வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தகம்: மே 2020

Posted On: 15 JUN 2020 6:05PM by PIB Chennai

ஏப்ரல்-மே 2020-21ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதிகள் (வணிகம் மற்றும் சேவைகள் இணைந்து) 61.57 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது, இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியை விட (-) 33.66 சதவீத எதிர்மறை வளர்ச்சியை வெளிப்படுத்துகிறது. ஏப்ரல்-மே 2020-21*இல் ஒட்டுமொத்த இறக்குமதி 57.19 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது, இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியை விட (-) 48.31 சதவீத எதிர்மறை வளர்ச்சியைக் காட்டுகிறது.

வணிக வர்த்தகம்

ஏற்றுமதிகள் (மறு ஏற்றுமதி உட்பட)

 

மே 2020இல் ஏற்றுமதி 19.05 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது, இது 2019 மே மாதத்தின் 29.99 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் ஒப்பிடும்போது, ​​(-) 36.47 சதவீத எதிர்மறை வளர்ச்சியைக் காட்டுகிறது. ரூபாய் அடிப்படையில், ஏற்றுமதி 2020 மே மாதத்தில் 1,44,166.01 கோடி ரூபாய், இது 2019 மே மாதத்தில் 2,09,280.62 கோடி ரூபாய் உடன் ஒப்பிடும் போது, (-) 31.11 சதவீத எதிர்மறை வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

 

இறக்குமதி

 

மே 2020இல் இறக்குமதி 22.20 பில்லியன் அமெரிக்க டாலர் (1,67,977.68 கோடி ரூபாய்), இது 2019 மே மாதத்தில் 45.35 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ .3,16,448.93 கோடி) இறக்குமதியுடன் ஒப்பிடும் போது, டாலர் அடிப்படையில் 51.05 சதவீதம் குறைவாகவும், ரூபாய் அடிப்படையில் 46.92 சதவீதம் குறைவாகவும் இருந்தது. ஏப்ரல்-மே 2020-21 காலகட்டத்திற்கான இறக்குமதியின் ஒட்டு மொத்த மதிப்பு 39.32 பில்லியன் அமெரிக்க டாலர் (.2,98,502.76 கோடி ரூபாய்), இது ஏப்ரல்-மே 2019-20 காலகட்டத்தின் 86.75 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் (6,03,881.86 கோடி ரூபாய்) ஒப்பிடும் போது டாலர் அடிப்படையில் (-) 54.67 சதவீத எதிர்மறை வளர்ச்சியாகும் (ரூபாய் அடிப்படையில் (-)50.57 சதவீதம் எதிர்மறை வளர்ச்சியாகும்).

 

சேவைகளில் வர்த்தகம்

ஏற்றுமதிகள் (ரசீதுகள்)

 

ஜூன் 15,  2020 தேதி வெளியிடப்பட்ட ரிசர்வ் வங்கியின் சமீபத்திய செய்திக் குறிப்பின் படி, ஏப்ரல் 2020இல் ஏற்றுமதி 16.45 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ. 125,409.04 கோடி) இது ஏப்ரல் 2019 உடன் ஒப்பிடும் போது டாலர் அடிப்படையில் (-) 8.92 சதவீத எதிர்மறையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. மே 2020க்கான சேவை ஏற்றுமதியின் மதிப்பு 15.70 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.

 

இறக்குமதி (கொடுப்பனவுகள்)

 

ஜூன் 15, 2020  தேதி வெளியிடப்பட்ட ரிசர்வ் வங்கியின் சமீபத்திய செய்திக் குறிப்பின்படி, ஏப்ரல் 2020 இல் இறக்குமதி 9.30 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ. 70,907.57 கோடி) இது ஏப்ரல் 2019 உடன் ஒப்பிடும் போது டாலர் அடிப்படையில் (-) 18.43 சதவீத எதிர்மறையான வளர்ச்சியைp பதிவு செய்துள்ளது. மே 2020க்கான சேவை இறக்குமதியின் மதிப்பு 8.57 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

 

 

வர்த்தக இருப்பு

வணிகம்: மே 2020ஆம் ஆண்டில் வர்த்தகp பற்றாக்குறை 3.15 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது, இது மே 2016 இல் 15.36 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.

சேவைகள்: ஜூன் 15, 2020 தேதி ரிசர்வ் வங்கியின் செய்தி வெளியீட்டின் படி, ஏப்ரல் 2020க்கான சேவைகளில் வர்த்தக இருப்பு (அதாவது நிகர சேவைகள் ஏற்றுமதி) 7.15 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது.

ஒட்டு மொத்த வர்த்தக இருப்பு: வர்த்தக மற்றும் சேவைகளை ஒன்றாக எடுத்துக் கொண்டால், ஏப்ரல்-மே 2020-21 வரையிலான ஒட்டுமொத்த வர்த்தக உபரி 4.37 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது, இது ஏப்ரல்-மே 2019-20 க்கான பற்றாக்குறையுடன் ஒப்பிடும்போது 17.84 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.

**********(Release ID: 1631761) Visitor Counter : 24


Read this release in: English , Urdu