வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
மத்திய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறை முதன்முறையாக தேசிய புதுமைத் தொழில் விருதுகள் 2020-க்கு விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது
Posted On:
30 NOV 2019 12:42PM by PIB Chennai
மத்திய தொழில் துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக துறை முதன்முறையாக தேசிய புதுமைத் தொழில் விருதுகளை அறிவித்துள்ளது. இதற்கு டிசம்பர் 31, 2019 வரை விண்ணப்பங்களை அளிக்கலாம்.
இந்த விருதுகள் 35 பிரிவுகளில் வழங்கப்பட உள்ளன. இவை வேளாண்மை, கல்வி, தகவல் தொழில்நுட்பம், எரிசக்தி, நிதி, உணவு, சுகாதாரம், தொழில் துறை 4.0, விண்வெளி, பாதுகாப்பு, சுற்றுலா, நகர்ப்புற சேவைகள் போன்ற 12 பெருந்துறைகளாகப் பகுக்கப்பட்டுள்ளன. இவை தவிர ஊரகப் பகுதிகளிலும் பெண் தொழில் முனைவோரிடையேயும் தாக்கத்தை ஏற்படுத்தும் கல்வி நிறுவனங்களுக்கான 3 சிறப்பு விருதுகளும் வழங்கப்படும்.
ஒவ்வொரு துறையிலும் தெரிவு செய்யப்படும் புதிய தொழில் நிறுவனத்திற்கு ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும். இதில் வெற்றி பெறுபவர்களும் இரண்டாம் இடத்தை பெறும் 4 பேரும் பணி ஆர்டர்கள் பெறுவதற்குத் தங்களின் புதிய திட்டங்களை சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் வழங்க வாய்ப்பு அளிக்கப்படும். மேலும் தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடைபெறும் புதிய தொழில் முயற்சிகள் சம்பந்தமான நிகழ்வுகளில் பங்கேற்கவும் முன்னுரிமை வழங்கப்படும்.
புதிய தொழில் தொடங்குவதற்குத் திட்டங்களை வகுத்துத் தருதல், இத்தகைய பணிகளைத் துரிதப்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் தெரிவு செய்யப்படுவோருக்கு தலா 15 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்படும்.
***
(Release ID: 1594339)
(Release ID: 1594368)
Visitor Counter : 137