குடியரசுத் தலைவர் செயலகம்

நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டு அமர்வில் மாண்புமிகு குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த் ஆற்றிய உரை

Posted On: 31 JAN 2020 12:30PM by PIB Chennai

மாண்புமிகு உறுப்பினர்களே,

1.  21 ஆம் நூற்றாண்டின் மூன்றாம் தசாப்தத்தின் தொடக்கத்தில் நிகழும் பாராளுமன்றத்தின் இந்தக் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். நான் மீண்டும் புத்தாண்டுக்கான எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், இந்த வரலாற்றுச் சந்தர்ப்பத்திற்கு சாட்சியாக இருக்கும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

2.  இந்த தசாப்தம் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானது. இந்த தசாப்தத்தில், நாம் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த தசாப்தத்தில், ஒரு புதிய இந்தியாவை உருவாக்க உத்வேகம் அளிப்பதற்கு நாம் அனைவரும் புதிய ஆற்றலுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். எனது அரசாங்கத்தின் முயற்சியால், இந்த தசாப்தத்தை இந்தியாவின் தசாப்தமாகவும், இந்த நூற்றாண்டினை இந்தியாவின் நூற்றாண்டாகவும் மாற்ற, கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு வலுவான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது.

3.  மகாத்மா காந்தியின் கிராம சுயராஜ்யமாக இருந்தாலும் சரி, சமூக நீதிக்கான பாபாசாகேப் அம்பேத்கரின் கொள்கையாக இருந்தாலும் சரி, நவீன இந்தியாவை உருவாக்கும் நேருஜியின் கனவாக இருந்தாலும் சரிசர்தார் பட்டேலின் ஒரே பாரதம் - சிறப்பான பாரதம் என்ற உறுதிப்பாடாக இருந்தாலும்சரிஅடித்தட்டு மக்களின் மேன்மைக்கான தீன் தயாள் உபாத்யாயாவின் குறிக்கோளாக இருந்தாலும்சரி, லோஹியா ஜியின் சமூக சமத்துவத்திற்கான தொலைதூரப் பார்வையாக இருந்தாலும் சரி, இந்திய மக்களாகிய  நாம் ஒன்றாக நின்று இந்த கனவுகளை நனவாக்குவோம்.

மாண்புமிகு உறுப்பினர்களே,

4. இந்த கனவுகளை நிறைவேற்றுவதில் நம் அனைவருக்கும் வழிகாட்டும் ஒளி இந்திய அரசியலமைப்பு ஆகும். சில வாரங்களுக்கு முன்பு, நவம்பர் 26 அன்று, அரசியலமைப்பின் 70 ஆண்டுகள் நிறைவடைந்தது. அன்று, நாட்டின் 12 கோடி குடிமக்கள், அரசியலமைப்பின் முன்னுரையை பகிரங்கமாக வாசித்து, அரசியலமைப்பின் மீதான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் புதுப்பித்துக் கொண்டனர்.

5.  கூடுதலாக, நம் நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் உரிமைகளையும் பாதுகாப்பதற்காக, நமது அரசியலமைப்பு நாட்டின் குடிமக்களை தங்கள் கடமைகளை நினைவில் வைத்திருக்கிறது. மேலும், நமது அரசியலமைப்பு ஜனநாயக செயல்முறைகள் மூலம் எடுக்கப்படும் முடிவுகள் நாட்டு மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் என்ற எதிர்பார்ப்பையும் வைக்கிறது. அதே சமயம், நாடாளுமன்றமும் இந்த சபையில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பினரும் நாட்டு மக்களின் நம்பிக்கையையும் விருப்பங்களையும் பூர்த்திசெய்து தேவையான சட்டங்களை உருவாக்கி, தேசிய நலனைக் காத்துக்கொள்ள வேண்டும் என்று நமது அரசியலமைப்பு எதிர்பார்க்கிறது.

மாண்புமிகு உறுப்பினர்களே,

6. கடந்த 7 மாதங்களில், பாராளுமன்றம் தனது செயல்பாட்டினை நடத்துவதில் புதிய தரங்களை அமைத்துள்ளதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த மக்களவையின் முதல் அமர்வின் செயல்திறன் கடந்த ஏழு தசாப்தங்களில் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது.

7.         எனது அரசாங்கத்தின் வலுவான அர்ப்பணிப்பு காரணமாக, முத்தலாக் மீதான சட்டம் முஸ்லிம் பெண்களுக்கு நீதியை உறுதி செய்வதோடு அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கிறது; குடிமக்களுக்கு புதிய உரிமைகளை வழங்கும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்; ஏழைகளின் சேமிப்பைப் பாதுகாப்பதற்காக கட்டுப்பாடற்ற வைப்புத் திட்டங்களை தடை செய்தல்; மோசடி சிட் பண்ட் நிதி திட்டங்களிலிருந்து ஏழைகளைப் பாதுகாக்கும் சிட் பண்ட் நிதி திருத்தச் சட்டம்; குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கான தண்டனையை அதிகரிக்கும் சட்டம்; சாலை கட்டணத்தை குறைப்பதை நோக்கமாகக் கொண்ட மோட்டார் வாகன திருத்தச் சட்டம், மூன்றாம் பாலினத்தவரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டம் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டங்கள் பலவும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

8. அரசியல் அமைப்புச் சட்டரீதியான தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றியமைக்காக உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு உறுப்பினர்களே,

9.    நமது ஜனநாயக நிறுவனங்களின் மீது நம் நாட்டு மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையே நமது ஜனநாயகத்தின் அடித்தளத்தை பலப்படுத்துகிறது. ராம ஜன்ம பூமி தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்குப் பின்னர் நாட்டு மக்கள் காண்பித்த முதிர்ச்சி பெரிதும் பாராட்டத்தக்கது. பரஸ்பர விவாதங்களும் விவாதங்களுமே, ஜனநாயகத்தை பலப்படுத்துகின்றன என்பதில் எனது அரசாங்கம் உறுதியாக உள்ளது. அதே நேரத்தில், எதிர்ப்புக்கள் என்ற பெயரில் நிகழ்த்தப்படும் எந்தவொரு வன்முறையும் சமூகத்தையும் தேசத்தையும் பலவீனப்படுத்துகிறது.

மாண்புமிகு உறுப்பினர்களே,

10.       ஒரு ஜனநாயகத்தில், மக்கள் வழங்கிய ஆணையை விட வேறு எதுவும் புனிதமானது அல்ல. புதிய இந்தியாவை உருவாக்க நாட்டு மக்கள் எனது அரசுக்கு இந்த ஆணையை வழங்கியுள்ளனர்.

தனது அறிவின் சக்தியால் 21-ஆம் நூற்றாண்டு உலகத்தை வளப்படுத்துகின்ற நமது பண்டைய கலாச்சாரத்தின் மகிமையில் பெருமை கொள்ளும் ஒரு புதிய இந்தியா

பழைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதோடு மட்டுமின்றி, வளர்ச்சியின் புதிய அத்தியாயங்கள் எழுதப்பட்டுள்ள ஒரு புதிய இந்தியா

ஏழை, தலித்துகள், பெண்கள், இளைஞர்கள், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினருக்கு போதுமான வசதிகள் மற்றும் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும் ஒரு புதிய இந்தியா

ஒவ்வொரு பிராந்தியமும் வளர்ச்சி பெறுகின்ற,  எந்தவொரு பிராந்தியமும் பின் தங்கிவிடாத, நவீன தொழில்நுட்பத்தின் நன்மைகள் சமூகத்தின் தொலைதூரப் பகுதியையும் சென்று எட்டுகின்ற ஒரு புதிய இந்தியா

மற்றும் நான்காவது தொழில்துறை புரட்சியின் முன்னணியில் இருக்கும் மற்றும் உலக அரங்கில் புதிய உயரங்களை எட்டும் புதிய இந்தியா.

மாண்புமிகு உறுப்பினர்களே,

11.  அத்தகைய ஒரு புதிய இந்தியாவை உருவாக்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதற்கும், ஒவ்வொரு துறையிலும் மாற்றங்களைக் கொண்டுவருவதற்கு எனது அரசாங்கம் பாராட்டத்தக்க வேகத்துடனும் தீர்க்கத்துடனும் செயல்படுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட அடிமட்டத்தில் ஏற்பட்ட சீர்திருத்தங்களின் விளைவுதான் பல பகுதிகளில் இந்தியாவின் உலகளாவிய தரவரிசையில் முன்னோடியில்லாத முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

12. உலக வங்கியின் வர்த்தகம் செய்வதை எளிதாக்கும் நாடுகளின் தரவரிசையில், இந்தியா 63வது இடத்திற்கு முன்னேறி, 79 இடங்கள் முன்னேறியுள்ளது. நொடிப்புகளுக்கான தீர்வு காணும் நாடுகளின் தரவரிசையில், இந்தியா 108 வது இடத்திலிருந்து 52 வது இடத்திற்கும், உலகளாவிய கண்டுபிடிப்பு தரவரிசையில் 74 வது இடத்திலிருந்து 52 வது இடத்திற்கும் முன்னேறியுள்ளது. லாஜிஸ்டிக்ஸ் செயல்திறன் குறியீட்டில் இந்தியா தனது சர்வதேச தரவரிசையை 10 புள்ளிகள் மேம்படுத்தியுள்ளது. உலக பொருளாதார மன்றத்தின் பயண மற்றும் சுற்றுலா போட்டித்திறன் தரவரிசையில் இந்தியா 52 வது இடத்திலிருந்து 34 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

13.  பல்வேறு பகுதிகளில் இந்த சீர்திருத்தங்கள் கடந்த 5-6 ஆண்டுகளில் இந்தியா தனது அஸ்திவாரங்களை எவ்வாறு வலுப்படுத்தியுள்ளது என்பதையும், புதிய இந்தியாவை உருவாக்க இந்திய மக்கள் எவ்வளவு ஆர்வமாக உள்ளனர் என்பதையும் காண சர்வதேச சமூகத்திற்கான அழைப்பாகவும் அமைகிறது.

மாண்புமிகு உறுப்பினர்களே,

14.  எனது அரசுஅனைவரோடும் இணைந்து, அனைவரின் நம்பிக்கையைப் பெற்று, அனைவரின் மேன்மைக்காகப் பாடுபடுவதுஎன்ற மந்திரத்தை பின்பற்றி, முழு அர்ப்பணிப்புடனும் நேர்மையுடனும் செயல்படுகிறது. 8 கோடி ஏழைகளுக்கு இலவச எரிவாயு இணைப்பு, 2 கோடி ஏழைகளுக்கு வீடுகள், சுமார் 38 கோடி ஏழைகளுக்கு வங்கிக் கணக்கு, ரூ .5 லட்சம் முதல் 50 கோடி வரை இலவச சிகிச்சை வசதி, 24 கோடி மக்களுக்கு காப்பீட்டுத் தொகை மற்றும் 2.5 கோடிக்கு மேல் இலவச மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளது; முழுமையான வெளிப்படைத்தன்மையுடன், எந்த பாகுபாடும் இல்லாமல் எனது அரசாங்கம் ஏழை மக்களுக்கு அதன் திட்டங்களின் நன்மைகள் மற்றும் வசதிகளுக்கு சமமான அணுகலை வழங்கியுள்ளது; இதனால் அனைத்து மதங்கள் மற்றும் அனைத்து பகுதிகளிலும், நாட்டின் மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது.

