உள்துறை அமைச்சகம்
நிலச்சரிவுகள் ஆபத்தைக் குறைத்தல் மற்றும் தடுத்தல் பற்றிய முதலாவது சர்வதேச மாநாடு நாளை நடைபெறுகிறது – உள்துறை இணையமைச்சர் திரு.ஜி.கிஷன்ரெட்டி தொடங்கி வைக்கிறார்
Posted On:
27 NOV 2019 2:48PM by PIB Chennai
நிலச்சரிவுகள் ஆபத்தைக் குறைத்தல் மற்றும் தடுத்தல் பற்றிய முதலாவது சர்வதேச மாநாடு நாளை புதுதில்லியில் நடைபெறுகிறது. உள்துறை இணையமைச்சர் திரு.ஜி.கிஷன்ரெட்டி இதனைத் தொடங்கி வைக்கிறார். இந்த வகையில் நாட்டிலேயே முதன் முறையாக நடைபெறும் இந்த மாநாட்டிற்குப் பேரிடர் மேலாண்மைக்கான தேசிய நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. மலைப்பாங்கான மாநிலங்களில் பேரிடர் மேலாண்மைக்கு இந்த மாநாடு பெரிதும் பயனுடையதாக இருக்கும்.
சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் / அமைப்புகள் / பல்கலைக்கழகங்கள் / துறைகள் உள்ளிட்டவற்றையும் விவாதங்கள் நடத்துதல், நடைமுறை ரீதியில் பயன்படும் அறிவையும், அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ளுதல் ஆகியவற்றுக்கு நிபுணர்களையும் ஒருங்கிணைப்பது இந்த மாநாட்டின் நோக்கமாகும். மேலும் நிலச்சரிவுகள் ஆபத்தைக் குறைக்கவும், தடுக்கவும் தேசிய மற்றும் சர்வதேச நிலையில் புதிய கண்டுபிடிப்புகள் பற்றியும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும்.
******
(Release ID: 1593868)
Visitor Counter : 163