ரெயில்வே அமைச்சகம்
ரயில்வே துறை ஒத்துழைப்புக்கு இந்திய ரயில்வே அமைச்சகம் ஐரோப்பிய ஆணையத்தின் பொதுப் போக்குவரத்து இயக்ககம் இடையேயான நிர்வாக ஏற்பாட்டிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
Posted On:
23 OCT 2019 5:06PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, ரயில்வே துறையில் நவீனத் தொழில்நுட்பப் பரிமாற்றங்கள் மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்த, இந்திய ரயில்வே அமைச்சகம் - ஐரோப்பிய ஆணையத்தின் பொதுப் போக்குவரத்து இயக்ககம் இடையேயான நிர்வாக ஏற்பாட்டிற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த உடன்பாடு செப்டம்பர் 3, 2019 அன்று கையெழுத்தானது. இதன்படி, ஒத்துழைப்புக்கான சில துறைகள் வருமாறு:
ரயில்வே பாதுகாப்பு
சிக்னல் கட்டுப்பாட்டு முறைகள்
ரயில் போக்குவரத்து அடிப்படைக் கட்டமைப்பு வலைப்பின்னல்கள்
புதிய கண்டுபிடிப்பு மற்றும் டிஜிட்டல் மயம்
சர்வதேச ரயில்வே மாநாடுகள் மற்றும் அமைப்புகளின் அனுபவப் பகிர்வு
பொருளாதார, சமூக, சுற்றுச்சூழல் அம்சங்கள் உள்ளிட்ட ரயில்வேயின் நீடித்தக் கொள்கைகள்
*****
(Release ID: 1588905)
Visitor Counter : 114