நிதி அமைச்சகம்
2019 நவம்பர் மாதத்திற்கான சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் வசூல்
2019 நவம்பர் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் மொத்தம் ரூ. 1,03,492 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது
Posted On:
01 DEC 2019 1:15PM by PIB Chennai
2019 நவம்பர் மாதத்தில் ஒட்டுமொத்த சரக்கு மற்றும் சேவை வரி வருவாய், ரூ.1,03,492 கோடி அளவிற்கு வசூலிக்கப்பட்டுள்ளது. இதில், மத்திய சரக்கு மற்றும் சேவை வரியாக ரூ.19,592 கோடியும், மாநில சரக்கு மற்றும் சேவை வரியாக ரூ.27,144 கோடியும், ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரியாக ரூ.49,028 கோடியும் (இறக்குமதி மூலம் வசூலான ரூ.20,948 கோடி உட்பட) மற்றும் கூடுதல் வரியாக ரூ.7,727 கோடியும் (இறக்குமதி மூலம் வசூலான ரூ.869 கோடி உட்பட) அடங்கும். அக்டோபர் மாதத்திற்கான சரக்கு மற்றும் சேவை வரி படிவம் 3-பி, 2019 நவம்பர் 30 ஆம் தேதிவரை 77.83 லட்சம் படிவங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரியிலிருந்து மத்திய சரக்கு மற்றும் சேவை வரிக்கு ரூ.25,150 கோடியும், மாநில சரக்கு மற்றும் சேவை வரிக்கு ரூ.17,431 கோடியும் பகிர்ந்து வழங்கப்பட்டுள்ளது. 2019 நவம்பர் மாதத்திற்கான வழக்கமான பகிர்வுக்குப் பிறகு, மத்திய சரக்கு மற்றும் சேவை வரியாக ரூ.44,742 கோடியும், மாநில சரக்கு மற்றும் சேவை வரியாக ரூ.44,576 கோடி வருவாயும் மத்திய, மாநில அரசுகளுக்குக் கிடைத்துள்ளது.
இரண்டு மாத காலமாக நிலவிய வளர்ச்சி குறைவுக்குப் பிறகு, சரக்கு மற்றும் சேவை வரி வருவாயாக, 2018 நவம்பரில் வசூலானதைவிட, 6% வளர்ச்சியுடன் 2019 நவம்பரில் குறிப்பிடத்தக்க அளவிற்கு வசூலாகியுள்ளது. இந்த காலகட்டத்தில் உள்நாட்டு பரிவர்த்தனைகளுக்கான சரக்கு மற்றும் சேவை வரி, இந்த ஆண்டிலேயே அதிகபட்சமாக 12% அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது. இறக்குமதி மூலம் வசூலாகும் சரக்கு மற்றும் சேவை வரி தொடர்ந்து குறைவாகவே உள்ளபோதிலும், கடந்த மாதத்தில் (-) 20% என்ற நிலையிலிருந்து சற்று அதிகரித்து (-) 13% அளவுக்கு உள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்ட 2017 ஜூலையில் வரி வசூல், ரூ. ஒரு லட்சம் கோடியைத் தாண்டிய நிலையில், தற்போது 8-வது முறையாக ஒரு லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. 2019 மார்ச் மற்றும் ஏப்ரலுக்குப் பிறகு, 3-வது மாதமாக நவம்பர் 2019-ல், அதிக அளவிற்கு வரி வசூலாகியுள்ளது.
*****
(Release ID: 1594406)
(Release ID: 1594431)
Visitor Counter : 228