PIB Headquarters

சென்னை விமான நிலையத்தில் ஏர் இண்டியா விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.2.24 கோடி மதிப்புள்ள 5.6 கிலோ எடையுள்ள தங்கம் சுங்கத் துறையினரால் பறிமுதல்

Posted On: 05 NOV 2019 6:32PM by PIB Chennai
Press Release photo

துபாயில் இருந்து சென்னை வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், செவ்வாய்கிழமை (05.11.2019) அன்று, சுங்கத் துறையின் விமான நிலைய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், துபாயில் இருந்து சென்னை வந்த ஏர் இண்டியா நிறுவனத்தின் ஏஐ-906 விமானத்தில் சோதனையிட்டனர். துபாயில் இருந்து வந்த இந்த சர்வதேச விமானம், ஏஐ-440 என்ற எண்ணுடன் உள்நாட்டு விமானமாக மாற்றப்பட்டு, தில்லிக்கு புறப்படவிருந்த நேரத்தில் நடத்தப்பட்ட சோதனையின்போது, கறுப்பு நிற டேப்பால் சுற்றப்பட்ட 4 பண்டல்கள் விமானத்தின் பின்புறக் கழிவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.  இந்த பண்டல்களை பிரித்து பார்வையிட்டபோது, தலா 10 தோலா எடையுள்ள வெளிநாட்டு முத்திரையுடன் கூடிய 48 தங்கக் கட்டிகள் இருப்பது தெரியவந்தது.  ரூ. 2.24 கோடி மதிப்புள்ள 5.6 கிலோ எடையுள்ள இந்த தங்கக் கட்டிகள் கைப்பற்றப்பட்டு, 1962 ஆம் ஆண்டு சுங்கத் துறை சட்ட விதிகளின் கீழ், கேட்பாடற்ற பொருளாக  கருதப்பட்டு  மேல் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத் துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

****************



(Release ID: 1590506) Visitor Counter : 83


Read this release in: English