பாதுகாப்பு அமைச்சகம்

லெப்டினன்ட் ஜெனரல் எம் எம் நரவானே ராணுவ துணைத் தலைமை தளபதியாக பொறுப்பேற்பு

प्रविष्टि तिथि: 01 SEP 2019 10:23AM by PIB Chennai

லெப்டினன்ட் ஜெனரல் எம் எம் நரவானே ராணுவ துணைத் தலைமை தளபதியாக 01 செப்டம்பர், 2019  அன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதுவரை இப்பொறுப்பில் இருந்த லெப்டினன்ட் ஜெனரல் தேவராஜ் அன்பு, 31, ஆகஸ்ட் 2019-உடன்  பணி ஓய்வு பெற்றதையடுத்து, இவர் இப்பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு இவர், இந்திய ராணுவத்தின் கிழக்கு பிராந்திய படைப்பிரிவின் தளபதியாக பணியாற்றி வந்தார்.

 தேசிய பாதுகாப்புப்படை அகாடமி மற்றும் இந்திய ராணுவ அகாடமியில் பயின்றவரான லெப்டினன்ட் ஜெனரல் நரவானே, ராணுவத்தின் 7-வது பட்டாலியனான சீக்கிய தரைப்படைப் பிரிவில் ஜூன் 1980-ல் பணியில் சேர்ந்தார். பல்வேறு சவாலான பொறுப்புகளில் திறம்பட பணியாற்றிய அனுபவம் உடையவர் ஆவார். சுமார் நாற்பது ஆண்டுகால ராணுவப் பணிக்காலத்தில், வடகிழக்கு மாநிலங்களிலும், ஜம்மு காஷ்மீரிலும் பணியாற்றியிருப்பதுடன், இலங்கைக்கு சென்ற இந்திய அமைதிகாக்கும் படையிலும் அங்கம் வகித்துள்ளார்.  மியான்மரில் உள்ள இந்திய தூதரக படைப்பிரிவிலும் 3 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.  இவர், தமது சேவைகளுக்காக சேனா பதக்கம்,  விசிஸ்ட் சேவா பதக்கம், அதிவிசிஸ்ட் சேவா பதக்கம், பரம் விசிஸ்ட் சேவா பதக்கம் உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
                                       ----


(रिलीज़ आईडी: 1583787) आगंतुक पटल : 197
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी