அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

IASST விஞ்ஞானிகள் ஒளி மின்னணுவியல் கருவிகள் தயாரிப்புக்கு பயன்படக்கூடிய படிக நிலை (கிறிஸ்டலின்) ருபிரீன் என்பதைத் தொகுக்கும் புதிய முறை ஒன்றைக் கண்டறிந்திருக்கிறார்கள்.

Posted On: 06 JUN 2020 5:57PM by PIB Chennai

மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் தன்னாட்சி அமைப்பான அறிவியல், தொழில்நுட்ப உயர்நிலை ஆய்வுக்கழகத்தில் (IASST) ள்ள விஞ்ஞானிகள் ஒளி மின்னணுவியல் கருவிகள் தயாரிப்புக்கும், மின்னணு தோல் தயாரிக்கவும் பயன்படக்கூடிய : பல அணு வளையங்கள் கொண்ட நறுமணமுள்ள (பாலிசைக்கிளிக் அரோமேட்டிக்) ஹைட்ரோ கார்பனை அடிப்படையாகக் கொண்ட மென்திரை படிகநிலை (கிறிஸ்டலின்) ருபிரீன் என்பதைத் தொகுக்கும் புதிய முறை ஒன்றைக் கண்டறிந்திருக்கிறார்கள்.

 

இந்தப் புதிய முறை, கரைப்பான் இல்லாமல், தண்ணீர் இல்லாமல் செய்யப்படும் முறையாகும். ஒரே படியிலான (one step) பிளாஸ்மா முறையிலான இது, சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காத முறையாகும். இதிலிருந்து கிடைக்கும் படிக நிலை  ருபிரீன் அடிப்படையிலான திரை,ளி மின்னணுவியல் தன்மைகள் கொண்டதாக இருந்தது. இந்த முறைக்கான இந்தியக் காப்புரிமை கோரப்பட்டுள்ளது. இந்த முறையின் மூலம் மிகவும் சீரான, நுண்ணளவிலும் கூட ஒரு சிறு துளை கூட இல்லாத, மெல்லிய திரை டெபாசிட் செய்யப்பட முடியும். மிக உயரிய நுண்ணிய கருவிகளை வடிவமைக்க இது மிகவும் பயனுள்ளதாக அமையும்.

 

போதுமான அளவு உயர்ந்த ஒலி அலைவரிசைக்கு ஒப்பான பிளாஸ்மா சக்தியில் படிக நிலை ருபிரீன் உருவாவது என்பது, அதிகப்படியான ஒலி அலை சக்தியைப் பயன்படுத்துவதால், தூளாக உள்ள நிலையிலிருந்து படிநிலை ருபிரீனாக  மாற்றமுடியும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது என்று ஐஏஎஸ்எஸ்டி குழுவினர் கூறுகின்றனர்.

 

டெபாசிட் செய்யப்பட்ட திரையைக் காற்றில் காண்பிப்பதால் மேற்பரப்பு ஆக்சிடேஷன் நடைபெறுகிறது இதனால் மேற்பரப்பு முனைவாக்கம் ஏற்படுகிறது. படிக நிலை ருபிரீன் திரையில் உள்ள ஆக்சைடு அடுக்கின் காரணமாக இது ஏற்படுகிறது.

 

 

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்க: டாக்டர் அரூப் ஆர் பால் மின்னஞ்சல் arpal@iasst.gov.in தொலைபேசி அலைபேசி 99571-74421

 

*****



(Release ID: 1629945) Visitor Counter : 217


Read this release in: English , Hindi