மாண்புமிகு உறுப்பினர்களே,

15.  வங்கத்தின் தலைசிறந்த மகன்களில் ஒருவரும் ஜவஹர்லால் நேரு தலைமையிலான  அமைச்சரவையில் தொழில்துறை அமைச்சராக இருந்தவருமான டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி மக்களவையில் கூறினார்: “ஒரு ஜனநாயக கூட்டாட்சி மாநிலத்தில், ஒரு தொகுதி பிரிவின் குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மற்றொரு பிரிவின் குடிமக்களின் உரிமைகளுடன் மாறுபாட்டு இருக்கலாகாது. ஜம்மு-காஷ்மீர் அல்லாத  இதர இந்திய  பகுதியில் உள்ள மக்களுக்கு நாங்கள் வழங்கிய அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்கான உரிமை ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு  இல்லையா? ”

16. இன்று, ஏழு தசாப்தங்களுக்குப் பிறகு, டாக்டர் முகர்ஜி உள்ளிட்ட கோடிக்கணக்கான சுதந்திரப் போராளிகளின் கனவு நனவாகி இருக்கிறது. ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் மக்களும், அந்த பகுதியைச் சேர்ந்த தலித்துகளும், பெண்களும் உரிமைகளைப் பெற்றிருப்பதால் நாடு முழுவதும் மகிழ்ச்சி அடைகிறது.  பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் அரசியலமைப்பின் 370 வது பிரிவு மற்றும் 35 பிரிவு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையால் ரத்து செய்யப்படுவது வரலாற்று ரீதியானது மட்டுமல்லாமல், ஜம்மு - காஷ்மீர் பகுதியின் சமமான வளர்ச்சிக்கும் வழி வகுத்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் மக்களை வளர்ச்சியின் முக்கிய நீரோட்டத்தில் இணைத்ததற்கு இந்த சபையின் மூலம்எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு உறுப்பினர்களே,

17. ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக்கின் விரைவான வளர்ச்சி, அவர்களின் கலாச்சாரம் மற்றும் மரபுகளைப் பாதுகாத்தல், வெளிப்படையான மற்றும் நேர்மையான நிர்வாகம் மற்றும் ஜனநாயக அதிகாரமளித்தல் ஆகியவை எனது அரசாங்கத்தின் முன்னுரிமைகள். ஜனாதிபதியின் ஆட்சியின் போது மற்றும் யூனியன் பிரதேசமாக மாறியதிலிருந்து, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய அனைத்து வளர்ச்சித் திட்டங்களும் வேகம் பிடித்துள்ளன.

18.  2018 ஆம் ஆண்டின் இறுதியில், ஜம்மு-காஷ்மீரின் 4,400 க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளில் தேர்தல்கள் அமைதியான முறையில் நடத்தப்பட்டன. சுதந்திரத்திற்குப் பிறகு முதல்முறையாக, 300 க்கும் மேற்பட்ட தொகுதி மேம்பாட்டு கவுன்சில்களுக்கான தேர்தல்களும் அங்கு நடத்தப்பட்டுள்ளன. அங்குள்ள மக்கள் இப்போது தூய்மை இந்தியா திட்டம், மின்வசதித் திட்டம், சுகாதார வசதிக்கான திட்டம்,  சமையல் எரிவாயு திட்டம், டிபிடி மற்றும் உணவு மானியத்தின் கீழ் வெளிப்படையான முறையில் முழு நன்மைகளைப் பெறுகின்றனர். பிரதமர் வீடுகட்டும் திட்டத்தின் கீழ், 2018 மார்ச் வரை ஜம்மு-காஷ்மீரில் சுமார் 3,500 வீடுகள் மட்டுமே கட்டப்பட். அதன்பிறகு இரண்டு ஆண்டுகளுக்குள், 24,000 க்கும் மேற்பட்ட வீடுகளின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

19. இது தவிர, இணைப்பு, நீர்ப்பாசனம், மருத்துவமனைகள், சுற்றுலா தொடர்பான திட்டங்கள் மற்றும் ..டி, ..எம், எய்ம்ஸ் போன்ற உயர்கல்வி நிறுவனங்களை நிறுவுதல் தொடர்பான பணிகளும் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய பகுதிகளில் விரைவாக நடந்து வருகின்றன. ஜம்மு-காஷ்மீரில் ஆப்பிளை நேரடியாக கொள்முதல் செய்வதற்கான பொறுப்பு நாஃபெட்டிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இது காஷ்மீர் பள்ளத்தாக்கின் ஆப்பிள் விவசாயிகளுக்குப் பயனளித்துள்ளது.

மாண்புமிகு உறுப்பினர்களே,

20. எனது அரசாங்கத்தின் பொது நலத் திட்டங்களின் வெற்றிகளும், அரசாங்கம் எடுத்த வரலாற்று சிறப்புமிக்க முடிவுகளும் நாட்டு மக்களின் எதிர்பார்ப்பையும், அரசாங்கத்தின் பொறுப்புகளையும் அதிகரித்துள்ளன.

21.  பல ஆண்டுகளாக, கர்தார்பூர் சாஹிப்பிற்கு எளிதில் சென்று வணங்க வேண்டும் என்று நாட்டு மக்கள் விரும்பினர். குருநானக் தேவ் ஜியின் 550 வது பிறந்த நாளை முன்னிட்டு எனது அரசு கர்தார்பூர் சாஹிப் தனிப்பாதையை சாதனை நேரத்தில் கட்டி அதை தேசத்திற்காக அர்ப்பணித்தது. குருநானக் தேவ் ஜியின் 550 வது பிறந்த நாளை உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் முழு மரியாதையுடன் கொண்டாடும் வாய்ப்பு எனது அரசுக்குக் கிடைத்திருப்பதும் ஒரு பாக்கியம் ஆகும்ஸ்ரீ குரு தேக் பகதூர் ஜியின் 400 வது பிறந்த நாள் எனது அரசாங்கத்தினால் முழு ஆடம்பரத்துடனும், பக்தியுடனும் கொண்டாடப்படும்.

மாண்புமிகு உறுப்பினர்களே,

22.  நாட்டின் தலைநகரான டெல்லியில் வசிக்கும் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள், ஒரு நாள் தங்கள் வீடுகளின் உரிமைகளைப் பெறுவோம்; கண்ணியமான வாழ்க்கையை வாழ முடியும் என்ற நம்பிக்கையில் பல ஆண்டுகளாக வாழ்ந்து வந்தனர். டெல்லியின் 1,700 க்கும் மேற்பட்ட காலனிகளில் வாழும் மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது.

23.  விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், அமைப்புசாரா துறைத் தொழிலாளர்கள் மற்றும் நாட்டின் சிறு வணிகர்கள் ஓய்வூதியத் திட்டம் குறித்து  எதிர்பார்ப்பைக் கொண்டிருந்தனர், இது வயதான காலத்தில் அவர்களுக்கு உதவியாக இருக்கும். ஓய்வூதியத் திட்டங்களின் கீழ் எனது அரசு அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றியது மட்டுமல்லாமல், இதுவரை சுமார் 60 லட்சம் பயனாளிகளையும் எட்டியுள்ளது.

24.  மகாத்மா காந்தி எப்போதும் தெய்வபக்திக்கு அடுத்ததாக தூய்மையைக் கருதினார். கடந்த ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜியின் 150 வது பிறந்தநாளை முன்னிட்டு, நாட்டின் கிராமப்புறங்கள் திறந்தவெளி கழிப்பிடங்களை ஒழித்து, தங்களை விடுவித்துக் கொள்வதன் மூலம் தேசத்தின் பிதாவுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளன. வரவிருக்கும் தசாப்தத்தில் நமது நகரங்களையும் கிராமங்களையும் மேலும் சுத்தமாகவும் அழகாகவும் மாற்றுவது இப்போது நம் அனைவருக்கும் பொறுப்பாகும்.

மாண்புமிகு உறுப்பினர்களே,

25.  இன்றும், நாட்டின் கிராமப்புறங்களில் குழாய் நீர் வழங்கல் இல்லாமல் சுமார் 15 கோடி வீடுகள் உள்ளன. எங்கள் சகோதரிகள் மற்றும் மகள்கள் வீட்டில் நீர் வழங்கல் இல்லாததால் அதிகபட்ச கஷ்டங்களை எதிர்கொள்கின்றனர். மேலும், அசுத்தமான நீர் முழு குடும்பத்தின் ஆரோக்கியத்தையும் மோசமாக பாதிக்கிறது. நாட்டின் ஒவ்வொரு கிராமப்புற வீடுகளுக்கும் போதுமான அளவு குடிநீர் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, எனது அரசு நீரே உயிராதாரம்’ என்ற இயக்கத்தை தொடங்கியுள்ளது. தனை மக்கள் இயக்கமாக மாற்ற மத்திய அரசு, அனைத்து மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து செயல்படுகின்றன. இந்தத் திட்டத்திற்கு எதிர்வரும் நாட்களில் ரூ. 3 லட்சத்து 60 ஆயிரம் கோடி செலவிடப்படும். நிலத்தடி நீர் மட்டம் வேகமாக குறைந்து கொண்டிருக்கும், நாட்டின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய ஏழு மாநிலங்களில் சிறப்பு கவனம் செலுத்தி எனது அரசு  அடல் பிகாரி வாஜ்பேயின் பெயரில் ஒரு திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

மாண்புமிகு உறுப்பினர்களே,

26.  அனைவரோடு சேர்ந்து, அனைவரின் மேன்மைக்காக, அனைவரின் நம்பிக்கையுடன் செயல்படுவது என்ற எனது அரசாங்கத்தின் மந்திரம் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒவ்வொரு பகுதிக்கும் நாட்டின் ஒவ்வொரு மாநிலத்துக்கும் பொருந்தும். மூகத்தில் புறந்தள்ளப்பட்ட ஒரு நபரின் முன்னேற்றத்திற்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பது போலவே, எஞ்சியிருக்கும் பகுதிகளின் வளர்ச்சியிலும் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் எனது அரசு நம்புகிறது.

