பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களுக்கு நிர்வாக சீர்திருத்தம் மற்றும் மக்கள் குறைதீர்ப்புத் துறையின் முன்முயற்சிகள்

இடுகை இடப்பட்ட நாள்: 23 OCT 2019 12:01PM by PIB Chennai

ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களுக்கு நிர்வாக சீர்திருத்தம் மற்றும் மக்கள் குறைதீர்ப்புத் துறையின் முன்முயற்சிகள் குறித்து விவாதிக்க அதிகாரப்பூர்வ தூதுக்குழு அங்கு செல்ல வேண்டும் என்று ஊழியர் நலன், மக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் விரும்பினார்.

     இதன்படி, இந்தத்துறையின் கூடுதல் செயலாளர் திரு.வி.ஸ்ரீநிவாஸ், தலைமையிலான குழு செப்டம்பர் 4-5, 2019-ல் முதன்முறையாகவும், கூடுதல் செயலாளர் திரு.வி.ஷஷாங்க் சேகர் தலைமையிலான குழு செப்டம்பர் 20-21, 2019-ல் இரண்டாவது முறையாகவும், ஜம்மு-காஷ்மீரில் பயணம் செய்தது. திரு.ஷஷாங்க் சேகர் தலைமையிலான குழு மீண்டும் ஒருமுறை அக்டோபர் 15-16, 2019-ல் அங்கு சென்றிருந்தது.  

ஜம்மு-காஷ்மீர் முழுவதும் இ-அலுவலகத் திட்டத்தை அமலாக்குவது, திறன் கட்டமைப்பு / ஜம்மு-காஷ்மீர் அலுவலர்களுக்குப் பயிற்சி, பேரிடர் நிர்வாகம் குறித்த மாநாடு ஆகியவை பற்றி இந்தக் குழு அப்போது விவாதித்தது. 16.10.2019 அன்று ஆளுநரின் ஆலோசகர் திரு.கே.கே.ஷர்மா நடத்திய பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்திலும், இந்தக் குழு பங்கேற்றது.  பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்த ஆலோசகர்கள், பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முயற்சி மேற்கொண்டனர்.

     பிரதமர் விருதுக்கான புதிய கண்டுபிடிப்புப் பிரிவில் தரப்பட்டுள்ள 11 விண்ணப்பங்கள் அடிப்படையில் வெற்றிக் கதைகளை விரிவாக எழுதுமாறு ஜம்மு-காஷ்மீர் அரசுக்கு இந்தக் குழு வேண்டுகோள் விடுத்தது.  இதன்மூலம், குறைந்த உறுப்பினர்களுடன் அரசு அதிகபட்ச நிர்வாகம் என்ற சிறப்புக் கருத்தினை வேகமாக பரவச் செய்யமுடியும்.

     இந்தக் குழுவினர் ஜம்முவில் நவம்பர் 30, 2019 அன்று பேரிடர் நிர்வாகம் குறித்த இரண்டு நாள் மாநாட்டிற்குத் திட்டமிட்டுள்ளனர்.

*****


(வெளியீட்டு அடையாள எண்: 1588813) வருகையாளர் எண்ணிக்கை : 181
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali