நிதி அமைச்சகம்

நிதியமைச்சர் தலைமையில் நிதி நிலைத்தன்மை மற்றும் மேம்பாட்டு கவுன்சில் கூட்டம்

Posted On: 07 NOV 2019 4:36PM by PIB Chennai

நிதி நிலைத்தன்மை மற்றும் மேம்பாட்டு கவுன்சிலின் 21-வது கூட்டம், மத்திய நிதி & கம்பெனி விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமையில், புதுதில்லியில் இன்று (07.11.2019) நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், ரிசர்வ் வங்கி ஆளுநர் திரு சக்திகாந்த தாஸ், பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் திரு அதானு சக்ரவர்த்தி, நிதித்துறைச் செயலாளர் திரு ராஜீவ்குமார், கம்பெனி விவகாரங்கள் துறை செயலாளர் திரு அஜய் பூஷன் பாண்டே, வருவாய்து துறை செயலாளர் திரு அஜய் பிரகாஷ் ஷானி, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி வி சுப்பிரமணியன், தலைமைப் பொருளாதார ஆலோசகர் திரு அஜய் தியாகி, பங்கு பரிவர்த்தனை வாரியத்தலைவர் திரு சுபாஷ் சந்திர குந்தியா, காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு வாரியத்தின் தலைவர் டாக்டர் எம் எஸ் சாஹு, திவால் மற்றும் நொடித்துப்போதல் வாரியத்தின் தலைவர் திரு. ரவி மிட்டல், ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு வாரியத்தின் தலைவர் உள்ளிட்ட மத்திய அரசின் நிதித்துறை சார்ந்த பல்வேறு அமைப்புகளின் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தின் போது, சர்வதேச மற்றும் உள்நாட்டு  பேரியல் பொருளாதார நிலைமை  மற்றும்  நிதி நிலைத்தன்மை, மற்றும் பாதிப்புக்கு ஆளாகக் கூடிய பல்வேறு அம்சங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

----


(Release ID: 1590902) Visitor Counter : 170