PIB Headquarters

மணிலா மற்றும் லண்டனில் இருந்து வரும் வந்தே பாரத் மிஷன் விமானங்கள் சென்னையில் இறங்குகின்றன

சென்னை சுங்கத்துறை அனைத்து பயணிகளுக்கும் சுமுகமாக அனுமதி அளிக்கிறது

Posted On: 15 MAY 2020 7:10PM by PIB Chennai

மணிலா மற்றும் லண்டனில் இருந்து முறையே வியாழக்கிழமை இரவு மற்றும் வெள்ளிக்கிழமை காலை தரையிறங்கிய இரண்டு வந்தே பாரத் விமானங்களின் 500 பயணிகளுக்கு சென்னை சுங்கத்துறை  சுமுகமாக அனுமதி அளித்துள்ளது.

பிலிப்பைன்ஸின் மணிலாவிலிருந்து ஏர் இந்தியா 1379 விமானம் மே 14 வியாழக்கிழமை சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இரவு 22.05 மணிக்கு தரையிறங்கியது, ந்த விமானத்தில் 167 பயணிகள் பயணம் செய்தனர், இதில் 110 ஆண்கள் மற்றும் 57 பெண் பயணிகள்.

இரண்டாவது விமானம் ஏர் இந்தியா  1570, லண்டன், மும்பை வழியாக மே 15 வெள்ளிக்கிழமை  காலை 07.55 மணிக்கு 202 ஆண்கள், 126 பெண்கள் மற்றும் 5 கைக்குழந்தைகள் உட்பட 333 பயணிகளை ஏற்றிச் சென்றது. வந்தே பாரத் மூலம் வெளிநாட்டில் இருந்து இந்தியர்களை அழைத்து வரும் பணியின் ஒரு பகுதியாக சென்னை அடைந்த ஒன்பதாவது விமானம் இதுவாகும்.

இரு விமானங்களின் பயணிகள் அனைவருக்கும் கோவிட் – 19 பரிசோதனைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன், அவர்களுக்கு சென்னை விமான நிலைய சுங்கத்துறையினரல் சுமூகமான அனுமதியும் வழங்கப்பட்டது.

கோவிட் -19 தொற்று சூழ்நிலை காரணமாக, இந்தியாவிலிருந்து புறப்படும் மற்றும் திரும்பும் அனைத்து சர்வதேச விமானங்களும் மார்ச் 22 முதல் தரையிறக்கப்பட்டுள்ளன. இந்திய அரசாங்கத்தின் திருப்பி அழைக்கும் திட்டம் வந்தே பாரத் மிஷன் மே 7 முதல் கோவிட் -19 காரணமாக சிக்கித் தவிக்கும் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை நாட்டிற்கு திரும்ப அழைத்து வரத் தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் முதல் கட்டத்தில் 11 விமானங்கள் தமிழ்நாட்டிற்கு வர திட்டமிடப்பட்டிருந்தன, அதில் ஒன்பது நிவாரண விமானங்கள் சென்னைக்கு வந்தன.

*******



(Release ID: 1624140) Visitor Counter : 179


Read this release in: English