பாதுகாப்பு அமைச்சகம்

பாதுகாப்புத் துறையில் அன்னிய நேரடி முதலீடு

Posted On: 16 MAR 2020 2:54PM by PIB Chennai

2014-ம் ஆண்டுக்குப் பின்னர், பாதுகாப்பு துறையில், இதுவரை ரூ.1561 கோடிக்கும் மேலாக அன்னிய நேரடி முதலீடுகள் வந்துள்ளதாகவும், 37 நிறுவனங்கள் இந்தப் பிரிவில் செயல்பட்டு வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

2001 ஆம் ஆண்டு மே மாதம் பாதுகாப்புத் தொழில் பிரிவில் தனியார் நிறுவனங்கள் சேர்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன் பின்னர் உலகின் பல்வேறு நிறுவனங்கள் நவீன தொழில்நுட்பங்களுடன் இந்தியாவில் தங்களது உற்பத்திப் பிரிவை இந்திய நிறுவனங்களின் கூட்டுறவுடன் தொடங்கின. இதன் மூலம் வேலைவாய்ப்பு உருவானதுடன் அன்னிய செலாவணி சேமிக்கப்பட்டது. உள்நாட்டு தயாரிப்பும் அதிகரித்தது.

அன்னிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் அவ்வப்போது மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. முதலீட்டுக்கு உகந்த சூழலை ஏற்படுத்தவும், நாட்டின் முதலீடுகளை பெருமளவில் ஈர்ப்பதற்கு தடையாக இருக்கும் கொள்கை அளவிலான இடையூறுகளை களைவதையும் இது நோக்கமாக கொண்டுள்ளது.

இத்தகவலை மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு.ஸ்ரீபத் நாயக் தெரிவித்துள்ளார்.

 

********



(Release ID: 1606615) Visitor Counter : 144


Read this release in: English , Urdu