PIB Headquarters

வரி செலுத்துபவர்களுக்கு, தகவல் தொடர்புக்கான கூடுதல் சேனலாக, வரி செலுத்துபவர்களுக்கு தனிப்பட்ட வாட்ஸ் ஆப் எண்.

Posted On: 15 MAY 2020 2:02PM by PIB Chennai

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக தொழில், வர்த்தகத் துறையினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நீக்குவதற்காக, வரி செலுத்துபவர்களுக்கு கூடுதல் தகவல் தொடர்பு சேனலாக தனிப்பட்ட வாட்ஸ் ஆப் எண் ஒன்றை ஏற்படுத்த தமிழ்நாடு புதுச்சேரி மண்டலத் தலைமை ஆணையர் அங்கீகாரம் அளித்துள்ளார்.

 

தமிழ்நாடு மாநிலம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்ந்த

ஜிஎஸ்டி GST இன் மத்திய அதிகார வரம்பிற்குட்பட்ட வரி செலுத்துபவர்களும், பொதுமக்களும் இந்த வாட்ஸ் ப் வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தங்களுக்கான அதிகார வரம்பிற்குட்பட்ட அலுவலகங்களை நேரில் சென்று அணுகாமலேயே வாட்ஸ் ஆப் எண் மூலமாகவே, தங்களுக்குள்ள குறைகளுக்கும், வினாக்களுக்கும் விரைவில் தீர்வு காண முடியும்.

 

 

வாட்ஸ் ஆப் எண் 94444 02480

 

இந்த எண் மூலம் வாட்ஸ் ஆப் செய்திகள் மட்டுமே அனுப்பமுடியும். அழைப்பு விடுத்து பேசும் வசதி நீக்கப்பட்டிருக்கும் இந்த அலுவலகத்தில் உள்ள ஒரு அதிகாரி ஒற்றைச்சாளர மைய அதிகாரியாகச் செயலாற்றிஅந்தந்த அதிகார வரம்பிற்குட்பட்ட அதிகாரியிடமிருந்து பதில்களைப் பெற்று வாட்ஸ் ஆப் மூலம் பதில் அனுப்புவார்.

 

அனைத்து தொழில் மற்றும் வர்த்தக அமைப்புகளும், கூட்டமைப்புகளும், இத்துறையின் இந்தப் புதிய முயற்சி குறித்து, தங்கள் அனைத்து உறுப்பினர்களுக்கும் தகவல் அளிக்கவேண்டும் என்றும், அவர்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.



(Release ID: 1624070) Visitor Counter : 126


Read this release in: English