தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

சர்வதேச யோகா தினத்திற்கான ஊடக விருதுகள் முதன் முறையாக 30 ஊடக நிறுவனங்களுக்கு வழங்கப்பட உள்ளன

இந்த விருதுகள், நாடு முழுவதும் யோகா பற்றிய பிரச்சாரத்தில் ஊடகத்தின் பங்களிப்பை அங்கீகரிப்பதாகும்

இடுகை இடப்பட்ட நாள்: 05 JAN 2020 5:37PM by PIB Chennai

சர்வதேச யோகா தினத்திற்கான ஊடக விருதுகளை மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர், வரும் செவ்வாய் அன்று (07.01.2020) புதுதில்லியில் வழங்கவிருக்கிறார்.

இந்தியவிலும், வெளிநாடுகளிலும் யோகா குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திய ஊடகங்களின் பொறுப்பு மற்றும் ஆக்கப்பூர்வ பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக சர்வதேச யோகா தின ஊடக விருதுகளை தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், 2019 ஜூன் மாதத்தில் அறிவித்தது

இந்த விருதுகள் கீழ்க் காணும் வகைமைகளில் ஊடக நிறுவனங்களுக்கு வழங்கப்பட உள்ளன.

  • 3 வகைகளில்  30 விருதுகள் வழங்கப்படும்
  • யோகா குறித்து நாளேடுகளில் செய்திகளை சிறப்பாக வெளியிட்ட வகையின் கீழ், 11 விருதுகள் வழங்கப்படும்.

 

  • யோகா குறித்து  தொலைக்காட்சியில் சிறப்பாக செய்தி வெளியிட்ட வகையின் கீழ் 8 விருதுகள் வழங்கப்படும்.
  • யோகா குறித்து வானொலியில் சிறப்பாக செய்தி வெளியிட்ட வகையின் கீழ், 7 விருதுகள் வழங்கப்படும்.

இந்த விருதுகள் சிறப்பு பதக்கம் / பட்டயம் / கேடயம் / பாராட்டுப் பத்திரம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். ஊடகத்தில் யோகாவைப் பிரபலப்படுத்திய நிறுவனங்களின் பட்டியலில் இருந்து விருது  பெறுவோரைத் தெரிவு செய்ய இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் நீதிபதி சி.கே. பிரசாத், தலைமையிலான 6 உறுப்பினர்கள் நடுவர்குழு மதிப்பீடு செய்தது.

----


(Release ID: 1598476)


 


(வெளியீட்டு அடையாள எண்: 1598482) வருகையாளர் எண்ணிக்கை : 210
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी