குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
சூரியசக்தி சக்கரத் திட்டத்தின் நோக்கங்கள்
Posted On:
16 MAR 2020 2:33PM by PIB Chennai
மத்திய சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகம், நாடு முழுவதும் 50 சூரியசக்தி சக்கரத் தொகுப்புகளை ஏற்படுத்துவதற்காக, 2018-19 ஆம் ஆண்டில் சூரியசக்தி சக்கரத் திட்டத்தை தொடங்கியது.
இதன் நோக்கம் வருமாறு:
- ஊரகப் பகுதிகளில் சூரியசக்தி சக்கரத் தொகுப்புகளின் மூலம் நீடித்த வளர்ச்சி, பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குதல் ஆகியவற்றின் மூலம் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்தல்.
- கிராமப்புற பொருளாதாரத்தை ஊக்குவித்தல் மற்றும் நகர்ப்புறங்களுக்கு இடம் பெயர்வதைத் தடுக்க உதவுதல்.
- குறைந்த செலவிலான, நவீன தொழில்நுட்பங்களை ஊக்குவித்தல்.
இதுவரை சூரியசக்தி சக்கரத் திட்டத்தின் கீழ் 10 திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் ஒரு திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சுமார் 1 லட்சம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பை உருவாக்க இத்திட்டம் உதவும்.
மாநிலங்களவையில் இன்று மத்திய சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் திரு.நிதின் கட்கரி எழுத்து மூலம் அளித்த பதிலில், இத்தகவலைத் தெரிவித்தார்.
*****
(Release ID: 1606526)
(Release ID: 1606589)
Visitor Counter : 230