இந்திய போட்டிகள் ஆணையம்

பசுமை வழிப்பாதை படிவம் -I க்கான திருத்தியமைக்கப்பட்ட நெறிமுறைக்குறிப்புகளை இந்தியப் போட்டியிடுதல் ஆணையம் [சிசிஐ] வெளியிட்டுள்ளது

Posted On: 28 MAR 2020 1:06PM by PIB Chennai

பசுமை வழிப்பாதையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களுக்கு ஏற்ப படிவம் -I
க்கான திருத்தியமைக்கப்பட்ட நெறிமுறைக் குறிப்புகளை இந்தியப் போட்டியிடுதல் ஆணையம் (The Competition Commission of India - CCI) வெளியிட்டுள்ளது. இந்த திருத்தி அமைக்கப்பட்ட படிவம்-I போட்டியிடும் சட்டம் 2002இல் பிரிவு 6(2)இன் படியும் இணைந்த வரன்முறைகளின் வரன்முறை 5(2)ன்படியும் அறிவிக்கை தாக்கல் செய்யப்பயன்படும். படிவத்துடன் தகவல்கள் மற்றும் ஆவணங்களை சமர்ப்பிக்க இந்த
நெறிமுறைக் குறிப்புகள் வாய்ப்பை ஏற்படுத்துகின்றனது. மேலும் இது பசுமை வழிப்பாதைக்கான தகுதி நிபந்தனைகளில் தெளிவைத் தருகிறது. சம்பந்தப்பட்டவர்கள் சிசிஇ
இடம் ஆவணங்கள் தாக்கல் செய்வதற்கு ஏதுவாக நெறிமுறைக் குறிப்புகள் வழங்கப்படுகின்றன.

கம்பெனி இணைப்புகள் மற்றும்  கம்பெனிகள் வாங்குதல்  சார்ந்த பிரேரணைகள் தாக்கல் செய்யும் நடைமுறையை மேம்படுத்தி எளிமையானதாகவும், விரைவானதாகவும்
மாற்றுவதற்கென சிசிஇ, 2019 ஆகஸ்ட் மாதம் பசுமை வழிப்பாதையின் கீழ் இணைப்புகளுக்காக, தானாகவே ஒப்புதல் கிடைக்கும் அமைப்பை  அறிமுகம் செய்தது.
இணைப்பு  நெறிமுறைகளின்  நெறிமுறை 5(2)  மற்றும்  2002  போட்டியிடும்  சட்டம் பிரிவு 6(2)இன் கீழ் அறிவிக்கை தாக்கல் செய்ய திருத்தி அமைக்கப்பட்ட
படிவம்-Iயும் அறிமுகம் செய்தது. .

படிவம் - I தொடர்பாக தகவல்கள் மற்றும் வேறு வழிகாட்டுதல்கள்
தேவைப்பட்டால் சிசிஇ யின் அதிகாரிகளைக் கலந்து ஆலோசனைகளைப் (பிஎப்சி) பெறலாம். சிசிஇ யின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள நெறிமுறைகளின்படி சம்பத்தப்பட்டவர்கள் பிஎப்சி- ஜக் கேட்டுப் பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்

படிவம்- I தொடர்பான திருத்தி அமைக்கப்பட்ட குறிப்புகளை
https://www.cci.gov.in/sites/default/files/page_document/Form1.pdf
என்ற இணைய தளத்தில் காணலாம்



(Release ID: 1608935) Visitor Counter : 149


Read this release in: English , Marathi , Hindi