அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

தீவிர வெப்ப ஹீலியம் நட்சத்திரங்களில் புளோரின் உள்ளதை அறியும் கண்டுபிடிப்பு அவற்றின் பரிணாமப் புதிருக்கு விடை அளித்துள்ளது.

Posted On: 21 JUN 2020 5:49PM by PIB Chennai

ஹைட்ரஜன் காலியான, குறைந்த அடர்த்தி கொண்ட சூப்பர் ஜெயின்ட் தீவிர ஹீலியம் நட்சத்திரம், பிரபஞ்சத்தில் பொதுவாக உள்ள ரசாயனத் தனிமம் ஆகும். நமது விண்மீன் மண்டலத்தில் இதுவரை 21 நட்சத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த ஹைட்ரஜன் குறைவான தனிமங்களின் மூலமும், பரிணாமமும் புரியாத புதிராகவே இருந்து வந்துள்ளது. இவற்றின் தீவிர ரசாயன தனித்தன்மைகள், ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட ஸ்டெல்லர் கோட்பாட்டுக்கு சவால் விடுப்பதாக  உள்ளன. இந்த விண்மீன்களின் ரசாயனக் கூட்டு கலவை கண்டறியப்பட்ட, குறைந்த அடர்த்தி நட்சத்திரங்களுடன் பொருந்தாதவையாக உள்ளன. 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி பெற்ற இந்திய வானியற்பியல் நிறுவனத்தின் ஆய்வு ஒன்று, வெப்பமான தீவிர ஹீலியம் நட்சத்திரங்களின் வளிமண்டலத்தில் ஒற்றை அயனியாக்க புளோரின் இருப்பதை முதல் முறையாக கண்டுபிடித்துள்ளது. இந்த தனிமங்களின் முக்கிய அமைப்பு கார்பன்-ஆக்சிஜன் கூட்டுக் கலவையாகவும், வெண்மை நிற ஹீலியமாகவும் இருப்பதற்கான வலுவான சாத்தியக்கூறுகளை கொண்டுள்ளது.

தீவிர வெப்ப ஹீலியம் நட்சத்திரங்களின் வளிமண்டலத்தில் புளோரின் ஏராளமாக உள்ளது என்ற கண்டுபிடிப்பு, அவற்றின் கலவை அமைப்பு பற்றி பற்பல ஆண்டுகளாக இருந்து வந்த புதிருக்குத் தீர்வு கண்டுள்ளது. வெப்ப தீவிர ஹீலியம் நட்சத்திரங்கள், குளிர்ந்த ஹீலியம் நட்சத்திரங்களுடனும், இதர ஹைட்ரஜன் குறைவான நட்சத்திரங்களுடனும் பரிணாம வரிசை கொண்டிருப்பதை இந்தக் கண்டுபிடிப்பு நிறுவுகிறது. சிதைவுறும் இறந்த நட்சத்திரங்களான இரண்டு வெள்ளைக் குள்ளன்கள் (white dwarfs) ஒன்றாக இணைவதோடு தொடர்புடைய பரிணாமக் காட்சியை இது விளக்குகிறது.



(Release ID: 1633280) Visitor Counter : 224


Read this release in: English , Hindi , Bengali