PIB Headquarters

சென்னைத் துறைமுகத்தில் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் திறந்து வைக்கப்பட்டன

Posted On: 14 NOV 2019 6:44PM by PIB Chennai

மத்திய கப்பல் துறை (தனி பொறுப்பு), ரசாயனம்  மற்றும் உரத்துறை இணையமைச்சர் திரு. மன்ஷுக் எல் மண்டாவியா, சென்னை துறைமுகத்திற்கு இன்று (14.11.2019) வருகை தந்து, சென்னைத் துறைமுகத்தின் ​ சரக்கு கையாளும் திறனை அதிகரிப்பதற்காக அமைக்கப்பட்ட பல உள்கட்டமைப்பு வசதிகளை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

  1. மருதம், எண்ணெய் கசிவு மீட்புக்  கப்பல் அர்ப்பணிப்பு,

சென்னைத் துறைமுகத்தின் எண்ணெய் கசிவு மீட்புத் திறனை அதிகபடுத்துவதற்காக, தேசிய எண்ணெய் கசிவு பேரழிவு செயல் திட்டப் படி டயர்1 எண்ணெய் கசிவை சமாளிக்கும் விதமாக ‘மதுரம்’ கப்பல் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இக்கப்பல் 21.04 மீ நீளமும் 6.50மீ அகலமும் 1.70மீ டிராப்ட் வசதியும் கொண்டுள்ளது மற்றும் எண்ணெய் கசிவை சமாளிக்க பல்வேறு கருவிகள் இதில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.14 கோடியாகும்.

  1.  60டி பொலார்ட் புல் கடலில் செலுத்தப்படும் இழுவை கப்பல் அர்ப்பணிப்பு

இந்திய கடலோரச் சொத்துகள் மற்றும் கடல்சார் சுற்றுச் சூழலை காக்கும் விதமாக மத்திய அரசு கப்பல் துறை இயக்ககத்தின் மூலமாக அவசரகால இழுவைக் கப்பல்களை நிறுவியுள்ளது. இதற்கு முன்பாக அவசர கால இழுவைக் கப்பல்களை முறையாக பயன்படுத்த முடியாத நிலையிருந்தது. அதைத் தவிர்க்கும் விதமாக கிழக்கில் சென்னைத் துறைமுகமும், மேற்கில் மும்பைத் துறைமுகமும் தினசரி துறைமுக வேலைகளுக்கு இக்கப்பல்களை பயன்படுத்தவும், அவசரகாலத்தில் உடனடியாக அனுப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னைத் துறைமுகம், ஓசன் ஸ்பார்கில் லிட் நிறுவனம், ரூ.58 கோடி மதிப்பில், 5 ஆண்டுகளுக்கு ஒரு 60டி பொலார்ட் புல் கடலில் செலுத்தப்படும் இழுவை கப்பலை நிறுவக் கோரியுள்ளது

  1. கோஸ்டல் பர்த் துவக்கம்

கடற்சார் வர்த்தகத்திற்கு சுங்கம் மற்றும் குடியுரிமை சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் தடையாக இல்லாதவாறு, இந்திய அரசு தனிப்பட்ட கப்பல் முனையத்தை திறக்க முடிவுசெய்துள்ளது. அதன்படி சென்னைத் துறைமுகம் 260மீ நீளம், 18ம் அகலம் மற்றும் (-) 9மீ சிடி ஆழமும் கொண்ட கப்பல் முனையத்தை  16,000சமீ பரப்பளவுள்ள நிலப்பரப்புடன் நிறுவியுள்ளது. இது பாரதி டாக்கின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இது ஆண்டுக்கு 1 மில்லியன் டன் சரக்கு கையாளப்படும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.

  1. மேல்நிலை சேமிப்புக் கிடங்குகள் அர்ப்பணிப்பு

11.32 ஹெக்டேர் பரப்பளவுள்ள சிமெண்ட் கான்கிரீட் நடைமேடையுடனான பல்நோக்கு சேமிப்புக் கிடங்குகள் நிறுவப்பட்டு அர்ப்பணிக்கப்பட்டன. இக்கிடங்குகளில் மின்சாரம் ஒளியூட்டும் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை கார்கள் உள்பட்ட ஏற்றுமதி இறக்குமதி சரக்குகளைக் கையாள உதவும்.

 

  1. பசுமைத் துறைமுகத் திட்டத்தின் கீழ் மரங்கள் நடுதல்.

சென்னைத் துறைமுகத்தில் பசுமைப் பகுதியை அதிகரிக்கும் விதமாக 2115 மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. 6 அடி உயரமுள்ள இந்த வளர்ந்த மரக்கன்றுகள் 3மீ இடைவெளியில் மார்ஷலிங்க் யார்ட் பகுதியில் நடப்படும்.

  1. ரேடியோ அதிர்வெண் அடையாளத்தின் (RFID) அடிப்படையிலான ஆன்லைன் ஹார்பர் என்ட்ரி பெர்மிட் சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த நடைமுறையின் படி துறைமுகத்திற்குள் நுழைபவர்கள் இண்டர்நெட் மூலமாகவே அனுமதிக்கு விண்ணப்பிக்கமுடியும். தனிப்பட்ட அடையாளமும் கடவுச் சொல்லும் கொடுக்கப்படும். அதன்மூலம் நுழைவு அனுமதி விண்ணப்பித்துப் பெறலாம்.. இதன் மூலம் நேரம் மிச்சமாவதுடன் நுழைவாயிலில் சரக்குப் பெட்டிகள் கையாளப்படுவதும் சுலபமாக்கப்படும்.

  1. ஒருங்கிணைந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டது

சென்னைத்துறைமுகத்தில் 2006 ஆம் ஆண்டு சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டன. 82 கேமராக்களும் 47 டிவி மானிடர்களும் கொண்ட அமைப்பு சென்னைத் துறைமுகத்தில் கமெண்டண்ட், சி. ஐ. எஸ் எப் அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ளது. இது 90 நாட்கள் சேமிப்பு வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது.

  1. முறையான இதயம் மற்றும் நீரிழிவு சம்பந்தப்பட்ட நோய் கண்டறியும் திட்டம்

இதய மாற்றும் நீரிழிவு சம்பந்தப்பட்ட நோய்கள் மிகுந்து வருவதன் காரணமாக சென்னைத் துறைமுக தொழிளாளர்களுக்கான விழிப்புணர்வு மற்றும் நோய் கண்டறியும் ஒரு தொடர் திட்டத்தை சென்னைத் துறைமுக மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் பலதரப்பட்ட தேவைப்படும் தொழிலாளர்களுக்கு தொடர்ந்த முறையான கண்காணிப்பும் சிகிச்சையும் வழங்கப்படும்.

 

இந்நிகழ்வைத் தொடர்ந்து துறைமுக தலைவர், அதிகாரிகள் மற்றும் துறைமுகம் சார்ந்த அனைத்து தரப்பினரோடும் துறைமுகத்தின் செயல் திறன் பற்றி அமைச்சர் ஆலோசனை நடத்தினார் என்று சென்னை துறைமுகத்தின் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

**************



(Release ID: 1591657) Visitor Counter : 135


Read this release in: English