27.  112 மாவட்டங்களுக்கு, அபிலாஷைகள் கொண்ட மாவட்டங்கள் என்ற  நிலையை வழங்கியதன் மூலம், அங்கு வாழும் ஏழைகளின் வளர்ச்சி தொடர்பான ஒவ்வொரு திட்டத்திற்கும் அரசாங்கம் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. இந்த மாவட்டங்களில் அனுபவம் வாய்ந்த, இளமையான அதிகாரிகளின் சரியான கலவையை மாநில அரசுகள் நிலைநிறுத்தியுள்ளன. இதன் விளைவாக, இந்த மாவட்டங்களில் பல வளர்ச்சி குறியீடுகளில் கவனத்தை ஈர்க்கக்கூடிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பல மாவட்டங்கள் இப்போது அவற்றின் மாநில சராசரிக்கு அருகில் வந்துள்ளன. அபிலாஷைகள் கொண்ட ஒவ்வொரு மாவட்டத்தின் குழுவினருக்கும் இந்த மன்றத்தின் மூலம் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு உறுப்பினர்களே,

28. டெல்லியில் இருந்து வடகிழக்கின் வுதீக தூரத்தை விட, உணர்ச்சி துண்டிப்புதான் இப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. எனது அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் அயராது உழைத்து இந்த நிலைமையை மாற்றியுள்ளது. இணைப்பை மேம்படுத்துவதற்கும், உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும், மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்கும் வடகிழக்கில் இதற்கு முன்பில்லாத வகையில், வேகத்தில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசாங்கத்தின் இந்த முயற்சிகளின் விளைவாக, 2022 க்குள், சிக்கிம், மிசோரம், மணிப்பூர் மற்றும் நாகாலாந்து தலைநகரங்கள் இரயில் வலையமைப்போடு இணைக்கப்படும். அகர்தலா-அகவுரா ரயில் இணைப்பிற்கான பணிகளும் வேகமாக நடந்து வருகின்றன. 2022 ஆம் ஆண்டில், அருணாச்சலப் பிரதேசத்தில்ஹோலோங்கிஎன்ற இடத்தில் கட்டப்படும் புதிய விமான நிலையத்தின் கட்டுமானமும் நிறைவடையும்.

29. இது தவிர, குவஹாத்தியில் எய்ம்ஸ் கட்டுமானம், நுமலிகரில் உயிர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மணிப்பூரில் விளையாட்டு பல்கலைக்கழகம் ஆகியவையும் வேகமாக முன்னேறி வருகின்றன. சமீபத்தில், வடகிழக்கு எரிவாயு கட்டம் திட்டத்திற்காக சுமார் 9,000 கோடி ரூபாயை அரசு அனுமதித்துள்ளது. இந்த திட்டம் வடகிழக்கின் 8 மாநிலங்களிலும் எரிவாயு அடிப்படையிலான பொருளாதாரத்தின் அடித்தளத்தை அமைக்கும்.

30.  5 தசாப்தங்களாக பழமையான போடோ சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய மற்றும் அசாம் அரசுகள் சமீபத்தில் போடோ அமைப்புகளுடன் வரலாற்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தத்தின் மூலம், 4,000 க்கும் மேற்பட்ட உயிர்களைக் கொன்ற ஒரு சிக்கலான பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் பின்னர், போடோ சமூகத்தின் வளர்ச்சிக்காக அரசு ரூ. 1,500 கோடியை செலவிடும். இதேபோல், திரிபுரா, மிசோரம், மத்திய அரசு மற்றும் புரு சமூகத்திற்கு இடையிலான மற்றொரு மைல்கல் ஒப்பந்தம் பல தசாப்தங்களாக பழமையான பிரச்சினையைத் தீர்ப்பது மட்டுமல்லாமல், புரு சமூகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கையை உறுதி செய்துள்ளது.

மாண்புமிகு உறுப்பினர்களே,

31.    நாட்டின் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளை வளர்ச்சியின் மைய நீரோட்டத்திற்கு கொண்டு வர எனது அரசு உறுதிபூண்டுள்ளது. முதன்முறையாக, குறைந்தபட்ச அரசு ஆதரவு விலையின் நன்மைகளை வன விளைபொருட்களுக்கு அரசு விரிவுபடுத்தியுள்ளது. எனது அரசாங்கத்தின் சிறப்பு முக்கியத்துவம் பழங்குடியினரின் உடல்நலம், கல்வி மற்றும் திறன் மேம்பாடுசில வாரங்களுக்கு முன்புதான், நாட்டில் 400 க்கும் மேற்பட்ட ஏக்லவ்யா மாதிரி குடியிருப்பு பள்ளிகளை திறக்கும் திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது. சமீபத்தில், மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு அடுத்த பத்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மாண்புமிகு உறுப்பினர்களே,

32.  சிறுபான்மை சமூகத்தின் சமூக, பொருளாதார, கல்வி முன்னேற்றத்திற்காக எனது அரசாங்கம் தொடர்ந்து முயன்று வருகிறது. ஹுனார் ஹாத் மூலம், சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த 2 லட்சம் 65 ஆயிரம் திறமையான கைவினைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. முஸ்லீம் மாணவர்களுக்கு தங்களது கல்வியைத் தடையின்றி தொடர உதவுவதற்காக உதவித்தொகை பெருமளவில் வழங்கப்பட்டுள்ளது.

33.   எனது அரசாங்கத்தின் சிறப்புக் கோரிக்கையின் பேரில், சவுதி அரேபியாவால் இதற்கு முன்பில்லாத வகையில் ஹஜ் ஒதுக்கீட்டை அதிகரித்தது, இதன் விளைவாக 2 லட்சம் இந்திய முஸ்லிம்கள் இந்த முறை ஹஜ் நிகழ்த்தினர். ஹஜ் யாத்திரைக்கான முழு செயல்முறையும் டிஜிட்டல் மற்றும் ஆன்லைனில் செய்யப்பட்ட முதல் நாடு இந்தியா. நாடு முழுவதும் வக்ஃப் சொத்துக்களை 100 சதவீதம் டிஜிட்டல் மயமாக்குவதையும் அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது, இதனால் இந்த சொத்துக்கள் முஸ்லிம் சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்தப்படலாம்.

மாண்புமிகு உறுப்பினர்களே,

34.  மாற்றுத் திறனாளிகளின் நம்பிக்கைகள் மற்றும் விருப்பங்களை நிறைவேற்றுவதில் எனது அரசு மிகுந்த உணர்திறனுடன் செயல்படுகிறது. இடஒதுக்கீடு அதிகரிப்பு மற்றும் சட்ட வலுவூட்டல் ஆகியவற்றுடன், 1000 க்கும் மேற்பட்ட அரசு கட்டிடங்கள் மற்றும் 700 க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் மாற்றுதிறனாளிகள் அணுகும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. கடந்த 5 ஆண்டுகளில், இதற்கென சிறப்பு முகாம்களை ஏற்பாடு செய்து ரூ .900 கோடி மதிப்புள்ள கருவிகள், உதவி சாதனங்கள் மாற்றுத் திறனாளிகளிடையே  விநியோகிக்கப்பட்டன. மாற்றுத் திறனாளிகளின் தேசிய தரவுத்தளத்தை அரசாங்கம் உருவாக்கி வருகிறது, மேலும் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு என இணையவழிப்பட்ட தனி அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. எனது அரசு, அதன் முந்தைய காலப்பகுதியில், இந்திய சைகை மொழி அகராதியைத் தயாரிப்பதற்கான ஒரு சிறப்பு முயற்சியை மேற்கொண்டது. 6 ஆயிரம் சொற்களின் சிறப்பு அகராதி தயாரிக்கப்பட்டுள்ளது என்பதை இந்த சபையில் தெரிவிப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

மாண்புமிகு உறுப்பினர்களே,

35.  அனைத்து மதங்களுக்கும் சம மரியாதை என்ற கொள்கையை இந்தியா எப்போதும் நம்புகிறது. இருப்பினும், பிரிவினையின் போது, ​​இந்தியா மற்றும் அதன் மக்கள் மீதான இந்த நம்பிக்கை மிகவும் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானது. பிரிவினைக்குப் பின்னர் நிலவிய சூழலில், தேசத் தந்தை மகாத்மா காந்தி கூறினார்: “அங்கு வாழ விரும்பாத பாகிஸ்தானின் இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் இந்தியாவுக்கு வரலாம். அவர்களுக்கு இயல்பான வாழ்க்கையை உறுதி செய்வது இந்திய அரசின் கடமையாகும். ” பல தேசிய தலைவர்களும் அரசியல் கட்சிகளும் அவ்வப்போது மகாத்மா காந்தியின் இந்த யோசனையை ஆதரித்து  பிரச்சாரம் செய்துள்ளனர். நமது தேசத்தை நிறுவிய மகாத்மாவின் இந்த விருப்பத்தை மதிக்க வேண்டியது நமது பொறுப்பு. குடியுரிமை திருத்தச் சட்டத்தை இயற்றுவதன் மூலம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இந்த விருப்பத்தை நிறைவேற்றியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். காந்திஜியின் 150 வது பிறந்த நாளை நாடு கொண்டாடும் ஒரு நேரத்தில், நீங்கள் அனைவரும் இந்த உணர்வுக்கு மிகுந்த கவனம் செலுத்தியுள்ளீர்கள். இதற்காக நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும்  நான் வாழ்த்துகிறேன்.

மாண்புமிகு உறுப்பினர்களே,

36.  காலப்போக்கில் பாகிஸ்தானில் சிறுபான்மையினர் மீதான அட்டூழியங்கள் அதிகரித்ததற்கு நாம் அனைவரும் சாட்சியாக இருந்தோம். சமீபத்தில் நங்கனா சாஹிப்பில் என்ன நடந்தது என்பதை நாம் அனைவரும் பார்த்தோம். பாகிஸ்தானில் நிகழும் அட்டூழியங்களை உலக சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்வது நம் அனைவரின் பொறுப்பாகும்.

37.  பாகிஸ்தானில் சிறுபான்மையினர் மீதான அட்டூழியங்களைக் கண்டிக்கும் அதே வேளையில், உலக சமூகம் இதை அறிந்து கொள்ளவும், இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் கேட்டுக்கொள்கிறேன்.

மாண்புமிகு உறுப்பினர்களே,

38. இந்தியாவை நம்புகிற, இந்திய குடியுரிமையைப் பெற விரும்புகிற உலகின் அனைத்து மதங்களைச் சேர்ந்த மக்களுக்கும் குடியுரிமை பெறுவதற்கான நடைமுறைகள் இன்னமும் மாறாமல்தான் உள்ளன என்பதை எனது அரசாங்கம் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது. எந்தவொரு நம்பிக்கையுள்ளவரும் இந்த செயல்முறைகளைப் பின்பற்றி இந்தியாவின் குடிமகனாக முடியும். இந்தியாவில் தஞ்சம் புகுந்தவர்களுக்கு குடியுரிமை வழங்குவது எந்தவொரு பகுதியிலும், குறிப்பாக வடகிழக்கில் எந்தவிதமான பாதகமான கலாச்சார தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதை உறுதி செய்ய அரசாங்கம் பல ஏற்பாடுகளை செய்துள்ளது.

