சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
2019- 20 நிதி ஆண்டில் இது வரையில் அதிக அளவிலான தேசிய நெடுஞ்சாலைகளைக் கட்டமைத்துள்ளது இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்
Posted On:
06 APR 2020 6:27PM by PIB Chennai
2019- 20 நிதி ஆண்டில் 3,979 கி.மீ தேசிய நெடுஞ்சாலைகளைக் கட்டமைத்து சாதனை படைத்துள்ளது இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம். இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தால் இது வரை ஒரு நிதி ஆண்டில் அதிகமாக செய்யப்பட்ட தேசிய நெடுஞ்சாலைக் கட்டுமானம் இதுவேயாகும். கடந்த வருடங்களில் காணப்பட்டதைப் போல சீரான வளர்ச்சியைக் கண்டு, 2018-19 நிதி ஆண்டில் 3,380 கி.மீ ஆக கட்டுமானம் இருந்தது. இதே போக்கைத் தொடர்ந்து, 2019-20 நிதி ஆண்டில் 3,979 கி.மீ தேசிய நெடுஞ்சாலைகளை கட்டமைத்து, இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், அது தொடங்கப்பட்ட ஆண்டான 1995 முதல் இது வரை இல்லாத அளவில் கட்டுமானம் செய்துள்ளது.
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம், 65,000 கி.மீ தேசிய நெடுஞ்சாலைகளைக் கட்டமைக்க 'பாரத்மாலா பரியோஜனா' என்னும் லட்சியம் மிக்க ஒரு நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டத்தை உருவாக்கியுள்ளது. பாரத்மாலா பரியோஜனாவின் முதல் கட்டத்தின் கீழ், ரூ 5,35,000 கோடியில், 34,800 கி.மீ நீளத்துக்கு தேசிய நெடுஞ்சாலைகளை அமைக்க, அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. பாரத்மாலா பரியோஜனாவின் முதல் கட்டத்தின் கீழ், 27,500 கி.மீ நீளத்துக்கு தேசிய நெடுஞ்சாலைகளை அமைக்க இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு ஆணையிடப்பட்டுள்ளது.
***
(Release ID: 1611883)
Visitor Counter : 138