சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தால் பயனடைந்த மக்கள்

Posted On: 17 MAR 2020 1:27PM by PIB Chennai

பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் மக்கள் ஆரோக்கிய திட்டம் (AB-PMJAY) மதிப்பு மிகுந்ததாகும்.  இந்தத் திட்டத்தின் கீழ் பயனாளிகள் பயன்பெற  பதிவு செய்யவோ, உறுப்பினராகவோ தேவையில்லை. எனினும், இது பற்றிய விழிப்புணர்வை உருவாக்கவும், பயன்கள் எளிதாக கிடைக்கவும், பயனாளிகளின் அடையாளங்களை இந்தத் திட்டத்தின் கீழ் உறுதி செய்வதற்காக மின்னணு அட்டைகள் வழங்க வசதி செய்யப்பட்டுள்ளது.

 12.03.2020 வரை 12.8 கோடிக்கும் அதிகமான மின்னணு அட்டைகள் வழங்கப்பட்டு 90,49,900 மருத்துவமனைகள், நோயாளிகளை அனுமதிக்க அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 2,47,27,269 மின்னணு அட்டைகள் வழங்கப்பட்டு 10,94,075 மருத்துவமனைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் 1,12,436 மின்னணு அட்டைகள் வழங்கப்பட்டு, 1,152 மருத்துவமனைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

இந்தத் தகவல்களை  மாநிலங்களவையில் இன்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணைஅமைச்சர் திரு அஷ்வினி குமார் சவ்பே எழுத்து மூலமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

-----

(Release ID 1606702)

 

 

 



(Release ID: 1606823) Visitor Counter : 117


Read this release in: English , Urdu