PIB Headquarters
மத்திய அரசின் 8-ம் நிலை பணிகளுக்கு ஆள் தேர்வு
Posted On:
25 FEB 2020 7:41PM by PIB Chennai
மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் / துறைகள் / அமைப்புகளில் காலியாக உள்ள 8-ம் நிலை பணியிடங்களுக்கு ஆட்தேர்வு நடைபெற உள்ளது. 244 வகையான பதவிகளில் 1,157 காலிப்பணியிடங்களுக்கு (உத்தேசமாக) கணினி வழியில் தேர்வு நடைபெற உள்ளது.
இவற்றில் 9 வகையான பதவிகளுக்கான 32 காலிப்பணியிடங்களுக்கு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (தென்மண்டலம்) சென்னைக்கு உட்பட்டவையாகும். இவற்றுள் 7 வகையான பதவிகள் பட்டதாரி அளவிலும், ஒரு பதவி மேல்நிலைக் கல்வி மட்டத்திலும், ஒரு பதவி மெட்ரிக் அளவிலும் பூர்த்தி செய்யப்பட உள்ளது.
அனைத்து பெண் விண்ணப்பதாரர்களுக்கும் தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதே போன்று அரசு உத்தரவுகளின்படி இடஒதுக்கீட்டுச் சலுகையைப் பெற தகுதி உடைய எஸ் சி / எஸ் டி / முன்னாள் படைவீரர் / போர் வீரர்களின் விதவையர் உள்ளிட்ட பிரிவினருக்கும் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி மற்றும் பணிநிலை தொடர்பான விரிவான விவரங்கள், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ssc.nic.in மற்றும் அதன் தென்மண்டல அலுவலகத்தின் sscsr.gov.in வலைதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளன.
தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டும் 21.02.2020 முதல், 20.03.2020 (நள்ளிரவு மணி 11.59 வரை) விண்ணப்பிக்கலாம். இந்தப் பதவிகளுக்கான தேர்வு உத்தேசமாக 10.06.2020 முதல் 12.06.2020 வரை நடைபெறக் கூடும் என மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தென்மண்டல இயக்குநர் அறிவித்துள்ளார்.
------
(Release ID: 1604365)
Visitor Counter : 160