அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
ஒளி ஊடுருவும் மின்கடத்திக் கண்ணாடிகளை உருவாக்கும் புதிய முறையானது ஸ்மார்ட் ஜன்னல்கள், தொடுதிரைகள், சோலார் செல்களின் உற்பத்திச் செலவைக் குறைக்கும்.
Posted On:
06 JUN 2020 6:00PM by PIB Chennai
சமீப ஆண்டுகளில், அதிக அளவில் ஒளி ஊடுருவும் திறனைக் கொண்ட ஒளி ஊடுருவும் மின்கடத்திக் கண்ணாடிகளுக்கான (TCG) தேவையானது அதிகரித்து வருகிறது. இந்தத் தேவைகளுக்குக் காரணம் ஸ்மார்ட் ஜன்னல்கள், சோலார் செல்கள், தொடுதிரை / தொடு உணர்த்தி மற்றும் இது போன்ற ஒளி மின்னணு கருவிகளில் இவற்றின் பயன்பாடு அதிகரித்து வருவதே ஆகும்.
இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் பெங்களூவில் செயல்பட்டு வரும் தன்னாட்சி நிறுவனமான நானோ மற்றும் மென்சடப்பொருள் அறிவியல்களுக்கான மையத்தின் (CeNS), விஞ்ஞானிகள் டிசிஜி உருவாக்கலில் ஒரு புதிய முறையை உருவாக்கியுள்ளனர். தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் வெள்ளீயம் சேர்க்கப்பட்ட இன்டியம் ஆக்சைடு (ITO) தொழில்நுட்பத்தோடு ஒப்பிட்டால் இந்தப் புதிய தொழில்நுட்பம் தயாரிப்புச் செலவில் 80 சதவிகிதத்தைக் குறைப்பதாக இருக்கும். இந்த விஞ்ஞானிகளின் தற்போதைய ஆய்வானது மெட்டீரியல்ஸ் கெமிஸ்ட்ரி அண்ட் பிசிக்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த வலைத்தளத்தை பார்க்கவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1629913
(Release ID: 1630034)