மாண்புமிகு உறுப்பினர்களே,

39.  இந்தியாவின் மகத்தான கவிஞரான திருவள்ளுவர் சொன்னார்:   “ஒரு சக்கரத்தின் அச்சாணியைப் போல, ஒரு விவசாயிதான் உலகம் முழுவதையும் தன் மீது சுமையாக வைத்திருக்கிறார். நிலத்தைப் பயிரிட முடியாத மக்களின் சுமையை அவர்தான் சுமக்கிறார்.”

40.  யாருடைய கடின உழைப்பால் நாம் உணவு தானியத்தில் தன்னிறைவு கொண்டுள்ளோமோ, உணவு வழங்கும் வள்ளலாக இருக்கும் எங்கள் விவசாயிகளுக்கு நம் நாடு கடன்பட்டிருக்கிறது. தன்னலமின்றி நாட்டுக்கு சேவை செய்யும் விவசாயிகளின் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தையும் கிராமப்புறங்களில் வளர்ச்சியையும் கொண்டு வருவது எனது அரசாங்கத்தின் முன்னுரிமைகள் ஆகும். கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்த அரசு வரும் ஆண்டுகளில் ரூ. 25 லட்சம் கோடி செலவிட உள்ளது. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதை நோக்கமாகக் கொண்ட வருமான மைய முறையை உருவாக்குவதற்கான ஒரு நீண்டகால உத்தியுடன் எமது அரசாங்கம் செயல்பட்டு வருகிறது.

மாண்புமிகு உறுப்பினர்களே,

41.  பிரதமர் கிசான் சம்மான் நிதியின் கீழ், 8 கோடிக்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்களின் வங்கிக் கணக்குகளில் ரூ .43 ஆயிரம் கோடிக்கு மேல் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இந்த மாதம் ஜனவரி 2 ஆம் தேதி, 6 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு ரூ .12 ஆயிரம் கோடியை ஒரே நேரத்தில் மாற்றியதன் மூலம் எனது அரசு மேலும் ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளது.

42.  உள்ளீட்டு செலவில் ஒன்றரை மடங்கு விலையினை விவசாயிகளுக்கு வழங்க எனது அரசு அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. காரீப் மற்றும் ரபி பயிர்களுக்கு குறைந்தபட்ச அரசு ஆதரவு விலை  தொடர்ந்து அதிகரிப்பது இந்த திசையில் ஒரு படியாகும். அரசாங்கத்தின் முயற்சியால் பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் ஆகியவற்றின் கொள்முதல் 20 மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது.

மாண்புமிகு உறுப்பினர்களே,

43.  எனது அரசாங்கம் மாற்று விவசாய முறைகளையும் ஊக்குவித்து வருகிறது. கொத்து அடிப்படையிலான தோட்டக்கலை மூலம், கரிம வேளாண்மையும் ஊக்குவிக்கப்பட்டு பிரச்சாரம் செய்யப்படுகிறது. இந்த பகுதியில் அரசு மேற்கொண்ட முயற்சிகளால் தேன் உற்பத்தி சுமார் 60 சதவீதம் அதிகரித்துள்ளது. தேன் ஏற்றுமதியும் இரு மடங்காக அதிகரித்துள்ளது. இந்த சாதனையை மேலும் கட்டியெழுப்புவதற்காக, தேசிய தேனீ வளர்ப்பு மற்றும் தேன் மிஷனுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

44.  மீனவர்களின் வருவாய் மற்றும் மீன் உற்பத்தியை இரட்டிப்பாக்குவதற்கான இரட்டை நோக்கங்கள் புதிதாக உருவாக்கப்பட்ட மீன்வளத் துறை மூலம் அடையப்பட வேண்டும். நாட்டின் 50 கோடிக்கும் மேற்பட்ட கால்நடைகளின் ஆரோக்கியத்தை உறுதி செய்யும் நோக்கில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தேசிய விலங்கு நோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ், கால்நடைகள் கால் மற்றும் வாய் நோயிலிருந்து பாதுகாக்க நோய்த்தடுப்பு மற்றும் பிற நடவடிக்கைகளுக்கு ரூ .13 ஆயிரம் கோடி செலவிடப்படுகிறது.

மாண்புமிகு உறுப்பினர்களே,

45.  இயற்கை பேரழிவுகளிலிருந்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க எனது அரசு மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. பிரதமர் பயிர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக, ஐந்தரை கோடிக்கும் அதிகமான விவசாயிகள் மிகக் குறைந்த பிரீமியத்தில் பயிர் காப்பீட்டுத் தொகையைப் பெறுகின்றனர். இந்த திட்டத்தின் கீழ் கடந்த மூன்று ஆண்டுகளில், விவசாயிகளின் உரிமைகோரல் ரூ 57 ஆயிரம் கோடி ஆகும்.

46.  விவசாயிகளுக்கான ஆன்லைன் தேசிய சந்தையான -நாமின் தாக்கமும் தென்படத் தொடங்கியுள்ளது. 1 கோடியே 65 லட்சம் விவசாயிகளும், நாட்டின் 1 லட்சத்து 25 ஆயிரம் வர்த்தகர்களும் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளனர். இந்த தளத்தின் மூலம் சுமார் ரூ. 90 ஆயிரம் கோடி மதிப்புள்ள வணிகம் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. இந்த தசாப்தத்தில் மின்-நாமின் செயல்திறனை மேலும் மேம்படுத்துவதற்காக, 400க்கும் மேற்பட்ட புதிய மண்டிகளை அதனுடன் இணைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

மாண்புமிகு உறுப்பினர்களே,

47.  தனிநபரின் ஆரோக்கியம் அவர்களது குடும்ப மேம்பாட்டுக்கு மட்டுமின்றி நாட்டின் மேம்பாட்டிற்கும் முக்கியமானது. எனது அரசு சுகாதாரத்தைப் பொறுத்தவரை ஒட்டுமொத்த அணுகுமுறையுடன் பணியாற்றுகிறது. நோய்த்தடுப்பு மற்றும் நோய் சிகிச்சை ஆகிய ஒவ்வொரு நிலையிலும் கடுமையான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.  தூய்மை இந்தியா இயக்கம், நீர்வள ஆதார இயக்கம், ஊட்டச்சத்து இயக்கம், உடல்தகுதி இயக்கம், ஆயுஷ்மான் பாரத் திட்டம் போன்ற அரசின் பல திட்டங்கள் மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு பங்களிக்கின்றன.

48.  நாட்டின் சுகாதாரத் துறையில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் விரிவான தாக்கம் கண்கூடாக உள்ளது. பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின்கீழ், இதுவரை 75 லட்சம் ஏழைகள் இலவச சிகிச்சையைப் பெற்றுள்ளனர். 27,000-க்கும் மேற்பட்ட ஆரோக்கியம் மற்றும் உடல்நல மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

மாண்புமிகு உறுப்பினர்களே,

49.   எனது அரசு மேற்கொண்ட முடிவுகள் காரணமாக ஏழைகள் மற்றும் நடுத்தர வகுப்பினரின் மருத்துவ செலவினம் வெகுவாகக்  குறைந்துள்ளது.  ஆயிரத்துக்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலை உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டதை அடுத்து, நோயாளிகளுக்கு ரூ.12,500 கோடி மிச்சப்படுத்தப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான நோயாளிகளுக்கு விலை குறைக்கப்பட்ட ஸ்டென்டுகள், முழங்கால் செயற்கை மூட்டுகள் ஆகியவை பெரிய அளவில் உதவியாக அமைந்துள்ளன.  6,000-க்கும் மேற்பட்ட, மக்கள் மருந்து மையங்களிலிருந்து, ஒவ்வொரு நாளும் 5 முதல் 7 லட்சம் வரையிலான நோயாளிகள் தங்களது நோய்களுக்கான மருந்துகளை குறைந்த விலையில் பெற்று வருகிறார்கள்.

50.   தேசிய மருத்துவ ஆணையத்தை அமைத்ததன்  மூலம் எனது அரசு மருத்துவக் கல்வி மற்றும் மருத்துவ சிகிச்சையில் சீர்திருத்தங்களுக்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.  இந்த ஆண்டு 75 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  இதனையடுத்து, எம்பிபிஎஸ் இடங்களில் 16,000-மும், மருத்துவ மேற்படிப்பு இடங்களில் சுமார் 4,000-மும் கூடுதலாக உருவாக்கப்படும்.  மேலும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 22 எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது, இவற்றின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

51.  மகளிர் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு எனது அரசு சிறப்பு முயற்சிகளை எடுத்து வருகிறது. பிரதமரின் அன்னையைப் போற்றுவோம் திட்டத்தின்கீழ் சுமார் ரூ.5,000 கோடியை நாட்டின் ஒரு கோடியே 20 லட்சம் பெண்களின் வங்கிக் கணக்குகளில் அரசு நேரடியாக செலுத்தியுள்ளது.  இந்திரதனுஷ் இயக்கத்தின்கீழ், 3 கோடி 50 லட்சம் குழந்தைகளுக்கும், சுமார் 90 லட்சம் கருவுற்றப் பெண்களுக்கும் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.  தலித் மக்கள் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் இந்தத் திட்டங்கள் நல்ல பயனளித்திருப்பது கண்கூடு.  எனது அரசு ஒரு ரூபாய் விலை உள்ள ஆக்சோ-உயிரி முறையில் மக்கக்கூடிய சானிட்டரி நாப்கின்களை தயாரிக்கத் தொடங்கியுள்ளது.

மாண்புமிகு உறுப்பினர்களே,

52.  மகளிர் தொழில் முனைவுத்திறன் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்த எனது அரசு முயற்சி எடுத்து வருவதால், ஆறு கோடியே 60 லட்சத்திற்கும் கூடுதலான பெண்கள் சுயஉதவிக் குழு இயக்கத்தில் ஏற்கனவே சேர்ந்துள்ளனர்.  இந்தப் பெண்களுக்கு மிகக் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. சம வாய்ப்புகள் வழங்குவதற்காக முதல் முறையாக நிலத்தடி சுரங்கங்களிலும், திறந்த நிலை சுரங்கங்களிலும், இரவுநேரப் பணியாற்றுவதற்குப் பெண்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல பாலின சமத்துவத்தை மேம்படுத்த முதல் முறையாக சைனிக் பள்ளிகளில் பெண்கள் சேருவது அனுமிக்கப்பட்டுள்ளது. ராணுவக் காவல் படையில் பெண்களை நியமிக்கும் நடைமுறை தொடங்கியுள்ளது. இந்திய விமானப்படையின் போர்ப்பிரிவில் பாதுகாப்பு இணைப்பு அதிகாரிகளாக பணியாற்றுவதற்கு பெண்களுக்கு முதல் முறையாக புதிய வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.

