சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
தேசிய நெடுஞ்சாலை எண். 744 பெரிய துறைமுகங்களுடன் இணைப்பு
Posted On:
28 NOV 2019 1:44PM by PIB Chennai
துறைமுக இணைப்புத் திட்டத்தின்கீழ், மதுரை மாவட்டம் திருமங்கலத்திலிருந்து கொல்லம் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண்-744-ஐ, கொல்லம் துறைமுகத்துடன் இணைக்கும் 3 கிலோமீட்டர் தூர சாலையை அகலப்படுத்தும் பணி, பாரத் மாலா பரியோஜனா திட்டத்தின் முதற்கட்டத்தில் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்தப் பணி தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலமாக மேற்கொள்ள ஏதுவாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.
மதுரையிலிருந்து தூத்துக்குடி வரையிலான தேசிய நெடுஞ்சாலை எண்.38 (பழைய எண் - என்.ஹெச் 45-பி) ஏற்கனவே பி.ஓ.டி (சுங்கம்) திட்டத்தின்கீழ், நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டு, அனைத்துப் பணிகளும் 2011 ஆம் ஆண்டே முடிக்கப்பட்டு விட்டதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி, மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
*****
(Release ID: 1594048)