புவி அறிவியல் அமைச்சகம்

மத்தியபிரதேசத்தின் சில பகுதிகள், மராத்வாடா மற்றும் விதர்பாவின் பெரும்பாலான பகுதிகள், சட்டீஸ்கரின் சில பகுதிகள், ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் மீதமுள்ள பகுதிகள் மற்றும் ஜார்கண்ட்டின் பெரும்பாலான பகுதிகள் மற்றும் பீகாரின் சில பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை மேலும் முன்னேற்றம்

Posted On: 13 JUN 2020 8:50PM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம்/ இந்திய வானிலைத் துறையின் மண்டல வானிலை மையம் அளித்த தகவலில் கூறியிருப்பதாவது

  • மத்தியப்பிரதேசத்தின் சில பகுதிகள், மராத்வாடா மற்றும் விதர்பாவின் பெரும்பாலான பகுதிகள், சட்டீஸ்கரின் சில பகுதிகள், ஒடிசா மற்றும் மேற்குவங்கத்தில் மீதமுள்ள பகுதிகள் மற்றும் ஜார்கண்ட்டின் பெரும்பாலான பகுதிகள் மற்றும் பீகாரின் சில பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை மேலும் முன்னேற்றம் அடைந்துள்ளது.
     
  • அடுத்த 24 மணி நேரத்தில், தென்மேற்குப் பருவமழை மத்திய அரபிக்கடலின் எஞ்சிய பகுதிகள், வடக்கு அரபிக்கடலின் சில பகுதிகள், மஹாராஷ்டிராவின் எஞ்சிய பகுதிகள் (மும்பை உட்பட), சட்டீஸ்கரின் சில பகுதிகள், ஜார்கண்ட், பீகார் மற்றும் தெற்கு குஜராத்தின் சில பகுதிகள் மற்றும் தெற்கு மத்தியப்பிரதேசம் ஆகிய பகுதிகளுக்கு மேலும் முன்னேறுவதற்கான சூழ்நிலைகள் சாதகமாக உள்ளன.

 

  • அடுத்த 48 மணி நேரத்தில் கொங்கன், கோவாவில் பரவலாக மழை பெய்யும், சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யலாம். ஒரு சில இடங்களில் அதிதீவிர கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.  

 

இந்தியவானிலைத்துறையின்முன்னறிவிப்பு:

 

  • மேற்கு ராஜஸ்தானில் ஒரு சில இடங்களில் அடுத்த 4-5 நாட்களுக்கு, அனல்காற்று வீசுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
  • நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இல்லை.

(Release ID: 1631494) Visitor Counter : 205