மாண்புமிகு உறுப்பினர்களே,

53.  பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் உணர்வுடன் எனது அரசு பணியாற்றுகிறது. மகளிர் பாதுகாப்பை மேம்படுத்த நாடெங்கிலும் 600-க்கும் மேற்பட்ட ‘ஒரு நிறுத்த மையங்கள்’ அமைக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கு எதிராக குற்றம் புரிவோரை இனம் காண தேசிய அளவில் தரவு தளம் அமைக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் விரைவாக நீதி கிடைப்பதை உறுதி செய்ய நாடெங்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விரைவுத் தனி நீதிமன்றங்கள் அமைக்கப்பட உள்ளன.  நாட்டின் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் மகளிர் உதவி பிரிவுகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  குழந்தைகளுக்கு  எதிரான பாலியல் குற்றங்கள் போன்ற கொடுமையான குற்றங்களுக்கு மரணதண்டனை வரை அளிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

மாண்புமிகு உறுப்பினர்களே,

54. 21-ஆம் நூற்றாண்டு அறிவுசார் நூற்றாண்டு என குறிப்பிடப்படுகிறது.  இந்த வகையில் அரசு, அறிவுசார் துறைகளில் இளைஞர்களுக்கு தலைமைப் பண்புகளை அளிக்க முன்னுரிமை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.  ஆராய்ச்சி, புதுமை படைப்பு, பாதுகாப்பான வளர்ச்சிப் பருவம் மற்றும் தொடக்கநிலை நிறுவனங்கள் சார்ந்த துறைகளில் இந்த பத்தாண்டில் இளைஞர்கள் முன்னிலையில் இருப்பார்கள். இந்த வகையில் அரசு எடுத்து வரும் கொள்கை முடிவுகளால் இளைஞர்கள் தொடர்ந்து பயனடைந்து வருகிறார்கள். இன்றைய நிலையில், இந்தியா, தொடக்க நிலை நிறுவனங்களைப் பொறுத்த வரை, உலகின் 3-ஆவது மிகப்பெரிய நாடாக உள்ளது. ‘தொடங்கிடு இந்தியா’ இயக்கத்தின் கீழ், நாடெங்கும் 27,000 புதிய தொடக்க நிலை நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.  கடந்த 5 ஆண்டுகளில் நாட்டில் வழங்கப்பட்டுள்ள பதிவு உரிமைகளின் எண்ணிக்கை நான்கு மடங்கு உயர்ந்துள்ளது, வர்த்தக குறியீடுப் பதிவுகள் 5 மடங்கு உயர்ந்துள்ளது.

55. திறன் இந்தியா இயக்கம் மற்றும் தேசிய தொழில் பழகுநர் மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றின் மூலம் இளைஞர்களுக்கு சுயவேலைவாய்ப்புக்குத் தேவையான நிதி வழங்கப்படுகிறது.  முத்ரா திட்டத்தின்கீழ் 5 கோடியே 54 லட்சத்துக்கும் கூடுதலான புதிய தொழில் முனைவோர், கடன் வசதியைப் பெற்றுள்ளனர். இந்தத் திட்டத்தின்கீழ் இதுவரை ரூ.10 லட்சம் கோடிக்கும் அதிகமான கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

மாண்புமிகு உறுப்பினர்களே,

56. கல்வியின் தரம் மற்றும் புதுமைப் படைப்பு ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட திட்டங்களுக்கு எனது அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. உயர்கல்வி நிதியுதவி முகமையின் மூலம் நாட்டிலுள்ள 75 கல்வி நிறுவனங்களுக்கு நவீனமயமாக்கலுக்கென ரூ.37,000 கோடிக்கும் அதிகமானத் தொகை வழங்கப்பட்டுள்ளது.  கேந்திரிய வித்யாலயாக்களில் சுமார் 7,000 ஆசிரியர்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் 12,000 ஆசிரியர்கள் நியமனத்திற்கு நடவடிக்கையை அரசு தொடங்கியுள்ளது. ஆன்லைன் கல்வி முறையை வலுப்படுத்துவதற்கு அரசு “ஸ்வயம்-2” திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

57. நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கப்பட்டுள்ள பெண்களின் எண்ணிக்கை, ஆண்களின் எண்ணிக்கையை விட அதிகமாகியுள்ளது என்பதைத் தெரிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

மாண்புமிகு உறுப்பினர்களே,

58. நமது இளைஞர்கள் இந்தியாவை உலகின் மிகப்பெரிய விளையாட்டு ஆற்றல் மையமாக உருவாக்கும் திறன் பெற்றவர்கள். கேலோ இந்தியா, ஒலிம்பிக் வெற்றி மேடைத் திட்டம் போன்ற  பல்வேறு திட்டங்களின் கீழ், இளம் விளையாட்டு வீரர்கள் அடையாளம் காணப்பட்டு, உயர்நிலைப் போட்டிகளில் பங்கேற்கும் வகையில், அவர்களுக்குத் தேவையான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.  கேலோ இந்தியா திட்டத்தின் 3-வது கட்டம் குவஹாத்தியில் சில நாட்களுக்கு முன்னதாக வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்தப் போட்டியில் மொத்தம் 80 புதிய தேசிய சாதனைகள் நிகழ்த்தப்பட்டன.  இதில் 56 சாதனைகளை பெண்கள் நிகழ்த்தினர்.

மாண்புமிகு உறுப்பினர்களே,

59. சுதந்திரம் நமது பிறப்புரிமை என்பதற்கு அழைப்பு விடுத்த மாபெரும் விடுதலைப் போராட்ட வீரர் பாலகங்காதர திலகரின் 100-ஆவது நினைவு தினம் இந்த ஆண்டு ஆகஸ்ட் ஒன்றாம் தேதி வருகிறது.  சுயராஜ்ஜியம் கிடைக்கப் பெற்ற பிறகு, நாடு தற்போது Suraaj நோக்கி நடைபோட்டு வருகிறது.  Suraaj இலக்கை நோக்கி விரைவாக முன்னேறி வரும் எனது அரசு மூன்று நிலைகளில் பணியாற்றி வருகிறது. 

  • முதலாவது – அரசுப் பணிக்கலாச்சாரத்தை மாற்றியமைத்தல்  மற்றும் நிறுவனங்களை வலுப்படுத்துதல்,
  • இரண்டாவது – வெளிப்படைத் தன்மையை மேம்படுத்த நவீன தொழில்நுட்ப பயன்பாடு,
  • மூன்றாவது – அடித்தள நிலையில் ஆரோக்கியமான போட்டி மற்றும் பொதுமக்கள் பங்கேற்பை மேம்படுத்துதல்,

மாண்புமிகு உறுப்பினர்களே,

60. “குறைந்தபட்ச அரசு அதிகபட்ச ஆளுகை” என்ற அடிப்படைக் கொள்கையைப் பின்பற்றி பல்வேறு சீர்திருத்தங்களை அரசு மேற்கொண்டுள்ளது. சமீபத்தில் அகற்றப்பட்ட, மேலும் 58 சட்டங்களைச் சேர்த்து, அரசு இதுவரை அகற்றியுள்ள சட்டங்களின் எண்ணிக்கை 1,500 ஆகியுள்ளது. வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்காக ஒவ்வொரு நிலையிலும் ஆள்சேர்ப்பு நடவடிக்கையில் சீர்திருத்தங்கள் நடைபெற்று வருகின்றன. பெரும்பாலான குருப்-சி பதவிகள் மற்றும் குருப்-பி பதவிகளுக்கான, நேர்முகத் தேர்வை கைவிட்ட அரசின் முடிவு காரணமாக இளைஞர்கள் பயனடைந்துள்ளனர்.

மாண்புமிகு உறுப்பினர்களே,

61. திட்டங்கள் வெற்றிகரமாக அமலாக்கப்படுவதற்கு துறைகளிடையே ஒருங்கிணைப்புக் குறைவும் நிர்வாகத்தில் தேக்கநிலை குழிகளும் அகற்றப்பட வேண்டியது மிகவும் முக்கியமானது. இந்த வகையில் 20 சிவில் பணிகள் சார்ந்த அதிகாரிகளுக்கு சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொது அடிப்படைப் பயிற்சி முக்கியமான நடவடிக்கையாகும்.  சமீபத்தில் இந்திய ரயில்வே நிர்வாகமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.  நாட்டில் செயல்படும் பல்வேறு தீர்ப்பாயங்களை மேலும் திறம்பட்டதாக மாற்றுவதற்கு நடுவர்மன்ற அமைப்புகளும் சீர்திருத்தப்பட்டு வருகின்றன. திட்டங்களுக்கு இலக்குகளை சிறப்பாகக் கண்டறிந்து செயல்படுத்துவதற்கென புதிய அமைச்சகங்கள் உருவாக்கப்பட்டன.  திறன்மேம்பாட்டு அமைச்சகம், நீர்வள அமைச்சகம் ஆகியவற்றை அரசு உருவாக்கியது ஒரு உதாரணமாகும்.

மாண்புமிகு உறுப்பினர்களே,

62. அரசு சேவைகள் மற்றும் பயன்களை விரைவாகவும், துல்லியமாகவும் வழங்குவது எனது அரசின் முத்திரை நடவடிக்கையாகும். தொழில்நுட்பத்தை மிகப்பெரிய அளவில் நல்ல ஆளுகையின் அடிப்படையாக பயன்படுத்துவதால், இது சாத்தியமாகியுள்ளது. பயனாளிகளை வெளிப்படையான முறையில் அடையாளம் காணுவது, 100% உதவித் தொகையை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்துவது, திட்ட கண்காணிப்பில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது ஆகியவற்றால் ஏழை மற்றும் நடுத்தர வகுப்பினர் வாழ்க்கை எளிதாக்கப்பட்டுள்ளது. இந்த பத்தாண்டில் நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் இந்தத் தொழில்நுட்பம் உதவும்.

