நிதி அமைச்சகம்
திவால் மற்றும் நொடித்துப் போதல் சட்ட (2-வது திருத்த) மசோதா, 2019-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
प्रविष्टि तिथि:
11 DEC 2019 6:19PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று (11.12.2019) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், திவால் மற்றும் நொடித்துப் போதல் சட்ட விதி 2016-ல் திருத்தங்களை மேற்கொள்ள ஏதுவாக, திவால் மற்றும் நொடித்துப் போதல் சட்ட (2-வது திருத்த) மசோதா, 2019-க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. தொழில் செய்வதை மேலும் எளிமையாக்கும் வகையிலும், திவால் நிலையை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளின்போது ஏற்படும் இடையூறுகளை களையவும், இந்த சட்ட விதிகளின் நோக்கத்தை நிறைவேற்றவும் இந்தச் சட்டத் திருத்தம் வகை செய்கிறது.
திட்ட விவரம்
திவால் மற்றும் நொடித்துப் போதல் சட்டம் 2016-ன் 5(12), 5(15), 7, 11, 14, 16(1), 21(2), 23(1), 29A, 227, 239, 240-வது பிரிவுகளை திருத்துவதுடன், 32A என்ற புதிய பிரிவை சேர்ப்பதே இந்த சட்டத் திருத்தத்தின் நோக்கமாகும்.
*******
(रिलीज़ आईडी: 1596124)
आगंतुक पटल : 216