பிரதமர் அலுவலகம்

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த வலுவான உத்தியை வகுக்குமாறு சார்க் நாடுகளுக்கு பிரதமர் வலியுறுத்தல்

Posted On: 13 MAR 2020 1:51PM by PIB Chennai

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கு உரிய வலுவான உத்தியை வகுக்குமாறு சார்க் நாடுகளை பிரதமர் திரு நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.   பூமிக்கோளத்தை ஆரோக்கியமானதாக மாற்றுவதற்கு உரிய பங்களிப்பை செலுத்தி, உலகுக்கே முன்மாதிரியாக சார்க் நாடுகள் திகழ வேண்டும் என்றும் அதற்கு, சார்க் நாடுகள் ஒன்று சேர்ந்து காணொலி காட்சி  மூலம் விவாதித்து உரிய உத்திகளை வகுக்க வேண்டும் என்றும் அவர் யோசனை தெரிவித்துள்ளார்.

   இது தொடர்பாக பல ட்விட்டர் பதிவுகளை வெளியிட்டுள்ள பிரதமர், உலக மக்கள் தொகையில் குறிப்பிடத்தக்க இடத்தில் உள்ள  தெற்காசியா அதன் மக்களுக்கு ஆரோக்கியத்தை உறுதிசெய்து வருகிறது என்பதை எடுத்துக் காட்ட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.  கொவிட்-19 தொற்றை எதிர்த்து  கட்டுப்படுத்த  அரசு பல்வேறு மட்டத்தில் உரிய அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.

 

 

  

Narendra Modi

@narendramodi

நமது பூமிக்கோளம் கொவிட் -19 வைரசை எதிர்த்து போராடி வருகிறது. அதைக் கட்டுப்படுத்த அரசுகளும் மக்களும் பல்வேறு மட்டங்களில் முயற்சி செய்து வருகின்றனர்.

   உலக மக்கள் தொகையில் குறிப்பிடத்தக்க அளவைக் கொண்ட தெற்காசியா, தனது மக்கள் ஆரோக்கியமாக  வாழ்வதை உறுதி செய்யவேண்டும்.

 

Narendra Modi

@narendramodi

 

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சார்க் நாடுகளின் தலைவர்கள் வலுவான உத்தியை வகுக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.

 

   காணொலி காட்சி மூலம் நமது மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது குறித்து நாம் விவாதிக்க முடியும்.

   நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து உலகிற்கே முன்மாதிரியாக திகழ்வதுடன், ஆரோக்கியமான பூமிக்கோளத்தை உருவாக்க நமது பங்களிப்பைச் செலுத்த முடியும்.

----



(Release ID: 1606364) Visitor Counter : 163