வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
ஏப்ரல் 2020க்கான எட்டு அடிப்படைத் தொழில்களின் குறியீட்டு எண் (அடிப்படை: 2011-12=100)
Posted On:
29 MAY 2020 5:00PM by PIB Chennai
தொழில் மற்றும் சர்வதேச வர்த்தகத்துக்கான துறையின் பொருளாதார ஆலோசகர் அலுவலகம் ஏப்ரல் 2020க்கான எட்டு அடிப்படைத் தொழில்களின் குறியீட்டு எண்ணை அறிவித்துள்ளது.
எட்டு அடிப்படைத் தொழில்களின் குறியீட்டு எண்ணின் வளர்ச்சி விகிதம் மார்ச் 2020ல் 9 சதவீதம் (தற்காலிகம்) குறைப்பு என்பதோடு ஒப்பிட ஏப்ரல் 2020இல் 38.1 சதவீதம் (தற்காலிகம்) குறைந்துள்ளது. கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலின் காரணமாக ஏப்ரல் 2020இல் நாடு தழுவிய ஊரடங்கு அமல் செய்யப்பட்டதன் காரணமாக, நிலக்கரி, சிமெண்ட், ஸ்டீல், இயற்கை எரிவாயு, எண்ணெய் சுத்திகரிப்பு, கச்சா எண்ணெய் போன்ற பல்வேறு தொழில்கள் குறிப்பிடத்தக்க அளவில் உற்பத்திக் குறைவைச் சந்தித்தன.
எட்டு அடிப்படைத் தொழில்களுக்கான குறியீட்டு எண்ணின் இறுதி வளர்ச்சி விகிதம் மாற்றம் இல்லாமல் 2.2 சதவீதம் ஆகவே இருக்கிறது. தொழிற்சாலை உற்பத்திக் குறியீட்டு எண்ணில் (IIP) உள்ளடக்கப்பட்ட தொழில்களில் எட்டு அடிப்படைத் தொழில்களும் 40.27 சதவிகிதப் பங்கு வகிக்கின்றன.
(Release ID: 1627727)
Visitor Counter : 316