PIB Headquarters

சென்னை விமான நிலையத்தில் ரூ.18.6 லட்சம் மதிப்புள்ள தங்கம் சுங்கத்துறையினரால் பறிமுதல்

Posted On: 01 DEC 2019 5:44PM by PIB Chennai

சனிக்கிழமையன்று (30.11.2019) பாங்காக்கிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னை வந்த, மேற்குவங்க மாநிலம் ஹூக்ளியைச் சேர்ந்த ஷேக் முகமது மைம் (23) என்பவரை, விமான நிலைய வெளியேறும் பகுதியில், விமான புலனாய்வுப் பிரிவு சுங்கத் துறை அதிகாரிகள் வழிமறித்தனர். அவர் எடுத்துவந்த சக்கரம் பொருத்தப்பட்ட பெரிய சூட்கேசுக்குள் வைத்து எடுத்து வரப்பட்ட சக்கரம் பொருத்தப்பட்ட சிறிய சூட்கேஸ் மற்றும் கையில் எடுத்துவரப்பட்ட மற்றொரு சூட்கேஸ் உள்ளிட்ட உடமைகளை அதிகாரிகள் ஆய்வு செய்த போது, 24 கேரட் தூய்மையான 12 தங்கக்கம்பி உருளைகள், சூட்கேஸின் சக்கரங்களில் பதுக்கி கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, 203 கிராம் எடையுள்ள ரூ.8 லட்சம் மதிப்புள்ள இந்த தங்கக்கம்பிகள்  பறிமுதல் செய்யப்பட்டது.

     மேலும் அந்த நபரிடம் நடத்திய சோதனையில், தங்கக் கட்டிகளை ரப்பரால் சுற்றி, அதனை அவரது உள்ளாடைக்குள் இருந்த, சானிடரி நாப்கினுக்குள் வைத்து கடத்தி வந்தது கண்டறியப்பட்டது.  இதையடுத்து, 270 கிராம் எடையுள்ள ரூ.10.6 லட்சம் மதிப்புள்ள அந்த தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.  மொத்தத்தில் 413 கிராம் எடையுள்ள ரூ.18.6 லட்சம் மதிப்புள்ள தங்கம், சுங்கவரிச் சட்டம் 1962-ன்கீழ் பறிமுதல் செய்யப்பட்டது.  இதுகுறித்து, தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத் துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

*****



(Release ID: 1594426) Visitor Counter : 77


Read this release in: English