மாண்புமிகு உறுப்பினர்களே,

63. தொழில்துறை 4.0 என்ற தொழில் புரட்சியின் அடித்தளம் டிஜிட்டல் தொழில்நுட்பம்தான் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.  டிஜிட்டல் தொழில்நுட்பத்தைக் கிடைக்கச் செய்தல், டிஜிட்டல் தொழில்நுட்பத்தை உள்ளடக்கியதாக செய்தல், டிஜிட்டல் முறையில் அதிகாரமளித்தல் ஆகியவற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கவனம் செலுத்திவரும் எனது அரசு, 21-ஆம் நூற்றாண்டின் தொழில்புரட்சியிலிருந்து முழுப்பயனை அடைவதற்காக டிஜிட்டல் இந்தியா திட்டத்தின்மூலம் செயல்பட்டு வருகிறது.  கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் உருவாக்கப்பட்ட டிஜிட்டல் அமைப்புகள் உலக நாடுகள் பலவற்றை கவர்ந்திருக்கிறது என்பது, நமக்கு பெருமையளிக்கும் விஷயம்.

மாண்புமிகு உறுப்பினர்களே,

64. இன்றைய நிலையில் நாட்டின் 121 கோடிக்கும் அதிகமான மக்கள் ஆதார் அட்டைகளைப் பெற்றுள்ளனர்.  சுமார் 60 கோடி மக்கள் ரூபே அட்டைகளை வைத்துள்ளனர். 2019 டிசம்பர் மாதத்தில் யுபிஐ மூலம் சாதனை அளவாக ரூ.2 லட்சம் கோடி அளவுக்கு பரிவர்த்தனை நடந்துள்ளது.  சமீபத்தில் அரசு பீம் செயலியின் புதிய வடிவத்தை வெளியிட்டிருக்கிறது.

65. ஜன்தன், ஆதார், மொபைல் ஆகியவை இணைந்த ஜாம் நடவடிக்கையைப் பயன்படுத்தி அரசு 450 திட்டங்களை DBT எனப்படும் நேரடி வங்கிக்கணக்கில் செலுத்தும் நடைமுறையுடன் இணைத்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் DBT மூலம் ரூ. 9 லட்சம் கோடிக்கும் கூடுதலான தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. அமைப்புகளில் இருந்த கசிவுகளை அடைத்து எனது அரசு சுமார் ரூ. 1 லட்சத்து 70 ஆயிரம் கோடி தொகையை தப்பானவர்கள் கைகளுக்கு செல்லாமல் தடுத்துள்ளது.

66. அரசு கொள்முதல் நடவடிக்கையில் GeM எனப்படும் அரசு மின்னணு சந்தை மூலம், வெளிப்படைத் தன்மை நிலைநாட்டப்பட்டுள்ளது.  அரசு வடிவத்தில், சிறு மற்றும் குறு தொழில் முனைவோருக்கு இந்த GeM அமைப்பு மிகப்பெரிய சந்தையை திறந்துவிட்டிருப்பதுடன், அரசை தொழில்முனைவோருடன் நேரடியாக இணைத்துள்ளது.  கடந்த 3 ஆண்டுகளில் இந்த அமைப்பு மூலம் அரசின் பல்வேறு துறைகள் ரூ.40,000 கோடி பெறுமான கொள்முதலைச் செய்துள்ளன.

67. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எனது அரசு கண்காணிப்பு ராஜியத்தை முடிவுக்கு கொண்டுவர பல பெரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தற்போது வருமான வரித்துறையில் நாம் உருவாக்கி வரும் புதிய அமைப்பு எவ்வித தனிநபர் தொடர்பையும் அகற்றுவதாக அமையும்.  இந்த அமைப்பு வெளிப்படைத் தன்மையை அதிகரித்து வருமான வரித்துறையின் பணிப்பண்பாட்டை மேம்படுத்தும். 

மாண்புமிகு உறுப்பினர்களே,

68. நகரங்களையும், கிராமங்களையும் நெருக்கமாகக் கொண்டுவருவதில், தொழில்நுட்பம் பெரிய அளவில் பங்காற்றுகிறது. இதுவரை பாரத்நெட் திட்டத்தின் மூலம் ஒரு லட்சத்து 25 ஆயிரத்துக்கும் கூடுதலான கிராம பஞ்சாயத்துகள் உயர்வேக பிராட் பேங்க் வசதியைப் பெற்றுள்ளன.  2014-ல் நாட்டின் கிராமப் பகுதிகளில் 60,000-மாக இருந்த பொதுச் சேவை மையங்கள் தற்போது 3 லட்சத்து 65 ஆயிரமாக உயர்ந்துள்ளன.  இதனால், 12 லட்சத்துக்கும் கூடுதலான கிராம மக்கள் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர்.  இந்த மையங்கள் மூலம், அரசு, கிராமப் பகுதிகளில் 45-க்கும் கூடுதலான சேவைகளை வழங்கி வருகிறது.

மாண்புமிகு உறுப்பினர்களே,

69. ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ உணர்வை வலுப்படுத்த எனது அரசு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம், நாட்டு மக்களுக்கு ஒருங்கிணைந்த அமைப்புகளை உருவாக்கி வருகிறது.

70. சமீபத்தில் நாட்டின் தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்ய ‘ஒரு நாடு ஒரு ஃபாஸ்ட்டாக்’ திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.  ‘ஒரு நாடு ஒரு போக்குவரத்து அட்டை’ பயன்பாடு காரணமாக மாநிலங்களில் பல்வேறு வகை போக்குவரத்து வசதிகளை ஒரே அட்டையின் மூலம் பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.  ‘ஒரு நாடு ஒரு குடும்ப அட்டை’ திட்டத்தையும் அரசு தொடங்கியுள்ளது. ‘ஒரு நாடு ஒரு வரிமுறை’, அதாவது ஜிஎஸ்டி மூலம் வர்த்தகத்தில் வெளிப்படைத்தன்மை ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஜிஎஸ்டிக்கு முந்தைய காலத்தில் சுமார் 24 வகை வரிகள் செலுத்த வேண்டியிருந்தது. தற்போது இந்த குழப்பான வரி முறை முடிவுக்கு வந்திருப்பதுடன், வரியின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. 

மாண்புமிகு உறுப்பினர்களே,

71. இந்தியா போன்ற கூட்டாட்சி நாட்டில் விரைந்த மேம்பாடு மிகவும் அவசியமானது, மேம்பாட்டுத் திட்டங்களில் மாநிலங்கள் ஒன்றுடன் ஒன்று போட்டியிடுவதும், அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதும் அவசியமாகின்றது.  எனவே, எனது அரசு போட்டியிடும் தன்மையுள்ள ஒத்துழைப்பு மிகக் கூட்டாட்சி அமைப்பை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.  மாவட்ட மற்றும் கிராம நிலைகளில் அப்போதைக்கப்போது சேகரிக்கப்படும் தரவுகள் அடிப்படையில் மாநிலங்களை அரசு தரவரிசைப்படுத்தி வருகிறது. தூய்மை இந்தியா இயக்கம் முதல், வர்த்தகம் புரிதலில் எளிமை, பொலிவுறு நகரங்கள் இயக்கம், முன்னேறத் துடிக்கும் மாவட்டங்கள் திட்டம் வரையில் பல்வேறு துறைகளில் இதன் தாக்கம் தெளிவாகத் தெரியவந்துள்ளது.

72. மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது சேகரிக்கப்பட்ட தகவல்கள், உரிய திட்டங்கள் மற்றும் இலக்குகளுடன் கூடிய இடையீடுகள் ஆகியவற்றை உருவாக்க, அரசுக்கு பெரிதும் உதவுகின்றன. இந்தமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதனால் கணக்கெடுக்கும் நடைமுறை விரைவாக நிறைவு பெறும்.

73. டிஜிட்டல் தொழில்நுட்ப்ப் பயன்பாடு உயர்ந்து வரும் நிலையில், எனது அரசு தனிநபர் ரகசியங்களைப் பாதுகாப்பதில் உறுதியுடன் உள்ளது.  இந்த உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில் நாடாளுமன்றத்தில் தரவுப் பாதுகாப்பு மசோதாவை அரசு தாக்கல் செய்துள்ளது.  

மாண்புமிகு உறுப்பினர்களே,

74. இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் இலக்கை அடைவதில் எனது அரசு உறுதியுடன் உள்ளது. இந்த நோக்கத்தை நிறைவேற்ற பொருளாதாரத்தின் அனைத்து நிலைகளிலும் அக்கறையுள்ள அனைவருடனும் ஆலோசித்து அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. உலகச் சவால்களுக்கு இடையே இந்தியப் பொருளாதாரத்தின் அடிப்படைகள் வலுவாக உள்ளன. நமது அந்நியச் செலாவணி கையிருப்பு, வரலாற்றில் மிக உயர்ந்த அளவான, 450 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.  நாட்டுக்குள் வரும் அந்நிய நேரடி முதலீடு உயர்ந்து வருகிறது.  சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில் அந்நிய நேரடி முதலீடு 3 பில்லியன் டாலர் உயர்ந்துள்ளது.

75. சிறிய பொதுத்துறை வங்கிகளை இணைத்த நடவடிக்கை அவற்றை வலுப்படுத்தி அவற்றின் கடன் வழங்கும் திறனை மேம்படுத்தியுள்ளது. இந்த நிதியாண்டின் முதல் பாதியில் 12 பொதுத் துறை வங்கிகள் லாபத்தில் இயங்கின. கம்பெனி கலைப்பு மற்றும் திவால் நெறிமுறைகள் காரணமாக சுமார் ரூ.3.5 லட்சம் கோடி கடன்களை, வங்கிகளும் இதர நிறுவனங்களும் திரும்ப வசூலித்துள்ளன. கம்பெனி வரியைக் குறைத்தது, தொழிலாளர் நலச்சட்டங்களை நெறிப்படுத்தியது ஆகியன இந்தியாவில் வர்த்தகம் புரிதலில் எளிமைத் தன்மையை அதிகரிக்க உதவும்.

மாண்புமிகு உறுப்பினர்களே,

76. பொருளாதாரத்தின் வளர்ச்சி வேகத்தை முடுக்கிவிடவும், உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை மேம்படுத்தவும் இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்திற்கு எனது அரசு உத்வேகம் அளித்து வருகிறது. நாட்டில் 5 தொழிலியல் வளாகங்களுக்கு கூடுதலாக தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம் ஆகியவற்றில் இரண்டு பாதுகாப்பு உற்பத்தி பெருவளாகங்களை அரசு உருவாக்கி வருகிறது.   

