வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

இந்தியாவின் மொத்த விற்பனை விலை குறியீட்டு எண்கள் (அடிப்படை 2111-12 = 100) மார்ச் 2020 மாதத்திற்கான பரிசீலனை

Posted On: 15 APR 2020 12:25PM by PIB Chennai

இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்கான அனைத்து பொருட்கள்’ (அடிப்படை 2011-12=100) அதிகாரபூர்வ மொத்த விற்பனை விலை குறியீட்டு எண் முந்தைய மாதத்தின் 122.2 (உத்தேசம்) லிருந்து,0.90% குறைந்து 122.1 (உத்தேசம்) ஆக உள்ளது.

பணவீக்கம்

மொத்த விற்பனை விலை குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்ட பணவீக்க விகிதம், 2020ம் ஆண்டு மார்ச் மாதத்தில் (மார்ச் 2019 மேல்)1.00%  ( உத்தேசம்) ஆக உள்ளது. முந்தைய மாதத்தில் இது 2.26% (உத்தேசம்) ஆக இருந்தது. சென்ற ஆண்டு இதே மாதத்தில் இது 3.10% ஆக இருந்தது. அதிகரிக்கும் (பில்டப்) பணவீக்க விகிதம், நடப்பு நிதியாண்டில் இதுவரை 1.00% ஆக இருந்தது. சென்ற ஆண்டு இதே காலத்தில் இது 3.10% ஆக இருந்தது. மேலும் விவரங்களுக்கு https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1614620 இணைய முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
 


(Release ID: 1614708) Visitor Counter : 161