ஊரக வளர்ச்சி அமைச்சகம்

சரஸ் எனும் வாழ்வாதாரத் திருவிழா இந்தியா கேட் வளாகத்தில் நடைபெறுகிறது (அக்டோபர் 10 – 23,2019)

प्रविष्टि तिथि: 11 OCT 2019 11:24AM by PIB Chennai

மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் சார்பில் தீன்தயாள் நலிவுற்றோர் உதவித் திட்டம் – தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் முன்முயற்சியில் சரஸ் எனும் வாழ்வாதாரத் திருவிழா இந்தியா கேட் வளாகத்தில் நடைபெறுகிறது. அக்டோபர் 10-ஆம் தொடங்கிய இந்த விழா 23-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இருப்பினும், மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர், முறைப்படி 12.10.2019 அன்று  மாலை ஐந்து மணிக்கு விழாவைத் தொடங்கி வைப்பார்.

     ஊரகப் பகுதிகளில் உள்ள மகளிர் சுயஉதவிக்குழுக்கள் உற்பத்தி செய்த பொருட்களை சந்தைப்படுத்துவதும், அவர்களின் திறன்களை வெளிப்படுத்துவதும் ஒட்டுமொத்தமாகக் கொள்முதல் செய்வோருடன் தொடர்புகளை ஏற்படுத்துவதும் இந்த விழாவின் நோக்கமாகும். இதில் 29  மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து  சுமார் 500 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் பங்கேற்கின்றன.  200-க்கும் அதிகமான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.  கைவினைப் பொருட்கள், கைத்தறித் துணிகள், இயற்கை உணவுகள் மாநில வகை உணவுகள், இந்தக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.  

     தமிழ்நாட்டிலிருந்து காஞ்சிபுரம் சேலைகள், ஆந்திராவிலிருந்து கலம்காரி சேலைகள், தெலங்கானாவிலிருந்து போச்சம்பள்ளி சேலைகள் போன்று பல்வேறு மாநிலங்களின் தனித்தன்மையான சேலைகளும் காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. இவை தவிர கைவினைப்பொருட்கள், ஆபரணங்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள், போன்றவையும் விற்பனைக்கு உள்ளன.


(रिलीज़ आईडी: 1587830) आगंतुक पटल : 164
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali