சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
தேசிய மருத்துவ ஆணைய மசோதா, 2019-ல் திருத்தங்கள் / மாற்றங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
Posted On:
28 AUG 2019 7:42PM by PIB Chennai
பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக்கு தேசிய மருத்துவ ஆணைய மசோதா 2019-ல் திருத்தங்கள் மற்றும் மாற்றங்கள் குறித்து விரிவாக தெரிவிக்கப்பட்டது. இந்த மசோதாவின் அசல் பதிப்புக்கு கடந்த 2019 ஜூலை மாதம் 17-ந் தேதி அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. அதிகாரப்பூர்வ திருத்தங்களுடன் இந்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடந்த ஜூலை 29 மற்றும் ஆகஸ்ட் 1, 2019 ஆகிய தேதிகளில் நிறைவேறியது.
நாடாளுமன்றத்தில் நிறைவேறிய தேசிய மருத்துவ ஆணைய மசோதா 2019-ல் ஜூலை 17, 2019 அன்று அமைச்சரவை ஒப்புதல் அளித்த பதிவில் பின்வரும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு அவை அமைச்சரவைக்கு தெரிவிக்கப்பட்டது:-
- உட்கூறு 4 (1) (சி) – 14 உறுப்பினர்களுக்கு பதிலாக 22 பகுதி நேர உறுப்பினர்கள்.
- உட்கூறு 4 (4) (பி) – 6 உறுப்பினர்களுக்கு பதிலாக 10 உறுப்பினர்கள்.
- உட்கூறு 4 (4) (சி) – 5 உறுப்பினர்களுக்கு பதிலாக 9 உறுப்பினர்கள்.
- உட்கூறு 37 (2) –“படிப்பித்தல் நோக்கத்திற்காகவும்” இறுதியில் சேர்ப்பு.
******
(Release ID: 1583362)
Visitor Counter : 123