புவி அறிவியல் அமைச்சகம்
அகில இந்திய வானிலை முன்னறிவிப்பு
Posted On:
23 MAY 2020 4:33PM by PIB Chennai
இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தேசிய வானிலை முன்னறிவிப்பில் தெரிவித்துள்ள தகவல்கள்:
- பருவமழையின் வடக்கு எல்லை Lat.5°N/Long.85°E, Lat.8°N/Long.90°E கார்நிகோபர் Lat.11°N/Long.95°E நிலையில் கடந்து கொண்டிருக்கிறது.
- ராஜஸ்தானில் சில பகுதிகளில் தீவிர வெப்ப அலையுடன் கூடிய சூழ்நிலை நிலவும். பஞ்சாப், ஹரியானா சண்டீகர், டெல்லி மற்றும் விதர்பா பகுதிகளில் அடுத்த 4 - 5 நாட்களில் சில பகுதிகளில் வெப்பக் காற்று சூழ்நிலை காணப்படும்.
மத்தியப்பிரதேசம் மற்றும் உத்திரப்பிரதேசத்தின் தெற்குப் பகுதியில் சில இடங்களில் அடுத்த 4 - 5 நாட்களுக்கு வெப்ப அலைச் சூழ்நிலைகள் இருக்கும்.
அடுத்த 3 நாட்களுக்கு ஆந்திரப்பிரதேசக் கடலோரப் பகுதி மற்றும் ஏனாம், தெலங்கானாவில் சில பகுதிகளில் வெப்ப அலை காணப்படும்.
- வடகிழக்கு மாநிலங்களில் பல பகுதிகளில் அவ்வப்போது கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக் கூடும். 24-27 தேதிகளில் கிழக்கு இந்தியாவை ஒட்டிய பகுதிகளில் அவ்வப்போது கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக் கூடும்.
2020 மே 26-27 தேதிகளில் இந்தியாவின் தெற்கு தீபகற்பப் பகுதியில் சில இடங்களில் கனமழை பெய்யக் கூடும்.
அடுத்த 5 நாட்களுக்கு இந்திய தீபகற்பத்தை ஒட்டிய பகுதிகள், வடகிழக்கு, மையப் பகுதிகளில் அதிக வெப்ப அலை முதல் மிக அதிக வெப்ப அலை வரை வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. b) 2020 மே 25-27 காலத்தில் வடகிழக்கு இந்தியாவில் அதிக மழை பெய்யக் கூடும்.
பதிவான வானிலை விவரம்:
- மேற்கு ராஜஸ்தான் மற்றும் ஹரியானா, டெல்லி, கிழக்கு ராஜஸ்தான், விதர்பாவில் சில பகுதிகளில் வெப்ப அலைக்கான சூழ்நிலைகள் நேற்று காணப்பட்டன. அதிகபட்சமாக வெப்ப நிலை 46.6°C ச்சூருவில் (மேற்கு ராஜஸ்தான்) பதிவாகியுள்ளது.
- கடந்த 2 நாட்களாக வடகிழக்கு இந்தியாவில் சில பகுதிகளில் கன மழை முதல் மிக கன மழை வரை பெய்துள்ளது. மேகாலயாவில் மழை அளவுகள் (சென்டிமீட்டரில்): சோஹ்ரா - 33, சோஹ்ரா (RKM)- 28
(Release ID: 1626420)
Visitor Counter : 234