நிதி அமைச்சகம்

வங்கிகளின் வணிக ரீதியிலான முடிவுகளைப் பாதுகாக்க அரசு நடவடிக்கைகளை எடுத்துள்ளது

Posted On: 28 JAN 2020 2:15PM by PIB Chennai

வங்கிகள் எடுக்கும் நேர்மையான வணிக ரீதியிலான முடிவுகளை பாதுகாக்கவும், வணிக ரீதியிலான உண்மையான தோல்விகளையும், மோசடிகளையும் வேறுபடுத்திப் பார்க்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் வங்கியாளர்களுக்குத் தொடர்ந்து உறுதியளித்து வந்துள்ளார். ஒவ்வொரு வங்கியும் தங்களது உள் ஒழுங்கு நடவடிக்கை மற்றும் மோசடி வழக்குகளில் ஏற்படும் நடைமுறை தாமதத்தை கருத்தில் கொண்டு, பணியாளர்களின் மன உறுதி மீது ஏற்படும் மோசமான தாக்கத்தையும், துன்புறுத்தலுக்கான வாய்ப்பையும் தவிர்க்க, இத்தகைய வழக்குகளுக்கு  காலவரையறையுடன் தீர்வுகாண வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசின் பெருமுயற்சியின் ஒரு பகுதியாக, ஊழல் தடுப்புச் சட்டத்தில் பிரிவு 17ஏ சேர்க்கப்பட்டுள்ளது. இதன்படி அரசு ஊழியருக்கு எதிராக புலன்விசாரணை மேற்கொள்ள முன் அனுமதி தேவையாகும்.

     மத்திய கண்காணிப்பு ஆணையம், பொதுத் துறை வங்கிகளின் மேலாளர்களின் வணிக ரீதியிலான முடிவுகள் தொடர்பான சிக்கலை கருத்தில் கொண்டு, பொது மேலாளர்கள் மற்றும் அதற்கு மேலான அந்தஸ்துக்கு இணையான அரசு ஊழியர் மீதான, ரூ.50 கோடிக்கும் மேல் சந்தேகிக்கப்படும் மோசடிகள் குறித்து விசாரணை அல்லது புலன்விசாரணை தொடங்குவதற்கு முன்பாக, முதல்மட்ட அளவில், விசாரணையை கட்டாயப்படுத்த வங்கி மற்றும் நிதி மோசடிகளுக்கான ஆலோசனைக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.  

     அதிக மதிப்பிலான மோசடிகள் விஷயத்தில், அரசு அதன் 2015 ஆம் ஆண்டின் விதிமுறைகளை தற்போது மாற்றியுள்ளது. அதன்படி,  பொதுத்துறை வங்கிகளின் மேலாண்மை இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரிகளின், வரையறுக்கப்பட்ட விதிமுறைகளுக்கு இணக்கமான தனிப்பட்ட பொறுப்புகள் ரத்து செய்யப்படுகின்றன. பொதுத் துறை கடன்தாரர்களுக்கு நிதிசேவைகள் துறையால் வழங்கப்பட்ட அதிகாரங்களை நடைமுறைப்படுத்த, இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் தலைமை கண்காணிப்பு ஆணையரின் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய உரிய நடைமுறை ஏற்படுத்தப்படும். இதேபோல, ரூ.50 கோடிக்கு மேற்பட்ட அனைத்து வாராக்கடன் கணக்குகளின் மோசடிக்கானக் கட்டாய ஆய்வு, 2020 ஜனவரி 15 ஆம் தேதியிட்ட தலைமை கண்காணிப்பு ஆணையரின் சுற்றறிக்கையுடன் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து சந்தேகத்துக்கிடமான மோசடி வழக்குகளும் தொடக்கத்தில் வங்கி மற்றும் நிதி மோசடிகளுக்கான ஆலோசனைக் குழுவால் ஆய்வு செய்யப்பட வேண்டும்.

     நிலுவையில் உள்ள ஒழுங்கு நடவடிக்கை மற்றும் உள்கண்காணிப்பு வழக்குகளின் முன்னேற்றத்தைக் கண்காணித்து இதுபோன்ற வழக்குகளில் நடைமுறை தாமதத்தை குறைப்பதற்கு மூத்த அதிகாரிகள் குழுவை அமைக்குமாறு 27.01.2020 ஆம் தேதி வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் பணியாளர்களின் மன உறுதி மோசமாக பாதிக்கப்படுவதும், திறமையின்மை வளர்வதும் தவிர்க்கப்படும்.

அரசின் நடவடிக்கைகள்

  • அரசு ஊழியருக்கு எதிராக புலன் விசாரணை மேற்கொள்வதற்கு முன்பாக, முன் அனுமதி தேவைப்படும் வகையில் ஊழல் தடுப்புச் சட்டத்தில் பிரிவு 17ஏ சேர்க்கப்பட்டுள்ளது.
  • ரூ.50 கோடிக்கு மேலாக சந்தேகிக்கப்படும் மோசடிகளை முதல்மட்டத்தில் ஆய்வு செய்ய, வங்கி மற்றும் நிதி மோசடிகளுக்கான ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
  • பொதுத்துறை வங்கிகளின் மேலாண்மை இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரிகளின், வரையறுக்கப்பட்ட விதிமுறைகளுக்கு இணக்கமான தனிப்பட்ட பொறுப்புகள் ரத்து செய்யப்படுகின்றன

.ரூ.50 கோடிக்கு மேற்பட்ட அனைத்து வாராக்கடன் கணக்குகளின் மோசடிக்கானக் கட்டாய ஆய்வு, 2020 ஜனவரி 15 ஆம் தேதியிட்ட தலைமை கண்காணிப்பு ஆணையரின் சுற்றறிக்கையுடன் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து சந்தேகத்துக்கிடமான மோசடி வழக்குகளும் தொடக்கத்தில் வங்கி மற்றும் நிதி மோசடிகளுக்கான ஆலோசனைக் குழுவால் ஆய்வு செய்யப்பட வேண்டும்.

  • நிலுவையில் உள்ள ஒழுங்கு நடவடிக்கை மற்றும் உள்கண்காணிப்பு வழக்குகளின் முன்னேற்றத்தை மூத்த அதிகாரிகள் குழு கண்காணித்து இதுபோன்ற வழக்குகளில் முடிவெடுக்கும் வகையில், தாமதத்தை குறைப்பதற்கான விதிமுறைகளை வகுக்கும்.   

*****

(Release ID: 1600786)
 


(Release ID: 1600821)
Read this release in: English , Urdu , Hindi , Bengali