்

“இந்திய வேதவழி உணவும் நறுமணப் பொருள்களும்” என்ற தலைப்பில், மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகத்தால் நடத்தப்படும் Dekho ApnaDesh ‘பாருங்கள் நமது தேசத்தை’ என்ற தொடர் இணையவழிக் கருத்தரங்கின் 37வது தொடர்.

Posted On: 24 JUN 2020 2:36PM by PIB Chennai

சுகாதார அறிவியலின் தொன்மையான வடிவங்களின் நன்மைகளை எடுத்துக் கூறும் வகையில், வேத வழி உணவும் நறுமணப் பொருள்களும் என்ற தலைப்பில் பாருங்கள் நமது தேசத்தை என்ற தொடர் இணையவழிக் கருத்தரங்கின் 37வது கருத்தரங்கம் மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகத்தால் நடத்தப்பட்டது. உலகிற்கு இன்னமும் விளக்கப்படாமல் உள்ள, நவீன உலகில் நவீன உணவு வகைகளை இன்னும் சென்றடையாமலுள்ள இந்திய வேதவழி உணவு வகைகள் நறுமணப் பொருள்கள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தைப் பற்றி, இந்தக் கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது. சில உணவுப் பொருள்கள் பற்றியுள்ள மாயைகளை அகற்றுவது, நறுமணப் பொருள்களின் ரகசியங்களை வெளிப்படுத்துவது, இவற்றைத் தயாரிப்பதற்கான நுட்பங்களை எடுத்துக் கூறுவது, இவற்றின் மூலமாக இந்த அசல் பொருள்களைக் கண்டறிந்து, பயன்படுத்தி, அனுபவிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு ஊக்கம் அளிப்பது ஆகியவற்றுக்காக இந்தத் தொடரில் பல விஷயங்கள் எடுத்துக் கூறப்பட்டன. இந்தியாவின் பன்முகத் தன்மையை எடுத்துக் கூறும் ஒரு முயற்சியாக பாருங்கள் நமது தேசத்தை என்ற தொடர் இணையவழிக் கருத்தரங்கு நடத்தப்பட்டு வருகிறது.

23.6.2020  அன்று நடைபெற்ற 37வது  தொடர்,  இந்திய உணவு சுற்றுலா.org அமைப்பின் தலைவரும், இந்திய உணவு சுற்றுலா,  தில்லியில் உணவுச் சுற்றுலா ஆகியவற்றின் துணை நிறுவனருமான சமையல்கலை நிபுணர் ராஜீவ்; டெமியுர்ஜிக் ஹாஸ்பிட்டாலிட்டி தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குர் கௌதம் ஆகியோர் வழங்கினர். உடல் உறுப்புகள் செயல்படும் தன்மையை மேம்படுத்த உதவும் வகையிலான உணவு மற்றும் நறுமணப் பொருள்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியம் குறித்து அவர்கள் வலியுறுத்தினார்கள்.

ஆயுர்வேதத்தில் மூன்று உடற்கூறு அமைப்புகள் குறித்து அவர்கள் எடுத்துரைத்தார்கள் வாதம்-பித்தம் கபம் என்ற 3 விஷயங்கள் உடலையும் மனதையும் மிக முக்கியமாக பாதிப்பவை. இவை மூன்றும் ஒவ்வொரு மனித உடலிலும் உள்ளன. பிறந்தது முதல் ஒரு அம்சம், ஒரு மனிதரில் தொடர்ந்து நிலவும் என்றும்மற்ற இரண்டு விஷயங்களில் சமநிலை நிலவும்  (இரண்டும் வேறுபட்டாலும்) என்றும் ஆயுர்வேதம் கருதுகிறது என்பதையும் அவர்கள் விளக்கினார்கள்.

இந்த இணைய வழிக் கருத்தரங்குகளை இங்கு காணலாம். https://www.youtube.com/channel/UCbzIbBmMvtvH7d6Zo_ZEHDA/featured http://tourism.gov.in/dekho-apna-desh-webinar-ministry-tourism. மத்திய அரசின் சுற்றுலாத்துறை அமைச்சக சமூக வலைதளங்களிலும் இவற்றைக் காணலாம்

மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் பாருங்கள் நமது தேசத்தை என்ற தொடரின் அடுத்தக் கருத்தரங்கு 25 ஜூன் 2020 அன்று இந்திய நேரம் காலை 11 மணிக்கு நடைபெறும். மோட்டாரிங் எக்ஸ்பிஷன் இந்திய சாகசங்கள்(டைவிங் விடுமுறை) என்பது தலைப்பு. இங்கு பதிவு செய்து கொள்ளலாம் https://bit.ly/MotoringExp


(Release ID: 1633903) Visitor Counter : 344