நிதி அமைச்சகம்
ஏல விற்பனை ( மறு வெளியீடு) ஜிஎஸ் 2022-ன் 5.09%;
ஏல விற்பனை ( மறு வெளியீடு) ஜிஎஸ் 2030-ன் 5.79%;
ஏல விற்பனை ( மறு வெளியீடு) இந்திய அரசின் மாறும் விகித பத்திரம் 2031;
ஏல விற்பனை ( மறு வெளியீடு) ஜிஎஸ் 2060-ன் 7.19%;
Posted On:
01 JUN 2020 6:07PM by PIB Chennai
இந்திய அரசு பின்வரும் ஏல விற்பனைகளை அறிவித்துள்ளது. 1. விலை அடிப்படையிலான ஏலத்தின் மூலம் அறிவிக்கப்பட்ட தொகை ரூ.3000 கோடிக்கான ( பெயரளவுக்கு) அரசுப் பங்கில் 5.09 சதவீதம், 2022 விற்பனை ( மறுவெளியீடு), 2. விலை அடிப்படையிலான ஏலத்தின் மூலம் அறிவிக்கப்பட்ட தொகை ரூ. 18000 கோடிக்கான ( பெயரளவுக்கு) அரசு பங்கில் 5.79 சதவீதம், 2030 விற்பனை (மறுவெளியீடு), 3. விலை அடிப்படையிலான ஏலத்தின் மூலம் , அறிவிக்கப்பட்ட ரூ.4000 கோடிக்கான ( பெயரளவுக்கு) இந்திய அரசின் மாறும் விகிதப் பத்திரம் 2031 விற்பனை, 4. விலை அடிப்படையிலான ஏலம் மூலம், அறிவிக்கப்பட்ட ரூ.5000 கோடிக்கான அரசின் பங்கு 2060 –இன் 7.19 சதவீதம் விற்பனை ஆகியவை வெளியிட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு பங்குக்கும் ரூ.2000 கோடி வரையிலான கூடுதல் சந்தாவை வைத்துக் கொள்ள இந்திய அரசுக்கு வாய்ப்புள்ளது. பல்நோக்கு விலை முறை மூலம் 2020 ஜூன் 5 அன்று இந்திய ரிசர்வ் வங்கியால், அதன் மும்பை அலுவலகத்தில் ஏலம் நடத்தப்படும்.
அரசுப் பங்குகளுக்கான போட்டி அல்லாத ஏல வசதித் திட்டத்தின் கீழ், அறிவிக்கப்பட்ட பங்கு விற்பனை தொகையில், 5 சதவீதம் தகுதியான தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படும்.
ஏலத்துக்கான போட்டி மற்றும் போட்டி அல்லாத புள்ளிகள், இந்திய ரிசர்வ் வங்கியின் கோர் பாங்கிங் தீர்வு ( இ-குபேர்) முறையின் படி 2020 ஜூன் 5-ஆம் தேதி மின்னணு முறையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். போட்டி அல்லாத புள்ளிகள் காலை 10.30 மணி முதல் 11.00 மணி வரையிலும், போட்டி புள்ளிகள் காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரையிலும் தாக்கல் செய்யப்பட வேண்டும்.
ஏல முடிவுகள் 2020 ஜூன் 5( வெள்ளி) அன்று அறிவிக்கப்படும். வெற்றிகரமாக ஏலம் எடுத்தவர்கள் பணம் செலுத்துவதற்கான தேதி 2020 ஜூன் 8-ஆம்தேதி( திங்கள்).
இந்திய ரிசர்வ் வங்கியின் 2018 ஜூலை 24-ஆம் தேதியிட்ட சுற்றறிக்கை எண். ஆர்பிஐ-2018-19-25-இன்படி அவ்வப்போது திருத்தப்பட்ட ‘ மத்திய அரசு பங்குகளில் பரிவர்த்தனை செய்தபோது’ விதிமுறைகளுக்கிணங்க வர்த்தகத்துக்கு பங்குகள் தகுதி பெறும்.
****
(Release ID: 1628454)