மாண்புமிகு உறுப்பினர்களே,

77. மின்னணு உற்பத்தித் துறையில் இந்தியா விரைவாக வளர்ந்து வருகிறது. மொபைல் தொலைபேசிகள், தொலைக்காட்சிப் பெட்டிகள், இதர மின்னணு கருவிகள் உற்பத்திக்கு மேலும் உத்வேகம் அளிக்க தேசிய மின்னணுவியல் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. 2014-15-ல் ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் கோடியாக இருந்த  மின்னணு கருவிகள் உற்பத்தி மதிப்பு, 2018-19-ல் ரூ. 4 லட்சத்து 58 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது.   2014-ல் இந்தியாவில் மொபைல் தொலைபேசி தயாரிப்பு நிறுவனங்கள் 2 மட்டுமே இருந்தன.  இன்றைய நிலையில் உலக மொபைல் தொலைபேசி உற்பத்தியில் நாடு 2-வது மிகப் பெரிய மையமாக உருவெடுத்துள்ளது. மோட்டார் வாகனத் துறை மற்றும் ரயில்வேயில், இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்துக்கு அரசு ஊக்குவிப்பு அளித்து வருகிறது.  வந்தே பாரத், தேஜஸ் எக்ஸ்பிரஸ் போன்ற நவீன ரயில்களை முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மாண்புமிகு உறுப்பினர்களே,

78. சுதந்திரத்தின் அடிப்படை மந்திரமே ‘தற்சார்புள்ள இந்தியா’ என்பதுதான்.  தற்சார்புள்ள இந்தியா என்பது ஒவ்வொரு இந்தியனும், இந்தியாவில் தயாரிக்கப்படும் ஒவ்வொரு பொருள் குறித்து பெருமைப்படும்போதுதான் சாத்தியமாகும். “சிறப்பான எதிர்காலத்துக்கு உள்ளூர் பொருட்களையே வாங்குதல்” என்ற மந்திரத்தில் எனது அரசு நம்பிக்கை கொண்டுள்ளது.  பஞ்சாயத்து நிலை முதல், நாடாளுமன்ற நிலை வரை உள்ள ஒவ்வொரு மக்கள் பிரதிநிதியும், நாட்டிலுள்ள ஒவ்வொரு அரசும் இந்த மந்திரத்தை ஒரு இயக்கமாக மாற்ற வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். உள்ளூர் உற்பத்திப் பொருட்களுக்கு முன்னுரிமை அளிக்குமாறு ஒவ்வொரு இந்தியரையும் நான் கேட்டுக் கொள்கிறேன். உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பொருட்களை பயன்படுத்தும் போது, உங்கள் பகுதியில் உள்ள சிறு தொழில் முனைவோருக்கு பெருமளவு நீங்கள் உதவ முடியும்.

மாண்புமிகு உறுப்பினர்களே,

79. ஏழை மற்றும் நடுத்தர வகுப்பினர் நவீன 21-ம் நூற்றாண்டின் சேர்ந்த அடிப்படை வசதிகளைப் பெற விரும்புகிறார்கள். மக்களின் இந்த விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.100 லட்சம் கோடிக்கும் கூடுதலாக முதலீடு செய்யப்படும். இணைப்பு வசதிக்கு சிறப்பு முக்கியத்துவம் தரும் வகையில், புதிய நெடுஞ்சாலைகள், புதிய நீர்வழிப்பாதைகள், புதிய விமானப்பாதைகள், புதிய தகவல் தொழில்நுட்ப விரைவுப் பாதைகள் ஆகியவற்றில் அரசு கவனம் செலுத்தி வருகிறது.

80. நாட்டின் கட்டுமானத் துறையில் கிராமப்புற சாலைகள் முக்கியப் பங்குவகிக்கின்றன.  பிரதமர் கிராமச் சாலை திட்டத்தின் மூலம் நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் கிராமச் சாலைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.  இந்தத் திட்டத்தின் மூன்றாம் கட்டம் தொடங்கப்பட்டுள்ளது.  இந்தக் கட்டத்தில், கிராமச் சாலைகள்  வலுப்படுத்தப்பட்டு, அவை, பள்ளிகள், மருத்துவமனைகள், வேளாண் சந்தைகள் ஆகியவற்றை இணைக்கும்.  இந்தத் திட்டத்தின்கீழ், ஒரு லட்சத்து 25 ஆயிரம் கிலோமீட்டர் சாலைகள் அமைக்கப்பட்டு மேம்படுத்தப்படும்.

81. உள்நாட்டு நீர்வழிப் பாதைகளையும் அரசு மேம்படுத்தி வருகிறது. 2019 டிசம்பரில் முதல் முறையாக தேசிய நீர்வழிப்பாதை-2-ன் மூலம் கண்டெய்னர் சரக்கு அசாமில் உள்ள பாண்டுவுக்கு சென்றடைந்தது. நீர்வழிப்பாதை மேம்பாட்டுத் திட்டத்தின்படி, கங்கையாற்றில் ஹால்டியாவில் பல்வகை போக்குவரத்து முனையம், ஃபராக்காவில் நீர்வழிப்போக்குவரத்து இணைப்பு ஆகிய பணிகள் இந்த ஆண்டு நிறைவடையும். அடுத்த ஆண்டில் கங்கையாற்றில் பெரிய சரக்குக் கப்பல் போக்குவரத்தை நடத்துவதும், எமது திட்டங்களில் ஒன்றாக இருக்கும்.

82. நகர்ப்புறப் பகுதிகளில் மேலும் சிறந்த பொதுப் போக்குவரத்து வசதிகளை வழங்குவதில் விரைந்த முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளது. தற்போது நாட்டின் 18 நகரங்களுக்கு  மெட்ரோ வசதி விரிவுபடுத்தப் பட்டுள்ளது.  இதுவரை 670 கிலோமீட்டர் மெட்ரோ ரயில்பாதைகள் செயல்நிலைக்கு வந்துள்ளன.  மேலும் 930 கிலோமீட்டர் மெட்ரோ ரயில்பாதைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தில்லி-மீரட் விரைவுச்சாலை அமைக்கப்பட்டதன் மூலம் தில்லி மற்றும் தேசியத் தலைநகரப் பகுதி மக்கள் பெரிதும் பயனடைந்துள்ளனர். கிழக்கு மற்றும் மேற்குப் புறவழி விரைவுச் சாலைகள் மூலமாகவும் இவர்கள் பயனடைந்து வருகிறார்கள்.       

மாண்புமிகு உறுப்பினர்களே,

83. 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை அடைவதில் 2-ம் நிலை மற்றும் 3-ம் நிலை நகரங்கள் புதிய பங்காற்றுபவையாக உருவெடுத்து வருகின்றன. சுகாதாரம், வாழ்க்கை வசதிகள், தொடக்க நிலை நிறுவனங்கள் மற்றும் இதர வர்த்தக செயல்பாடுகளில் சிறிய நகரங்களின் வளர்ச்சி ஊக்குவிப்பதாக உள்ளது.   2014-க்குப் பிறகு சிறிய நகரங்களில் தொடக்க நிலை நிறுவனங்கள் 45% முதல், 50% வரையிலான வேகத்தில் வளர்ச்சி அடைந்துள்ளன. உடான் திட்டத்தின்கீழ், சுமார் 35 லட்சம் பேர் விமானப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.  சென்ற ஆண்டு 335 புதிய விமான வழித்தடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.   வரும் ஆண்டுகளில் நாட்டின் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் பாதிக்குமேல் இந்த 2-ம் நிலை, 3-ம் நிலை நகரங்களில் நடைபெறும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

84. சிறிய நகரங்கள் மற்றும் புதிய நடுத்தர வகுப்பினர் ஆகியோரின் வளர்ச்சி விருப்பங்களை நிறைவேற்றுவதற்கு அரசு இயன்ற அனைத்தையும் செய்து வருகிறது. ரூ. 5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி விலக்கு என்ற திட்டத்தினால், சிறிய நகரங்களில் வசிக்கும் நடுத்தர வகுப்பினர் பெரிதும் பயனடைந்துள்ளனர். ஆண்டு வருவாய் ரூ.18 லட்சம் வரை உள்ள நடுத்தர வகுப்பு குடும்பத்தினர் 20 ஆண்டுகால வீட்டுவசதி கடன்களுக்கென ரூ.5 முதல் 6 லட்சம் வரை சேமிக்க இயலுகிறது. நின்றுபோயுள்ள வீட்டுவசதித் திட்டங்களை நிறைவு செய்வதற்காக அரசு அளித்துள்ள ரூ.25 ஆயிரம் கோடி நிதியத்திலிருந்து அதிக அளவு பயன்பெறுபவர்கள் நடுத்தர வகுப்பினர்களே ஆவர்.

மாண்புமிகு உறுப்பினர்களே,

85.  தூய்மையான எரிசக்தித் துறையில் இந்தியா உலகளவில் திறம்பட்ட பங்கினை ஆற்றி வருகிறது. அரசு எடுத்த தீவிர நடவடிக்கைகள் காரணமாக நாட்டில் எல்பிஜி பயன்படுத்துவோர் எண்ணிக்கை 55%-லிருந்து, 97%-மாக உயர்ந்துள்ளது. நகர எரிவாயு விநியோகம் தற்போது நாட்டின் 407 மாவட்டங்களுக்கு விரிவாக்கப்பட்டுள்ளது.  இப்போது நாம் எரிவாயு அடிப்படையிலான பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்து வருகிறோம்.

86. சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு எனது அரசு புதுப்பிக்கக் கூடிய எரிசக்தி உற்பத்தி இலக்கை 450 கிகா வாட்டாக உயர்த்தியுள்ளது.  பிரதமர் குசும் திட்டம் எனப்படும், உழவர் ஆற்றல் பாதுகாப்பு மற்றும் மீளுருவாக்கத் திட்டத்தின்கீழ், நாடெங்கும் உள்ள விவசாயிகளுக்கு சுமார் 17 லட்சம் சூரியஒளி பம்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேற்கூரை சூரியஒளி திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் 38 கிகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாண்புமிகு உறுப்பினர்களே,

87. நாட்டு மக்களின் முயற்சி காரணமாக இந்தியாவின், மரம் மற்றும் வனப்பரப்பு கடந்த 4 ஆண்டுகளில் 13 ஆயிரம் சதுர கிலோமீட்டராக விரிவடைந்துள்ளது.  அதேபோல 2014-ல் 2226-ஆக இருந்த  புலிகளின் எண்ணிக்கை 2019 ஜுலையில், 2967-ஆக உயர்ந்துள்ளது, மனநிறைவளிக்கும் விஷயமாகும்.

