அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

வலிப்பு நோயைத் தடுப்பதற்கான ‘ரூஃபினமைட்’ என்ற மருந்தை, குறைந்த விலையில் தயாரிக்க, நானோ


தொழில்நுட்பம் அடிப்படையிலான முறையை இந்தியா நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் உருவாக்கியுள்ளது.

Posted On: 24 JUN 2020 12:55PM by PIB Chennai

மத்திய அரசின் அறிவியல்-தொழில்நுட்பத் துறைக்குட்பட்ட தன்னாட்சி நிறுவனமான,  இந்திய நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், வலிப்புநோயைத் தடுப்பதற்கான ‘ரூஃபினமைட்’ என்ற மருந்தை, குறைந்த செலவில் தயாரிக்க,  நானோ தொழில்நுட்பம் அடிப்படையிலான முறையை உருவாக்கியுள்ளது. 

இந்திய நானோ அறிவியல்-தொழில்நுட்ப நிறுவனத்தின் டாக்டர்.ஜெயமுருகன் கோவிந்தசாமி மற்றும் அவருடன் பணியாற்றும் குழுவினர் இணைந்து, ரூஃபினமைட் மருந்து தயாரிப்பின் முக்கிய வினையில் பங்காற்றக்கூடிய,  புதிய, மறுசுழற்சி செய்யக்கூடிய காப்பர்-ஆக்ஸைடு என்ற வினை ஊக்கியைத் தயாரித்துள்ளனர். 

இந்த மருந்தைத் தயாரிக்க,  தற்போது பயன்பாட்டில் உள்ள தொழில்நுட்பம்,   மருந்து அல்லாத, தேவையற்ற மாற்றியம்-1 ,   5-ரெஜியோமாற்றியங்களுக்கு வழி வகுக்கும் உள்ளார்ந்த தேர்வு பிரச்சினைகளுக்கு வழிவகுப்பதாக உள்ளது.   கரிமக் கரைப்பான்களை, உயர் வெப்பநிலையில் பயன்படுத்த வேண்டியிருப்பதோடு,  அவற்றை சுத்தம் செய்து, கரையக்கூடிய வினைஊக்கிகளை பிரித்தெடுக்க வேண்டியுள்ளதால்,  சாதகமற்ற எதிர்வினைகளுக்கும்,  அதிக உற்பத்திச் செலவுகளுக்கும் வழிவகுப்பதாக உள்ளது.                                                                  

*****



(Release ID: 1633896) Visitor Counter : 173


Read this release in: English , Urdu , Hindi , Bengali