புவி அறிவியல் அமைச்சகம்

தென்மேற்குப் பருவமழை மும்பை உட்பட மொத்த மகாராஷ்டிரா, தெற்கு குஜராத் மற்றும் மத்திய, கிழக்கு இந்தியப் பகுதிகளில் மேலும் முன்னேறியுள்ளது

प्रविष्टि तिथि: 14 JUN 2020 6:17PM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள, இந்திய வானிலை ஆய்வுத்துறையின் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் / மண்டல வானிலை ஆய்வு  மையம் தெரிவித்துள்ளதாவது:  

  • தென்மேற்கு பருவமழை, மத்திய அரபிக்கடலின் எஞ்கிய  பகுதிகள், வடகிழக்கு அரபிக்கடலின் சில பகுதிகள், குஜராத் மாநிலம், தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, மும்பை உட்பட மகாராஷ்டிராவின் எஞ்சிய பகுதிகள், மத்தியப்பிரதேசத்தின் சில பகுதிகள், சத்தீஷ்கர் மற்றும் ஜார்க்கண்டின் பல பகுதிகள், பீகாரின் சில பகுதிகள் ஆகியவற்றில் மேலும் முன்னேறியுள்ளது.
  • பருவமழையின் வடஎல்லை, சூரத், நந்துர்பர், பேடுல், சியோனி, பேந்ரா ரோடு, அம்பிகாபூர், கயா, பாட்னா வழியாகச் செல்கிறது.
  • வடக்கு அரபிக் கடல், குஜராத் மற்றும் மத்தியப்பிரதேசத்தின் சில பகுதிகளிலும், சத்தீஷ்கர், ஜார்க்கண்ட் மற்றும் பீகாரின் எஞ்சிய பகுதிகள், கிழக்கு உத்தரப்பிரதேசத்தின் சில பகுதிகள் ஆகியவற்றில் அடுத்த இரண்டு நாட்களில் தென்மேற்கு பருவமழை மேலும் முன்னேறுவதற்கான சாதகமான சூழ்நிலை உருவாகிக் கொண்டுள்ளது.

-----


(रिलीज़ आईडी: 1631627) आगंतुक पटल : 161
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Manipuri