நிதி அமைச்சகம்
தொழில் முனைவோருக்கான முதலீட்டு ஒப்புதல் மையம் அமைக்கப்படும் : நிதியமைச்சர் அறிவிப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
01 FEB 2020 2:13PM by PIB Chennai
தொழில் முனைவு என்பது எப்பொழுதும் நமது நாட்டின் வலிமையாக இருந்து வருவதாகவும், இளைஞர்களும், இளம் பெண்களும் தமது தொழில்முனைவு திறன்களுடன் இந்தியாவின் வளர்ச்சிக்கு பங்களித்து வருவதாகவும், மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இன்று மக்களவையில், 2020-21ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய அவர், இவர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல், வேலைகளை உருவாக்குபவர்களாக உள்ளனர் என்று குறிப்பிட்டார்.
தொழில்முனைவு தொடர்பான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்காக “முதலீட்டு ஒப்புதல் மையம்” அமைக்கப்படும் என்று அறிவித்த நிதியமைச்சர், தொழில் முனைவில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்கவும், தடைகளை அகற்றி அவர்களுக்கு உதவவும் இது வழி வகுக்கும் என்றார்.
மாநிலங்களுடன் இணைந்து ஐந்து புதிய “பொலிவுறு நகரங்கள்”, அரசு – தனியார் துறை பங்கேற்புடன் உருவாக்கப்படும் என்று திருமதி. நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
செல்பேசிகள், மின்னணு கருவிகள், மின் கடத்தி ஆகியவற்றின் உற்பத்தியை ஊக்குவிக்க புதிய திட்டம் ஒன்றையும் அவர் அறிவித்தார்.
********
(Release ID: 1601438)
(வெளியீட்டு அடையாள எண்: 1601502)
வருகையாளர் எண்ணிக்கை : 203