தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
தொழிலுறவு சட்ட மசோதா 2019-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Posted On:
20 NOV 2019 10:36PM by PIB Chennai
பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், தொழிலுறவு சட்டம் 2019-ஐ நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது.
பயன்கள்
இரண்டு உறுப்பினர் தீர்ப்பாயத்தை (ஒரு உறுப்பினருக்குப் பதிலாக) அமைத்து, சில முக்கிய வழக்குகளில் கூட்டாக தீர்ப்பு வழங்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்படும். மற்ற வழக்குகளில் ஒற்றை உறுப்பினரே தீர்ப்பளிக்கலாம். இதன்மூலம், வழக்குகளுக்கு விரைந்து தீர்வுகாண முடியும்.
தற்போதுள்ள அம்சங்களை (பணிநீக்கம் போன்றவை தொடர்பாக) மென்மைப்படுத்துதல். நூறு ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள் பணிநீக்கத்துக்கு உரிய அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்ற அம்சத்தில் மாற்றமில்லை. அதேசமயம், அறிவிக்கை மூலம் அளவை மாற்றுவதற்கான சரத்து சேர்க்கப்பட்டுள்ளது.
மறுதிறன் நிதியை, தொழிலாளர்களுக்கு கடன் வழங்க பயன்படுத்திக் கொள்ள வகை செய்யப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்புக்கு காலவரம்பு நிர்ணயித்தல், நோட்டீஸ் காலம், பணிநீக்கத்தின் போது இழப்பீடு வழங்குதல் ஆகியவற்றுக்கு இது பொருந்தாது.
அபராதம் விதிப்பது போன்ற விஷயத்தில் அரசு அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்படுவதால், தீர்ப்பாயத்தின் சுமை குறையும்.
*****
(Release ID: 1592639)
Visitor Counter : 70