88. காற்று மற்றும் தண்ணீர் மாசுபடும் பிரச்சினைக்கு தீர்வுகாண, அரசு தேசிய தூய்மைக் காற்று திட்டத்தை நாட்டின் 102 நகரங்களில் அமல்படுத்தவுள்ளது. அரசு தொடங்கியுள்ள நமாமி கங்கை இயக்கத்தின் நேர்மறையான தாக்கம், தற்போது கண்கூடாகத் தெரிய வந்துள்ளது என்பதும் மகிழ்ச்சிதரும் விஷயமாகும்.  இத்திட்டத்தின்கீழ், ரூ.7,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் நிறைவடைந்துள்ளன, மேலும் ரூ.21,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

89. இந்த முயற்சிகள் அனைத்தின் தாக்கமும், நாட்டின் சுற்றுலாத் துறையில் காணக்கிடைக்கிறது.  கடந்த சில ஆண்டுகளில் சுற்றுலா தொடர்பான கட்டுமான வசதி மேம்பாட்டில் அசாதாரண வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.  சமீபத்தில் நாட்டின் பாரம்பரிய கட்டடங்களைப் பாதுகாத்து அழகுபடுத்தும் நாடு தழுவிய திட்டம் கொல்கத்தாவில் தொடங்கிவைக்கப்பட்டது.  சுதேஷ் தர்ஷன் மற்றும் பிரசாத் திட்டங்களின்கீழ், உருவாக்கப்பட்டு வரும் நவீன கட்டுமான வசதிகள், சுற்றுலாத் துறையை வலுப்படுத்தியுள்ளன. உலகின் மிக உயரமான ஒற்றுமை சிலை என்றழைக்கப்படும், சர்தார் படேலின் சிலையைப் பார்ப்பதற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறித்த புதிய சாதனைகள், நாள்தோறும் உருவாக்கப்பட்டு வருகின்றன.

மாண்புமிகு உறுப்பினர்களே,

90. நாட்டுக்காக தங்கள் இன்னுயிரை அர்ப்பணித்தவர்கள் மற்றும் நாட்டின் பாரம்பரியத்தைப் பாதுகாக்க பங்களித்தவர்கள் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்துவது நாட்டு நிர்மாணத்தின் முக்கியமான பங்கு என்று எனது அரசு நம்புகிறது.  இதன் அடிப்படையில் தீரமிக்க ஆண், பெண் பழங்குடியினர், தேச விடுதலைக்கு அளித்த பங்கினை கொண்டாடும் வகையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. தனது போதனைகளால் நாட்டை வழிநடத்திய மாபெரும் சமூக சீர்திருத்தவாதி ராஜாராம் மோகன்ராயின் 250-ஆவது பிறந்தநாளை 2022-ல் அரசு வெகு விமர்சையாகக் கொண்டாடவுள்ளது. 

மாண்புமிகு உறுப்பினர்களே,       

91. இந்தியாவின் விண்வெளித் திட்டத்தின் குறிக்கோள் மனித குலத்திற்கு சேவை என்பதாகத் தொடர்ந்து இருந்து வருகிறது.  நாட்டின் விண்வெளி விஞ்ஞானிகள் ஆற்றி வரும் ஓய்வு ஒழிச்சல் இல்லாத பணி காரணமாக சந்திராயன்-2 திட்டம் நாட்டின் இளைஞர்களிடையே புதிய தொழில்நுட்ப ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.  எனது அரசு சந்திராயன்-3 திட்டத்துக்கு ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் திட்டமான ககன்யான் திட்டம் மற்றும் ஆதித்யா-1 திட்டம் ஆகியவற்றுக்காக கடுமையாக உழைத்து வருகிறது.  

மாண்புமிகு உறுப்பினர்களே,  

92. பரிணமித்து வரும் இந்தக் கால கட்டத்தில் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான புதிய, சிக்கலான சவால்களை எதிர்கொள்ள எனது அரசு பாதுகாப்புப் படைகளை வலுவானதாகவும், மேலும் திறன்பட்டதாகவும், நவீனமானதாகவும் மாற்றுவதற்கு உழைத்து வருகிறது.  பாதுகாப்பு தலைமைத் தளபதி நியமனம், ராணுவ விவகாரங்கள் துறை உருவாக்கம் ஆகியன, இந்த வகையில் எடுக்கப்பட்ட முக்கிய நடவடிக்கைகளாகும்.  இதன் காரணமாக முப்படைகளிடையே ஒருங்கிணைப்பு மேம்படும், அவற்றின் நவீனமயமாக்கல் விரைவுபடுத்தப்படும், அவற்றை சுயசார்பு பெற்றவைகளாக மாற்றும் நடைமுறை விரைவடையும்.

93. நமது பாதுகாப்புப் படைகளின் தளவாடங்கள், பாதுகாப்புக் கருவிகள், குண்டு துளைக்காத மேலங்கிகள் உள்ளிட்ட தேவைகள் குறித்து நாம் முழு கவனம் செலுத்தி வருகிறோம். ரஷ்ய ஒத்துழைப்புடன் அதிநவீன ஏ.கே.203 துப்பாக்கிகள் உற்பத்தி, உத்தரப்பிரதேசம் அமேதியில் உள்ள தளவாடத் தொழிற்சாலையில் விரைவில் தொடங்கப்படவுள்ளது.  சமீபத்தில் தேஜஸ் விமானத்தின் கடற்படை முன்மாதிரி விமானம், ஐஎன்எஸ் விக்கிரமாதித்யா கப்பலில் தரையிறங்கி அதிலிருந்து புறப்பட்டுச் சென்றது, ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை அளித்தது. விண்வெளிப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு அரசு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஏ-சாட் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டிருப்பதை அடுத்து, விண்வெளியில் தாக்குதல் திறன்கொண்ட உலக நாடுகள் நான்கில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளது.

மாண்புமிகு உறுப்பினர்களே,  

94. பயங்கரவாதத் தாக்குதலிலிருந்து நாட்டை விடுவிக்க எனது அரசு முழு பலத்துடனும், உறுதிப்பாட்டுடனும் செயல்புரிந்து வருகிறது. மாறிவரும் பயங்கரவாதத்தின் இயல்பு கருதி, குடிமக்கள் மிகவும் ஜாக்கிரதையுடன் இருப்பது உதவிகரமாக இருக்கும். ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகள் குறைந்திப்பதிலிருந்து, பொதுமக்கள் ஒத்துழைப்பு இருந்தால், பயங்கரவாதத்துக்கு எதிரான போர் திறம்பட்டதாக இருக்கும் என்பது தெரியவந்துள்ளது. பயங்கரவாதத்தில் ஈடுபடுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதில் பாதுகாப்புப் படையினருக்கு முழு சுதந்திரத்தை எனது அரசு அளித்துள்ளது.  அரசு மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சிகள் காரணமாக, வடகிழக்குப் பகுதியின் பாதுகாப்பு நிலைமை குறிப்பிடத்தக்க அளவு மேம்பட்டுள்ளது.  நக்ஸலிசம் பாதித்துள்ள புவிப்பரப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.

மாண்புமிகு உறுப்பினர்களே,  

95. நாட்டின் பொருளாதார மற்றும் போர்த்திறன் சார்ந்த பாதுகாப்பில் வெளியுறவுக் கொள்கை முக்கியமான அங்கம் என்று எனது அரசு கருதுகிறது. நமது அண்டை நாடுகளுடன் இணைப்புத் தொடர்புகளை அதிகரிப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சியையும், வளத்தையும் உத்வேகமடையச் செய்கிறோம்.  “அண்டை நாடுகள் முதலில்” என்பது நமது முன்னுரிமைக் கொள்கையாகும். நமது அண்டை நாடுகள் தவிர, இதர உலக நாடுகளுடன் நமது உறவுகளை வலுப்படுத்தியுள்ளோம்.   இதன் காரணமாகத்தான், பல நாடுகள் இந்தியாவின்பால் உயரிய மரியாதையைக் கொண்டுள்ளன.  ஆசியான் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுடன் நமது ஒத்துழைப்பு மேலும் புதிய நிலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. 

96. சர்வதேச சூரியசக்தி கூட்டணிக்குப் பிறகு, பேரிடர் மீட்டெழுச்சி கட்டுமான வசதி கூட்டணி என்ற அமைப்பின் மூலம் இந்தியா உலக ஒத்துழைப்பில் மீண்டும் முன்னணி நிலை பெற்றுள்ளது. இயற்கைப் பேரிடர் இன்னல்களைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த நடவடிக்கை, பொறுப்புமிக்க உலகநாடு என்ற இந்தியாவின் நிலையை மேலும் வலுப்படுத்த உதவியுள்ளது. 

மாண்புமிகு உறுப்பினர்களே,  

97. தற்போது தொடங்கியுள்ள இந்த பத்தாண்டு, வரும் காலத்தில் உலகில் இந்தியாவின் நிலைமையை நிர்ணயிக்க உள்ளது. இந்த பத்தாண்டு காலத்தில் உள்ளடக்கிய, வளமான, திறன்மிக்க, ஆற்றல் மிகுந்த புதிய இந்தியாவை உலகம் காண உள்ளது. எனவே, இத்தகைய இலக்குகளை அடைவதற்கான முயற்சிகளில் கடுமையாகவும், தங்கள் திறன் முழுவதையும் பயன்படுத்தி, நாட்டு மக்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் உழைக்க வேண்டியது அவர்களது கடமை.

98. தேசிய நலன்கருதி, நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் தங்களது கடமைகளை உணர்ந்து அர்ப்பணிப்புடன் பாடுபடுபவர்களாக மாற்ற நாம் அனைவரும் முயற்சி மேற்கொள்ள வேண்டும். இந்த பொறுப்புணர்வு, நமது சமுதாய வாழ்க்கையின் வழிகாட்டுக் கொள்கையாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். 2020 ஆம் ஆண்டின் இந்தப் பத்தாண்டை நமது கடமைகளை நிறைவேற்றும் பத்தாண்டாக மாற்றுவதற்கு அனைவரும் சேர்ந்து உழைப்போம் வாருங்கள்.

99. நாம் அனைவரும் நாட்டின் முதலாவது மற்றும் முன்னணி குடிமக்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.  இதற்கு அடுத்தபடியாகத்தான் குறிப்பிட்ட கொள்கைகளின் தலைவர்கள் அல்லது ஆதரவாளர்கள் என்ற நிலை வருகிறது. நாட்டின் கௌரவம் நமது விசுவாசத்துக்கு மேல் மிகவும் முக்கியமானதாக இருக்க வேண்டும்.

100. நாட்டின் புகழ்மிக்க பண்டைக்காலத்திலிருந்து உத்வேகம் பெற்று, அதன் எதிர்காலத்தை பிரகாசமானதாக மாற்றுவதற்கு, இயன்ற அனைத்து முயற்சிகளையும் ஒன்றாக இணைந்து அனைவரும் மேற்கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன். இந்த முயற்சியில் நாம் வெற்றி பெறுவோம் என்றும் நம்புகிறேன்.

101. புதிய இந்தியாவின் கனவை நனவாக்க நாம் அனைவரும் ஒன்றுபடுவோம்; நாம் அனைவரும் இணைந்து புதிய இந்தியாவை உருவாக்குவோம்.

ஜெய்ஹிந்த்!!!

**********************



(Release ID: 1601376) Visitor Counter : 585


Read this release in: English , Hindi , Bengali